டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட லாலு மீண்டும் எய்ம்சில் அனுமதி

புதுடெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து லாலு பிரசாத் யாதவ் நேற்று அதிகாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மீண்டும் அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவரும் பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் மாட்டுத்தீவன ஊழல் வழக்குகளில் தொடர்ந்து தண்டனை பெற்று வருகிறார். சமீபத்தில் தொரந்தோ கருவூல முறைகேடு வழக்கில் அவருக்கு 5 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர், ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா சிறையில் … Read more

பீர்பூம் வன்முறை: மம்தா அரசுக்கு நெருக்கடி- குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க பிரதமர் வலியுறுத்தல்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாது ஷேய்க் என்பவர் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்டார்.  இதனையடுத்து, இவரது சொந்த ஊரான பீர்பூம் மாவட்டம் ராம்பூர்ஹாட்டில் உள்ள போக்டுய் கிராமத்தில் வன்முறை வெடித்தது.  ஒரு கும்பல் வீடுகளுக்குத் தீ வைத்தது. இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட எட்டு பேர் எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் காரணமாக அம்மாநிலத்தை ஆளும் மம்தா அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.   இந்த வன்முறைக்கு … Read more

நிர்ணயிக்கப்பட்ட இலக்கிற்கு முன்பாகவே ரூ.30 லட்சம் கோடியை தாண்டியது ஏற்றுமதி: மோடி பெருமிதம்

புதுடெல்லி: ரூ.30 லட்சம் கோடி  ஏற்றுமதி இலக்கை இந்தியா எட்டியதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியா இதுவரை இல்லாத அளவிற்கு முதன்முறையாக ரூ.30  லட்சம் கோடிக்கான (400 பில்லியன் டாலர்) சரக்குகளை ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளது. இந்த இலக்கை எட்ட காரணமான விவசாயிகள், நெசவாளர்கள், சிறுகுறு உற்பத்தியாளர்கள், ஏற்றமதியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். நம்முடைய தற்சார்பு திட்ட பயணத்தில் இது முக்கிய மைல்கல்,’ என்று … Read more

மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது: மக்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர்- காங்கிரஸ் குற்றச்சாட்டு

கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் பகதூர் ஷேக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மேற்கு வங்க மாநிலம் பிர்பூமில் உள்ள ராம்பூர்ஹாட் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஒரு கும்பல் வீடுகளுக்குத் தீ வைத்தது. இதில் எட்டு பேர் எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக அம்மாநில காங்கிரஸ் கட்சி தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.  அதில் அவர் தெரிவித்திருப்பதாவது: மேற்கு வங்காளத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமடைந்து வருவதால், … Read more

பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வுக்கு எதிர்ப்பு மக்களவையில் அமளிக்கு தலைமை வகித்த சோனியா: எதிர்க்கட்சி எம்பி.க்களையும் வழி நடத்தி ஆவேசம்

புதுடெல்லி: பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் 2வது நாளாக நேற்றும் கடும் அமளியில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் மக்களவையில் வழக்கத்திற்கு மாறாக சோனியா காந்தியே நேற்று அனைத்து எதிர்க்கட்சி எம்பி,க்களையும் வழி நடத்தினார். ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, காஸ் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை 2வது நாளாக நேற்றும் அதிகரித்தது. சாமானிய மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் இவ்விவகாரம் நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பியது. பெட்ரோல், … Read more

8 பேர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் – மம்தா

மேற்கு வங்கத்தில் 8 பேர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் பிர்ஹாம் மாவட்டத்தில் உள்ள ராம்புர்ஹாட் கிராமத்தைச் சேர்ந்தவர் பாது ஷேக். திரிணாமூல் காங்கிரஸ் நிர்வாகியான இவர், சில தினங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் சிலரால் பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்யப்பட்டார்.இந்த கொலை சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ராம்புர்ஹாட் கிராமத்தில் நேற்று திரிணாமூல் காங்கிரஸை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் போராட்டம் … Read more

இந்தியா ரூ.30 லட்சம் கோடி அளவிற்கு ஏற்றுமதியில் சாதனை படைத்துள்ளது – பிரதமர் மோடி

இந்தியாவின் ஏற்றுமதி நடப்பு நிதியாண்டில் நாற்பதாயிரம் கோடி டாலர் என்னும் அளவை எட்டியுள்ளதற்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.  பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியா முதன்முறையாக நாற்பதாயிரம் கோடி டாலர் என்னும் ஏற்றுமதி இலக்கை எட்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இது இந்திய மதிப்பில் 30 இலட்சத்து 39 ஆயிரத்து 740 கோடி ரூபாயாகும். இந்தச் சாதனையை எட்டியதற்கு விவசாயிகள், நெசவாளர்கள், சிறுகுறு நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், தயாரிப்பாளர்கள், ஏற்றுமதியாளர்கள் ஆகியோருக்குப் பிரதமர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். … Read more

ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு ரூ.250.60 கோடி ஒதுக்கீடு- மத்திய மந்திரி தகவல்

புதுடெல்லி: பாராளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி இன்று அளித்த பதிலில் தெரிவித்திருப்பதாவது: நாட்டில் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க, ஊட்டசத்து திட்டம் கடந்த 2018ம் ஆண்டு, மார்ச் 8ம் தேதி தொடங்கப்பட்டது. 6 வயது வரை உள்ள குழந்தைகள், வளர் இளம் பெண்கள், கர்ப்பினி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோரின் ஊட்டச்சத்து குறைபாட்டை சரி செய்யும் வகையில் இத்திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. ஊட்டச்சத்து … Read more

நாளை மறுநாள் முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில் யோகி ஆதித்யநாத்துக்கு நோட்டீஸ்: ராஜஸ்தான் நீதிமன்றம் அதிரடி

அல்வார்: நாளை மறுநாள் உத்தரபிரதேச முதல்வராக மீண்டும் பதவியேற்க உள்ள யோகி ஆதித்யநாத்துக்கு வழக்கு ஒன்றில் நோட்டீஸ் அனுப்ப ராஜஸ்தான் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் மல்கேடாவில் கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் 28ம் தேதி பாஜக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் பங்கேற்றார். அப்போது அவர், ‘பஜ்ரங்பாலி என்பது நாட்டுப்புற தெய்வம்; தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்’ என்று கூறியிருந்தார். இவரது பேச்சு பெரும் சர்ச்சையை … Read more

பாலியல் வன்கொடுமையை கணவன் செய்தாலும் அது வன்கொடுமையே – கர்நாடக உயர்நீதிமன்றம்

பாலியல் வன்கொடுமையை கணவன் செய்தாலும் அது வன்கொடுமையே என்று தெரிவித்துள்ள கர்நாடக உயர்நீதிமன்றம் அச்செயலில் ஈடுபட்ட கணவன் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது தனது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கணவன் மீது குற்றம்சாட்டப்பட்ட வழக்கு இன்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனைவி மீது பாலியல் வன்கொடுமையை நிகழ்த்தியது கண்வனாகவே இருந்தாலும், அது பாலியல் வன்கொடுமை குற்றமாகவே கருதப்பட வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். திருமணம் என்பது ஆண்களுக்கு மிருகத்தை கட்டவிழ்த்துவிடுவதற்கான எந்த சிறப்பு உரிமையையும் … Read more