மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக அரசுக்கு எதிராக கண்டன தீர்மானம்: கர்நாடக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது

பெங்களூரு: மேகேதாட்டு அணை விவகாரத்தில் தீர்மானம் நிறைவேற்றிய‌ தமிழக அரசுக்கு எதிராக, கர்நாடக சட்டப்பேரவையில் கண்டன தீர்மானம் நிறை வேற்றப்பட்ட‌து. கர்நாடக மாநிலத்தில் உள்ள மேகேதாட்டுவில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் கடந்த 21-ம்தேதி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தகர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை,‘தமிழக அரசின் தீர்மானம் அரசியல‌மைப்புச் சட்டம் மற்றும் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. கர்நாடகாவுக்கு எதிரான தீர்மானம் சட்ட விரோதமானது’ என விமர்சித்தார். இதுகுறித்து … Read more

பிர்பும் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தார் மம்தா பானர்ஜி.. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ 5லட்சம் காசோலை..

மேற்கு வங்கத்தில் பிர்பும் மாவட்டத்தில் குழந்தைகள் ,பெண்கள் உள்ளிட்டோர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவ இடத்துக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் அளித்தார். பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் 5 லட்சம் ரூபாய் நிவாரணத்துக்கான காசோலையை அவர் வழங்கினார். எரிக்கப்பட்ட வீடுகளைக் கட்டுவதற்கு 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும் மமதா பானர்ஜி அறிவித்தார். ஆளும் கட்சி பிரமுகர் பாது சேக் என்பவரின் படுகொலையைக் கண்டித்து வெடித்த வன்முறையில் பல வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. … Read more

போலி கொரோனா இறப்பு சான்றிதழ் மூலம் நிவாரணம் 4 மாநிலங்களில் விசாரணை: ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி

புதுடெல்லி: கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் இழப்பீடு தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சில மாநிலங்களில் கொரோனா இறப்பு எண்ணிக்கைக்கும், இழப்பீடு கேட்டு விண்ணப்பித்தோர் எண்ணிக்கைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் நிலவியது. விசாரணையில், போலி கொரோனா இறப்பு சான்றிதழ் வழங்கி இழப்பீடுக்கு விண்ணப்பித்தது தெரிந்தது. இதனால், இந்த விவகாரத்தை ஒன்றிய அரசின்  விசாரணை அமைப்புக்களை கொண்டு விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. … Read more

டெல்லி மாநகராட்சிகளை இணைக்கும் மசோதா – மக்களவையில் அமித்ஷா இன்று தாக்கல் செய்கிறார்

புதுடெல்லி: கடந்த 2011-ம் ஆண்டில் டெல்லி மாநகராட்சி, தெற்கு டெல்லி, வடக்கு டெல்லி, கிழக்கு டெல்லி என 3 மாநகராட்சிகளாக பிரிக்கப்பட்டன. மூன்று மாநகராட்சிகளிலும் அடிப்படை பணிகளில் தொய்வு, ஊழியர்களுக்கு சரியான தேதியில் சம்பளம் கொடுக்க இயலாமை போன்ற நிர்வாக சிக்கல்கள் ஏற்பட்டன. இதையடுத்து, இந்தச் சிக்கல்களை தீர்க்க 3 மாநகராட்சிகளையும் இணைக்க மத்திய அரசு முடிவு செய்தது. டெல்லியில் உள்ள 3  மாநகராட்சிகளையும் இணைக்கும் சட்டத்திருத்த மசோதா-2022 க்கு மத்திய அமைச்சரவை கடந்த 21 ம் … Read more

பிரகாசமான எதிர்காலத்துக்காக பணியாற்றுங்கள் சுதந்திர தின நூற்றாண்டு விழாவை பொற்காலமாக மாற்ற வேண்டும்: குஜராத் சட்டமன்றத்தில் ஜனாதிபதி பேச்சு

காந்திநகர்:  சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதிநிதிகள் நாட்டின் பிரகாசமான எதிர்காலத்துக்காக பணியாற்ற வேண்டும். சுதந்திர தின நூற்றாண்டு விழாவை பொற்காலமாக மாற்ற வேண்டும் என்று குஜராத் சட்டமன்றத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசினார். நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி ‘ஆசாதி கா அம்ருத் மகோத்சவ்’ என்ற பெயரில் ஓராண்டு கொண்டாட்டம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு முதல் முறையாக குஜராத் சட்டமன்றத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், ‘நாட்டின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் … Read more

