சர்ச்சைக்குரிய சில்வர்லைன் திட்டம்: அனுமதி கோரி பிரதமர் மோடியுடன் பினராயி விஜயன் சந்திப்பு

புதுடெல்லி: கேரளாவில் கடும் சர்ச்சைக்குள்ளாகியுள்ள சில்வர்லைன் திட்டத்திற்கு ஒப்புதல் பெறுவதற்காக முதல்வர் பினராயி விஜயன் இன்று பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். சில்வர்லைன் திட்டம் என்பது தெற்கில் திருவனந்தபுரத்தையும் வடக்கில் காசர்கோடையும் இணைக்கும் 529.45 கிமீ திட்டம் இது. 11 மாவட்டங்களில் உள்ள 11 ரயில் நிலையங்களை இது இணைக்கும். இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால் ஒருவர் திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோட்டிற்கு நான்கு மணி நேரத்திற்கு குறைவான நேரத்தில் செல்ல முடியும். ஏற்கெனவே இருக்கும் ரயில் பாதைகளை … Read more

2 ஆண்டுகளுக்கு பின் நீக்கப்படுகிறது கொரோனா கட்டுப்பாடு …!

இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக கைவிடலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கட்டுப்பாடுகள் தேவையில்லை என்றாலும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் அஜய் பல்லா அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பி உள்ள கடிதத்தில்,கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்வதில்  ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த மேம்பாட்டை கருத்தில் கொண்டு, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், இனிமேலும் நாடு முழுக்க பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழான நோய் தடுப்பு நடவடிக்கைகளை … Read more

எங்களை டெல்லி போலீசார் தாக்கினார்கள்… மக்களவையில் கேரள எதிர்க்கட்சி எம்.பி.க்கள் புகார்

புதுடெல்லி: கேரளாவில் கே ரெயில் சில்வர் லைன் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சில கிராமங்களைச் சேர்ந்த மக்களும் நிலம் கைகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். கோட்டயம் மாவட்டத்தில் கே ரெயில் திட்டத்திற்கு அதிகாரிகள் நிலம் கையகப்படுத்த சென்ற போது, அவர்களை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் தடியடி நடத்தும் அளவுக்கு நிலைமை மோசமானது.  இந்நிலையில், கே ரெயில் சில்வர்லைன் … Read more

உத்திரப்பிரதேச மாநில முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் மீண்டும் தேர்வு

லக்னோ: உத்திரப்பிரதேச மாநில முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். லக்னோவில் நடந்த எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தில் பாஜக சட்டமன்ற குழு தலைவராக யோகி ஆதித்யநாத் தேர்வு செய்யப்பட்டார். நாளை மாலை நடைபெறும் விழாவில் உத்திரப்பிரதேச மாநில முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்க உள்ளார்.

உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் ஆண்டுக்கணக்கில் தேங்கி கிடக்கும் முக்கிய வழக்குகள்: தீர்வு காண்பது குறித்து சட்ட நிபுணர்கள் விளக்கம்

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் ஆண்டுக்கணக்கில் தேங்கிக் கிடக்கும் முக்கிய வழக்குகளால் சட்ட ரீதியிலான கேள்விகளுக்கு தீர்வு காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் உச்சபட்ச நீதிபரிபாலன அமைப்பான உச்ச நீதிமன்றத்தில் அரசியலமைப்பு சட்ட ரீதியாக எழும் முக்கிய கேள்விகளுக்கும், மதம், இனம்,மொழி, இடஒதுக்கீடு, நீதிமன்றஅதிகாரம், வரி தொடர்பான வழக்குகளுக்கும் தீர்வு காண்பதற்காக 5 நீதிபதிகள், 7 நீதிபதிகள், 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டு, அதன்மூலமாக தீர்வு காணப்பட்டு வருகின்றன. … Read more

மகாராஷ்டிராவில் வைக்கோல் ஏற்றிச் சென்ற லாரியில் திடீர் தீ.. சமயோஜிதமாக சிந்தித்து அருகில் இருந்த அணைக்குள் வாகனத்தை இறக்கிய ஓட்டுநர்.!

