மும்பை முன்னாள் காவல்துறை ஆணையர் பரம்வீர் சிங் மீதான வழக்குகளை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு

மும்பை முன்னாள் காவல்துறை ஆணையர் பரம்பீர் சிங்கிற்கு எதிரான அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர் மீதான அனைத்து துறை சார்ந்த விசாரணைகளுக்கும் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பரம்பீர் சிங் மீது மகாராஷ்ட்ரா அரசு தொடுத்த அனைத்து வழக்குகளையும் சிபிஐக்கு மாற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவல்துறையே இவ்வழக்குகளை விசாரிக்க வேண்டும் என்ற மகாராஷ்ட்ர அரசின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. மகாராஷ்டிர முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் காவல்துறை மூலம் … Read more

அருணாசல பிரதேசத்தில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

இடாநகர்: அருணாசல பிரதேசத்தின் பான்கினில் இருந்து தெற்கே இன்று இரவு 9.51 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.   இதனால் ஏற்பட்ட பொருள் இழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.   இதையும் படியுங்கள்…உ.பி முதல்வராக பதவியேற்றார் யோகி ஆதித்யநாத்

தமிழக அரசின் நீட் விலக்கு மசோதா இதுவரை உள்துறை அமைச்சகத்திற்கு வரவில்லை: திமுக எம்.பி. ஆ.ராசாவின் கேள்விக்கு சுகாதார இணையமைச்சர் பதில்..!!

டெல்லி: தமிழக அரசின் நீட் விலக்கு மசோதா இதுவரை உள்துறை அமைச்சகத்திற்கு கிடைக்கவில்லை என்று ஒன்றிய அரசு தெரிவித்திருக்கிறது. மக்களவையில் திமுக எம்.பி. ஆ.ராசாவின் கேள்விக்கு சுகாதார இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் தகவல் தெரிவித்திருக்கிறார். நீட் விலக்கு மசோதா ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அமைச்சகத்திற்கு வந்ததா? என்று ஆ.ராசா கேள்வி எழுப்பியிருந்தார்.

உ.பி.யில் யோகி அமைச்சரவையில் 5 பேர் மட்டுமே பெண்கள்

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில் முதல்வராக மீண்டும் இன்று (வெள்ளிக்கிழமை) யோகி ஆதித்யநாத் பதவி ஏற்றுக்கொண்டார். இவரது அமைச்சரவையின் 52 உறுப்பினர்களில் வெறும் ஐந்து பெண்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். உத்தரப் பிரதேசத்தின் 403 தொகுதிகளில் பாஜக கூட்டணி 273 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதன் பின்னணியில் அக்கட்சிக்கும் அதிகமான எண்ணிக்கையில் பெண்கள் வாக்களித்ததும் ஒரு காரணம். கடந்த 2017-ம் ஆண்டு தேர்தலில் அனைத்து கட்சிகளும் சேர்த்து பெண் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 42 என்றிருந்தது. இந்தமுறை அது 46 … Read more

ஒமைக்ரானை விட மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் புதிய உருமாறிய வகை வைரஸ், 2 ஆண்டுகளில் உருவாகலாம் – இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி

ஒமைக்ரான் வகை கொரோனாவை விட மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் உருமாறிய வகை வைரஸ், அடுத்த 2 ஆண்டுகளில் உருவாக அதிக வாய்ப்புள்ளதாக இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி கிறிஸ் விட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து பேசிய அவர், உயிர்களுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படுத்தும் வைரஸ்கள், வாழ்நாள் முழுவதும் மனிதர்களுடன் இருக்கும் என கூறினார். குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் தாக்கக்கூடிய என்டமிக் என்ற நிலையை கொரோனா வைரஸ் எட்டியுள்ளது என்ற கருத்தை நிராகரித்த அவர், வைரஸ் பரவல் நிலையான … Read more

கோவா சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் மார்ச் 29-ம் தேதி தொடக்கம்

