செகந்திராபாத் மரக் கிடங்கில் பயங்கர தீ விபத்து: பிஹாரை சேர்ந்த 11 தொழிலாளர்கள் உயிரிழப்பு
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் தில் மரக்கிடங்கு ஒன்றில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் பிஹாரைச் சேர்ந்த 11 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஹைதராபாத் அருகில் உள்ள செகந்திராபாத் போயகூடா ஐடிஎச் காலனி பகுதியில் பல ஆண்டுகளாக மரக் கிடங்கு ஒன்று செயல்பட்டு வருகிறது. இதின் ஒரு பாதி மரக் கிடங்காகவும் மற்றொரு பாதி பழைய இரும்பு பொருட்களை வாங்கும் மையமாகவும் செயல்பட்டு வந்தது. இங்கு பிஹாரைச் சேர்ந்த 12 தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். … Read more