’புரோகிதர் இல்லா இந்து திருமணங்களை சட்டபூர்வமாக்கிய முதல் மாநிலம் தமிழகம்’ – திமுக எம்.பி. தமிழச்சி பெருமிதம்

புதுடெல்லி: புரோகிதர் இல்லாமல் நடத்தப்படும் இந்து திருமணங்களை சட்டபூர்வமாக்கிய முதல் மாநிலம் தமிழகம்தான் என மக்களவையில் திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியம் பெருமிதம் கொண்டார். தென் சென்னை தொகுதியின் எம்.பி.யான தமிழச்சி தங்கபாண்டியன், நேற்று நாடாளுமன்றத்தில் பூஜ்ஜிய நேரத்தில் பேசுகையில், “தந்தை பெரியார் முன்னெடுத்த சுயமரியாதை இயக்கம், அண்ணா, கருணாநிதி போன்ற திராவிட பேரறிஞர்களால் சமூக நீதிக்கும், சமத்துவத்துக்கும் அடித்தளமிட்டது. சுயமரியாதை இயக்கத்தின் மூலம் நடந்த முக்கிய சமூக மாற்றங்களில் சுயமரியாதை திருமண முறையும் ஒன்று. வழக்கமான … Read more

இந்தியா ரஷ்யா வர்த்தகத்திற்கு பணப்பரிவர்த்தனைகளைப் பற்றி ரிசர்வ் வங்கி அதிகாரிகள் ரஷ்ய வங்கிகளுடன் ஆலோசனை

ரஷ்யாவுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் பொருளாதாரத் தடை அறிவித்துள்ள நிலையில், இந்தியா ரஷ்யா வர்த்தகத்திற்கு பணப்பரிவர்த்தனைகளைப் பற்றி ரிசர்வ் வங்கி அதிகாரிகள் ரஷ்ய வங்கிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்தியாவில் செயல்படும் VTB, Sberbank போன்ற ரஷ்ய நிதி அமைப்புகள் பணப் பரிமாற்றத்துக்கான புதிய வழிகளை ஆராய்ந்து வருகின்றன. ரஷ்யாவின் ரூபிள், இந்திய ரூபாய் மூலமாக பணப்பரிவர்த்தனை செய்வது குறித்தும் உள்ளூர் ஏற்றுமதியாளர்களும் இறக்குமதியாளர்களும் அவரவர் நாட்டின் பணமாக பெற்றுக் கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.   … Read more

மனைவியை கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டாலும் கற்பழிப்பு தான்- கர்நாடக ஐகோர்ட் தீர்ப்பு

பெங்களூரு: பெங்களூருவை சேர்ந்த ஒரு பெண் தனது கணவர் மீது பெங்களூரு போலீசாரிடம் ஒரு பரபரப்பு புகாரை அளித்தார். அந்த புகாரில் திருமணம் ஆன நாள் முதல் தனது கணவர் பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், நான் கர்ப்பமாக இருந்தபோது என்னுடன் உடலுறவு கொண்டதால் கருச்சிதைவு ஏற்பட்டது என்றும், எனது மகளின் முன்பு உடலுறவு கொள்ள என்னை வற்புறுத்துகிறார் என்றும் கூறி இருந்தார். மேலும் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கிறார் என்றும் கூறினார். இந்த புகாரின்பேரில் பெண்ணின் கணவர் … Read more

சமையல் எரிவாயு விலை உயர்வு: மக்களவையில் அலுவல்களை ஒத்திவைத்து விவாதிக்க காங்கிரஸ் நோட்டீஸ்

டெல்லி: பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு குறித்து மக்களவையில் விவாதிக்கக் கோரி காங்கிரஸ் நோட்டிஸ் அளித்தது. அவை அலுவல்களை ஒத்திவைத்து விட்டு விவாதம் நடத்த கோரி காங்கிரஸ் எம்.பி.மாணிக்கம் தாக்கூர் நோட்டிஸ் அளித்துள்ளார்.

மண்டல் கமிஷனை செயல்படுத்துவதில் முக்கியப் பங்காற்றியவர் வி.ஆனைமுத்து: டெல்லியில் ஆ.ராசா புகழாரம்

புதுடெல்லி: மண்டல் கமிஷனை செயல்படுத்துவதில் முக்கியப் பங்காற்றியவர் வி.ஆனைமுத்து என்று புகழாரம் சூட்டியுள்ளார் திமுக எம்.பி. ஆ.ராசா முன்னதாக நேற்று (மார்ச் 24) பேரறிஞர்.வி.ஆனைமுத்து-முனைவர்.ஆர்.எம். லோகியா நினைவு சொற்பொழிவு, டெல்லியின் அரசியல் நிர்ணய சபையின் துணை சபாநாயகர் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் உரையாற்றிய திமுக எம்.பி. ஆ.ராசா, சமூக-அரசியல் வர்க்கத்தை ஒன்றிணைப்பதிலும் மண்டல் கமிஷனை செயல்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றியதாக ஆனைமுத்துவிற்கு புகழாராம் சூட்டினார். முன்னாள் மத்திய அமைச்சரான ஆ.ராசா தனது உரையில், “பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீடுக்காக ஆனைமுத்துவின் பணி … Read more