கோவா மாநில சட்டசபை தேர்தலில் பாஜக 20 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. ஏற்கனவே, முதல்வராக இருந்த பிரமோத் சாவந்த் பாஜக சட்டசபைக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். வரும் 28-ம் தேதி அன்று கோவா மாநில முதல்வராக பிரமோத் சாவந்த் மீண்டும் பதவியேற்க உள்ளார். இந்நிலையில், மார்ச் 29-ம் தேதி முதல் புதிய சட்டசபையின் இரண்டு நாள் கூட்டத்திற்கு கோவா ஆளுநர் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை அழைப்பு விடுத்துள்ளார். அந்த அமர்வின்போது, புதிய சபாநாயகர் … Read more

கிறிஸ்தவ மிஷனரிகள் குறித்த மனு மதநல்லிணக்கத்துக்கு எதிரான மனுவை விசாரிக்க முடியாது: உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டனம்

புதுடெல்லி: மதநல்லிணக்கத்துக்கு எதிரான மனுவை விசாரிக்க முடியாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து தனது மனுவை மனுதாரர் திரும்பப் பெற்று கொண்டார். கிறிஸ்தவ மதத்தின் சர்ச்சுகள், தங்களுக்கு சொந்தமான நிலங்கள் உள்ளிட்ட சொத்துகளை தவறான வழியில் பயன்படுத்துவதாகவும், அவர்களின் செயல்பாடுகள் தவறான வழியில் இருப்பதாகவும், இஸ்லாமிய கோயில்களை நிர்வகிக்க வக்ஃப் வாரியம் போன்றவை இருப்பது போல், கிறிஸ்தவ மிஷனரிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க வாரியம் அமைக்க வேண்டும் என மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் தரப்பில் … Read more

உள்நாட்டில் சர்க்கரை விலையைக் கட்டுப்படுத்த சர்க்கரை ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடு விதிக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாகத் தகவல்.!

உள்நாட்டில் சர்க்கரை விலையைக் கட்டுப்படுத்த ஆறாண்டுகளுக்குப் பின் மீண்டும் சர்க்கரை ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடு விதிக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உள்நாட்டில் சர்க்கரை விலை உயர்வைத் தடுக்கவும் விழாக்காலத்தில் போதிய அளவு சர்க்கரை வழங்கலை உறுதி செய்யவும் அரசு விரும்புகிறது. அதனால் இந்தப் பருவத்தில் ஏற்றுமதிக்கு 80 இலட்சம் டன் என்னும் அளவை உச்ச வரம்பாக நிர்ணயிக்க உள்ளதாக அரசு மற்றும் சர்க்கரைத் தொழில் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுகுறித்த அறிவிப்பு அடுத்த மாதத் தொடக்கத்தில் வெளியாகும் எனக் … Read more

அம்பேத்கரின் பிறந்த நாளை தேசிய விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும்- மக்களவையில் திருமாவளவன் கோரிக்கை

புதுடெல்லி: மக்களவையில் இன்று நிதி மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று, விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. திருமாவளவன் பேசியதாவது:- அம்பேத்கரின் பிறந்த நாளை தேசிய விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும்.  அம்பேத்கரின் சிந்தனைகளை அனைத்து இந்திய மொழிகளிலும் கொண்டு சேர்க்க வேண்டும். அம்பேத்கர் பவுண்டேசனுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். சமூக நீதியை மக்களிடையே சேர்க்க வேண்டும் என்றால் அம்பேத்கர் பவுண்டேசன் இயங்க வேண்டும்.  பட்டியலின மாணவர்களுக்கான போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் தொகையை தீர்மானித்து மாநிலங்களுக்கு வழங்க … Read more

அம்பேத்கரின் பிறந்த நாளை தேசிய விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும்: மக்களவையில் விசிக எம்.பி. திருமாவளவன் கோரிக்கை

டெல்லி: அம்பேத்கரின் பிறந்த நாளை தேசிய விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்று மக்களவையில் விசிக எம்.பி. திருமாவளவன் கோரிக்கை விடுத்திருக்கிறார். அம்பேத்கரின் சிந்தனைகளை அனைத்து இந்திய மொழிகளிலும் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் திருமாவளவன் குறிப்பிட்டிருக்கிறார்.