மின்சார வாகனம், பேட்டரி தயாரிப்பில் இந்தியாவில் சுசுகி நிறுவனம் முதலீடு

மின்சார வாகனம் மற்றும் பேட்டரி தயாரிப்புக்காக இந்தியாவில்  2026-ஆம் ஆண்டுக்குள் 10 ஆயிரத்து 445 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளதாக ஜப்பானின் சுசுகி மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் ஜப்பான் பிரதமர் கிஷிடா மற்றும் பாரத பிரதமர் மோடி ஆகியோர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், குஜராத்தில் 7 ஆயிரத்து 300 கோடி ரூபாய் முதலீட்டில் மின்சார வாகன பேட்டரி உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்படும் எனவும், மேலும் … Read more

கோவா, உத்தரகாண்ட் மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைப்பது தொடர்பாக பிரதமர் மோடி ஆலோசனை

புதுடெல்லி: நடைபெற்று முடிந்த 5 மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகளின் படி, உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 4 மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைகிறது.  உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு பதவியேற்பு விழா வரும் 25ம் தேதி நடைபெறுகிறது. மணிப்பூர் மாநில முதலமைச்சராக பிரேன் சிங்,  பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.   இந்நிலையில் கோவா மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைப்பது தொடர்பாக பிரதமர் மோடி … Read more

ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய கர்நாடக நீதிபதிகளுக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு: முதல்வர் பொம்மை தகவல்

பெங்களூரு: கர்நாடகா பள்ளிகளில் சீருடை தவிர வேறு, ஹிஜாப் உள்ளிட்ட எந்த உடைகளையும் அணியக் கூடாது என கர்நாடகா உயர் நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு அளித்தது. இந்த உத்தரவை பிறப்பித்த நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக, பெங்களூரு விதான சவுதா போலீஸ் நிலையத்தில் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக பெங்களூரு ஆர்டி நகரில் முதல்வர் பசவராஜ் பொம்மை நிருபர்களிடம் கூறியதாவது:கர்நாடகா உயர் நீதிமன்ற … Read more

கோவில் திருவிழாவில் பங்கேற்ற யானை, திடீரென மிரண்டு தலைதெறிக்க ஓட்டம்

கேரள மாநிலம் பாலக்காடு அருகே, கோவில் திருவிழாவில் பங்கேற்றிருந்த யானை, மேலே பாகன்கள் அமர்ந்திருந்த போதே திடீரென மிரண்டு ஓடிய வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன. மங்கரா பகுதியில் உள்ள கோவில் திருவிழாவுக்காக ராமன் என்ற யானை அழைத்துவரப்பட்டது. விழாவின் இறுதி நிகழ்வாக ஊர்வலத்திற்கு தயாராக இருந்த அந்த யானை மீது பாகன், ஒரு சிறுவன் உட்பட 4 பேர் அமர்ந்திருந்தனர். அப்போது யானை மிரண்டு ஓடியது. செல்போனில் எடுக்கப்பட்ட இந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.  … Read more

முடிவுக்கு வந்தது குழப்பம்… மணிப்பூர் முதல்வராக பிரென் சிங் தேர்வு

மணிப்பூர் மாநில முதல்வராக பிரென் சிங் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் கடந்த இரண்டு வாரங்களாக அங்கு நடைபெற்று வந்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 32 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்தது. இதையடுத்து, அக்கட்சி அங்கு விரைவில் ஆட்சியமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மணிப்பூர் முதல்வர் பதவிக்கு மக்கள் செல்வாக்கு பெற்ற பிரென் சிங், பிஸ்வைத் சிங், யும்னாம் கேம்சந்த் ஆகியோர் இடையே … Read more

கண்மண் தெரியாத போதை : உற்சாக நடன ஆட்டத்தில், தன்னை தானே கத்தியால் குத்திக் கொண்ட இளைஞர்..!

மத்திய பிரதேச மாநிலத்தில் மதுபோதையில் நடனமாடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர், தன்னை தானே கத்தியால் குத்திக்கொண்டதை அடுத்து அவர் உயிரிழந்தார். இந்தூரில் ஹோலி கொண்டாட்டத்தின்போது பாடலுக்கு ஏற்ப நடனமாடிக்கொண்டிருந்த கோபால் என்பவர், மதுபோதையில் கையில் வைத்திருந்த கத்தியை வைத்து தன்னுடைய நெஞ்சில் குத்திக்கொண்டார். கத்தி நெஞ்சில் இறங்கியதை அறியாத அந்த இளைஞர், வலி ஏற்பட்டு ரத்தம் கசிந்த பின்பே தன்னை தானே குத்திக் கொண்டதை உணர்ந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக கோபாலை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற … Read more

அசானி புயல் மியான்மர் நோக்கி செல்லும்- வானிலை ஆய்வு மையம் தகவல்

புதுடெல்லி: தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது வடக்கு திசையில் அந்தமான் நிக்கோபார் தீவு வழியாக நகர்ந்து நாளை புயலாக வலுப்பெறக்கூடும் என்று வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. இந்தப் புயலுக்கு அசானி எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அசானி புயல் அந்தமான் தீவுகளில் இருந்து மியான்மர் மற்றும் தெற்கு வங்காளதேச கடற்கரையை நோக்கி நகரும் … Read more

சிவாஜி சிலையை திறக்க எதிர்ப்பு: தெலங்கானாவில் பாஜக – டிஆர்எஸ் தொண்டர்கள் பயங்கர மோதல்

தெலங்கானாவில் சத்ரபதி சிலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் மீது டிஆர்எஸ் தொண்டர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதால் இரு கட்சியினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. தெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு தனிப்பெரும் கட்சியாக விளங்கி வந்த டிஆர்எஸ்-க்கு மாற்று சக்தியாக தற்போது பாஜக உருவெடுத்து வருகிறது. இதனிடையே, தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள போதான் பகுதியில் பாஜக சார்பில் அண்மையில் மராட்டிய மன்னர் … Read more

பீகார் : கள்ளச்சாரயம் குடித்த 18 பேர் பலி

பீகார் மாநிலத்தில் உள்ள 4 மாவட்டங்களில் கள்ளச்சாரயம் குடித்த 18 பேர் உயிரிழந்தனர். அம்மாநிலத்தில் ஹோலி கொண்டாட்டத்தின்போது கள்ளச்சாராயம் குடித்த மாதேபுரா, பாகல்புர், பங்கா, முர்ளிகஞ்ச் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் உயிரிழந்தனர். கடந்த வாரம் பாகல்பூர் மற்றும் கோபால்கஞ்ச் மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து 16 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் பலர் அதற்கு பலியாகி உள்ளனர். கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  Source link

மட்டன் சமைக்க மனைவி மறுப்பதாக கூறி 100க்கு போன் செய்த கணவன்-வீட்டிற்கு படையெடுத்த போலீசார்

தெலங்கானாவில் மனைவி மட்டன் சமைக்கவில்லை என்பதால் தொடர்ச்சியாக 100க்கு டயல் செய்து தொந்தரவு அளித்த கணவன் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள செர்லா கௌராராம் கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன். ஹோலி பண்டிகையையொட்டி தனது மனைவியிடம் மட்டன் சமைத்து தருமாறு கூறியுள்ளார். ஆனால் நவீனின் மனைவி மட்டன் சமைக்க மறுத்துள்ளார். இருவருக்கும் இடையே மட்டன் சமைப்பது தொடர்பாக வாக்குவாதம் நடந்துள்ளது. பண்டிகை நாளில் கூட விரும்பியதை சமைக்கவில்லை என நவீன் கோபம் … Read more