டெல்லியின் மூன்று மாநகராட்சிகளை இணைக்கும் சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் இன்று தாக்கல் செய்கிறார் அமித்ஷா

டெல்லியின் மூன்று மாநகராட்சிகளை இணைக்கும் சட்டத்திருத்த மசோதாவை இன்று மக்களவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்ய உள்ளார். டெல்லி மாநகராட்சி மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை சில தினங்களுக்கு முன்பு ஒப்புதல் அளித்துள்ளது.கடந்த 2011 ஆம் ஆண்டில் டெல்லி மாநகராட்சி தெற்கு, வடக்கு, கிழக்கு என மூன்றாகப் பிரிக்கப்பட்டது. டெல்லியில் உள்ளாட்சித் தேர்தல் தேதிகளை அறிவிக்காமல் இருப்பதற்கு இந்த மூன்று மாநகராட்சிகளையும் இணைக்கும் மத்திய அரசின் திட்டம் தான் காரணம் என்று மாநிலத் தேர்தல் ஆணையர் … Read more

இந்தியாவில் தொடர்ந்து குறையும் தினசரி கொரோனா பாதிப்பு: கடந்த 24 மணி நேரத்தில் 1,685 பேருக்கு தொற்று உறுதி; 83.பேர் உயிரிழப்பு..!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5.1 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4.30 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 1,685 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,30,16,372-ஆக உயர்ந்தது.* புதிதாக 83 பேர் இறந்துள்ளனர்.* இதனால், நாட்டின் … Read more

ஐபிசி, சிஆர்பிசி சட்டங்களில் திருத்தம் செய்கிறது மத்திய அரசு: மாநில அரசுகளிடம் ஆலோசனை கேட்பு

புதுடெல்லி: இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் ஆகியவற்றில் திருத்தம் செய்வதற்கான நடைமுறையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதுகுறித்து மாநிலங்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா நேற்று எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: இந்திய தண்டனைச் சட்டம்(ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆர்பிசி), இந்திய சாட்சியச் சட்டம் போன்ற சட்டங்களில் திருத்தம் செய்வதற்கான நடைமுறையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இது தொடர்பாக மாநில ஆளுநர்கள், முதல்வர்கள், யூனியன் பிரதேச நிர்வாகிகள், … Read more

விங்ஸ் 2022 விமானப் போக்குவரத்துத் துறையின் பிரம்மாண்டமான நிகழ்ச்சி.. ஹைதராபாத்தின் பேகம்பேட் விமான நிலையத்தில் தொடங்கியது

விங்ஸ் இந்தியா 2022 என்ற பெயரில் ஆசியாவின் மிகப்பெரிய 5வது விமான கண்காட்சி நிகழ்ச்சி ஹைதராபாதின் பேகம்பேட் விமான நிலையத்தில் தொடங்கியது. 27 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் விமானப் போக்குவரத்துத் துறையின் புதிய தொழில் வாய்ப்புகள், முதலீடுகள், கொள்கை அமைப்பு மற்றும் மாநிலங்களுக்கு இடையே விமான சேவைகள் இணைப்பு போன்ற அம்சங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதற்காக உருவாக்கப்பட்ட பொது அமைப்புதான் விங்ஸ். இதனையொட்டி இன்று விமானப் போக்குவரத்துத் துறையினருக்கும் நிறுவனங்களுக்கும் விருதுகள் வழங்கப்படுகின்றன. Source … Read more

மாருதி சுசூகி நிறுவன புதிய சிஇஓ டேகியூச்சி

புதுடெல்லி: இந்தியாவில் முன்னிலையில் இருக்கும் மாருதி சுசூகி நிறுவனத்தின் நிர்வாக குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், மாருதி சுசூகி இந்தியாவின் நிர்வாக இயக்குனரும் தலைமை செயல் அதிகாரியுமாக ஹிசாஷி டேகியூச்சி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் வரும் 1ம் தேதியில் இருந்து பொறுப்பேற்பார் என்று அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தில் கடந்த 1986ம் ஆண்டு டேக்யூச்சி சேர்ந்தார். இவர், சர்வதேச செயல்பாடுகளில் அனுபவம் மிக்கவர்.