மகாராஷ்டிர மாநிலம் பால்கரில் வைக்கோல் கட்டுகளை ஏற்றிச் சென்ற மினி லாரியில் திடீரென தீ பற்றிய நிலையில் சமயோசிதமாக செயல்பட்ட வாகன ஓட்டி மேலும் தீ பரவாமல் இருக்க அருகில் இருந்த அணைக்குள் வாகனத்தை இறக்கினார். பால்கர் பகுதியில் வைக்கோல் கட்டுகளுடன் சென்ற மினி லாரியில் திடீரென தீபற்றியதாக கூறப்படுகிறது. வைக்கோல் கட்டுகளில் பற்றிய தீ வாகனத்தில் பரவாமல் இருக்க சம்யோசிதமாக சிந்தித்த வாகன ஓட்டி அருகில் இருந்த மஸ்வான் அணைக்குள் மினி லாரியை செலுத்தினார். சம்பவத்தில் … Read more

வயிற்று வலியால் பெங்காலி நடிகர் மரணம்

கொல்கத்தா: கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெங்காலி நடிகர் அபிஷேக் சாட்டர்ஜி, நேற்று நள்ளிரவு திடீரென இறந்தார். மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த பெங்காலி நடிகர் அபிஷேக் சாட்டர்ஜி (56), டோலிகஞ்சில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இவருக்கு நேற்று காலை முதல் மிகவும் சிரமப்பட்டு வந்தார். இருந்தும் ரியாலிட்டி ஷோ படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது, மீண்டும் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. அதனால் படப்பிடிப்பை … Read more

ஆசியாவின் மிகப் பெரிய துலிப் மலர்த்தோட்டம்: ஸ்ரீநகரில் பார்வையாளர்களுக்கு திறப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள பிரபல துலிப் மலர்த் தோட்டம் நேற்று பார்வையாளர்களுக்கு திறக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் தலைநகர் நகரில் உலகப் புகழ்பெற்ற தால் ஏரியை ஒட்டி, இந்திரா காந்தி நினைவு துலிப் மலர்த் தோட்டம் உள்ளது. ஆசியாவில் மிகப்பெரிய துலிப் மலர்த் தோட்டமான இது,நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. பல வண்ணங்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட துலிப் மலர்கள் இங்கு வளர்க்கப்படுகின்றன. ஆண்டுதோறும் வசந்த காலத்தில் நடைபெறும் துலிப் திருவிழாவுக்கு, உலகம் முழுவதிலும் … Read more

நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்கு முன்பே 400 பில்லியன் டாலர் சரக்கு ஏற்றுமதி இலக்கை எட்டியது இந்தியா

நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்கு முன்பே 400 பில்லியன் டாலர் சரக்கு ஏற்றுமதி இலக்கை இந்தியா அடைந்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், கொரோனா அலைகளின் தொடர்ச்சியான சவால்கள் இருந்த போதிலும் இந்தியாவின் வர்த்தக செயல்திறன் குறிப்பிட்ட வளர்ச்சியை எட்டியுள்ளதாகக் குறிப்பிட்டார். ஏப்ரல் முதல் பிப்ரவரி வரை பதினொரு மாதங்களுக்கு தொடர்ந்து 30 பில்லியன் டாலருக்கு மேல் ஏற்றுமதி இருந்ததாகக் குறிப்பிட்ட பியூஷ் கோயல் 400 பில்லியன் டாலர் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு … Read more

பீர்பூம் வன்முறை: குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்- மம்தா

மேற்கு வங்காள மாநிலம் பீர்பூம் மாவட்டம் ராம்பூர்ஹத்தில் உள்ள பர்ஷல் கிராமத்தின் துணை தலைவராக இருந்தவர் பாது ஷேக். இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். நேற்று முன்தினம் இரவு பைக்கில் வந்த 4 பேர் ஷேக் மீது வெடிகுண்டு வீசி பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில் படுகாயம் அடைந்த பாது ஷேக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது கொலை காரணமாக அந்த கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. ஒரு கும்பல் வன்முறையில் ஈடுபட்டது.   போக்டுய் … Read more