கைவினைப் பொருட்கள் தயாரிப்பில் சிறு, குறு தொழில்களை மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? ஒன்றிய அரசுக்கு எம்பி தயாநிதி மாறன் கேள்வி

புதுடெல்லி: கைவினைப் பொருட்கள் தயாரிப்பில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை மேம்படுத்த ஒன்றிய அரசு என்னென்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது? என மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் நாடாளுமன்றத்தில் நேற்று கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு கடந்த 14ம் தேதி முதல் நடந்து வருகிறது. இதில் நேற்று பங்கேற்ற மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், ஒன்றிய அரசின் எழுத்துப்பூர்வமான பதில்களுக்காக பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்: அதன் … Read more

தேர்வுக்கு தயாராவோம் – ஏப்ரல் 1ல் மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி

புதுடெல்லி:  ஒவ்வொரு ஆண்டும் பிரதமர் நரேந்திர மோடி பொதுத்தேர்வு குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் கலந்துரையாடும் தேர்வுக்கு தயாராவோம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.   இந்நிலையில், தேர்வுக்கு தயாராவோம் என்ற நிகழ்ச்சியின் 5-வது பகுதி ஏப்ரல் 1-ம் தேதி காணொஇ வாயிலாக நடைபெற உள்ளது. இதில், பிரதமர் மோடி உலகம் முழுவதும் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் உரையாடவுள்ளார். இதற்காக நடைபெறவுள்ள கட்டுரைப் போட்டிகளில் பங்கேற்பதற்காக சுமார் 15.7 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.  … Read more

முன்னறிவிப்பு இல்லை சீன வெளியுறவு அமைச்சர் இந்தியாவுக்கு திடீர் வருகை

புதுடெல்லி: கிழக்கு லடாக் எல்லையில் சீனா தனது ராணுவத்தை குவித்து ஊடுருவ முயன்றதை தொடர்ந்து, இந்தியாவும் படைகளை குவித்துள்ளது. இதன் காரணமாக, இருநாடுகளுக்கும் இடையேயிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக இந்தியாவுக்கு சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி நேற்று மாலை திடீர் பயணமாக வந்தார். முன்னதாக, ஆப்கானிஸ்தானுக்கும் அவர் முன்னறிவிப்பு இல்லாமல் திடீர் பயணம் சென்றார். அங்கு தலிபான் தலைவர்களை சந்தித்து பேசிய பிறகு, டெல்லிக்கு வந்தார். இன்று அவர் வெளியுறவு … Read more

சில்வர்லைன் ரயில் திட்டம் தொடர்பாக பிரதமர் மோடியுடன் பினராய் சந்திப்பு: அனுமதி கிடைக்கும் என நம்பிக்கை

புதுடெல்லி:  கேரள முதல்வர் பினராய் விஜயன், டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். கேரளாவில் ‘சில்வர்லைன்’ என்ற அதிவேக ரயில் திட்டத்தை நிறைவேற்ற பினராய் முடிவு செய்துள்ளார். ஆனால், இம்மாநிலத்தை சேர்ந்த கட்சிகளும், மக்களும் இதை கடுமையாக எதிர்த்து, போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மோடியை சந்தித்தபோது இந்த ரயில் திட்டத்துக்கு அனுமதி அளிக்கும்படி பினராய் கோரினார். இந்த சந்திப்புக்குப் பிறகு அவர் அளித்த பேட்டியில், ‘சில்வர்லைன் திட்டம் பற்றி பிரதமர் மோடி கவனமாக கேட்டறிந்தார். … Read more

மேற்கு வங்கத்தில் 8 பேர் படுகொலை தீ வைத்து எரிக்கும் முன்பாக கடுமையாக தாக்கிய கும்பல்: பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம், பிர்பூம் மாவட்டத்தில் உள்ள பர்ஷால் கிராமத்தில் பஞ்சாயத்து துணை தலைவராக இருந்த ஆளும் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த பகதூ ஷேக், கடந்த திங்கட்கிழமை படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து, கிராமத்தில் வன்முறை வெடித்தது. வீடுகளுக்கு ஒரு கும்பல் தீ வைத்ததில், 2 சிறுவர்கள், பெண்கள் உட்பட 8 பேர் கருகி பலியாகினர். இந்நிலையில், பர்ஷால் கிராமத்துக்கு நேற்று நேரில் சென்ற முதல்வர் மம்தா பானர்ஜி, உயிரிழந்தோர், கலவரத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து ஆறுதல் … Read more