லாட்டரி சீட்டில் கேரளா பெண்ணுக்கு ரூ.44.75 கோடி பரிசு

அபுதாபி: கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த லீனா ஜலால், அபுதாபியில் மனித வள வல்லுநராக பணிபுரிந்து வருகிறார். அங்குள்ள பிக் டிக்கெட் லாட்டரி சீட்டை அவர் வாங்கியிருந்தார்.வாராந்திர குலுக்கல் முறையில் பிப்ரவரி 3 ஆம் தேதி அந்த டிக்கெட்டிற்கு பரிசு கிடைத்தது.  பத்து பேருடன் பரிசுத் தொகையை பகிர்ந்து கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி லீனா ஜலாலுக்கு, 22 மில்லியன் திர்ஹம் பரிசு தொகை கிடைத்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.44 கோடியே 75 லட்சம் ரூபாய் … Read more

விடா முயற்சி விஸ்வரூப வெற்றி நீட் தேர்வில் சாதித்த டீ விற்கும் இளைஞன்: டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் சீட்

கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் டீ விற்கும் இளைஞர் முதல் முயற்சியிலேயே நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளான்.  அசாம் மாநிலம், பஜாலி மாவட்டம், பட்டசர்குர்சி சவுக் பகுதியில் வசிப்பவர் ராகுல்தாஸ் (24). இவரது தந்தை 11 ஆண்டுகளுக்கு முன்பே குடும்பத்தை விட்டு சென்று விட்டார். 2 பிள்ளைகளுடன் வறுமையில் சிக்கி திணறிய ராகுலின் தாய், டீ கடை நடத்தி குடும்பத்தை காப்பாற்றி வந்தார். வறுமை காரணமாக ராகுல் 12ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திக் கொண்டார்.பின்னர், தாய்க்கு உதவியாக டீ … Read more

தமிழ் மொழிக்கு முக்கிய பங்காற்றியுள்ளார் ராமானுஜர்.. – பிரதமர் மோடி பேச்சு

ஹைதராபாத்: வைணவ ஆச்சாரியார் ராமானுஜர் அவதரித்து 1000 ஆண்டு நிறைவுற்றதை கொண்டாடும் வகையில், ஹைதராபாத்தை அடுத்துள்ள முச்சிந்தல் பகுதியில், சின்ன ஜீயர் ஆஸ்ரமத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் மிக பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ள இடத்தில் பத்ம பீடத்தின் மீது 216 அடிஉயரத்தில் ராமானுஜருக்கு பஞ்சலோக சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை இன்று திறந்து வைக்கப்பட்டது. இவ்விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஹைதராபாத் நகருக்கு விமானம் மூலம் வந்தார். ஆனால் பிரதமரை வரவேற்க தெலங்கானா … Read more

திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு செம குட் நியூஸ் சொன்ன தேவஸ்தானம்!

திருமலை திருப்பதிக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தனர். கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக திருப்பதியில் சாமி தரிசனத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் முக்கியமாக கட்டண தரிசனம், இலவச தரிசனம் ஆகியற்றுக்கான டிக்கெட்டுகள் கடந்த பல மாதங்களாக ஆன்லைனில் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன. பிப்ரவரி மாதத்துக்கான 300 ரூபாய் கட்டண தரிசன டிக்கெட்டுகள் ஜனவரி மாத இறுதியில் வழங்கப்பட்டன. ஒரு நாளைக்கு 12 ஆயிரம் டிக்கெட்டுகளஅ வீதம், 28 … Read more

செல்போன் பார்த்துக்கொண்டே தண்டவாளத்தில் தவறி விழுந்த பயணி.. விரைந்து சென்று மீட்ட சிஐஎஸ்எப் வீரர்..! <!– செல்போன் பார்த்துக்கொண்டே தண்டவாளத்தில் தவறி விழுந்த பயணி… –>

டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைமேடையின் விளிம்பில் இருந்து தண்டவாளத்தில் விழுந்த பயணியை மத்தியத் தொழில் பாதுகாப்புப் படைவீரர் ஓடிச் சென்று மீட்ட காட்சி வெளியாகியுள்ளது. சதாரா மெட்ரோ நிலையத்தில் செல்போனைப் பார்த்துக்கொண்டே உலவிய பயணி நடைமேடையின் விளிம்பில் இருந்து கீழே விழுந்தார். எதிர்ப்புற நடைமேடையில் வந்த மத்தியத் தொழில் பாதுகாப்புப் படைவீரர் விரைந்து சென்று தண்டவாளத்தில் இருந்து அந்தப் பயணியைத் தூக்கி நடைமேடையில் ஏற்றிவிட்டார். மெட்ரோ ரயில் வருமுன் பயணியை விரைந்து மீட்ட இந்தக் காட்சியை … Read more

லதா மங்கேஷ்கர் உடல் நிலை சீராக உள்ளது: சகோதரி ஆஷா போஸ்லே தகவல்

மும்பை: இந்தியாவின் இசைக்குயில் என அழைக்கப்படும் இந்தி திரைப்பட உலகின் மூத்த பாடகி லதா மங்கேஷ்கர் தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் பின்னணி பாடல் பாடியுள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், லதா மங்கேஷ்கரின் உடல்நிலை கவலைக் கிடமாக உள்ளதாகவும், மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் எனவும் மும்பை பிரீச்கேண்டி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.  இந்நிலையில் … Read more

ஜாதியை இழிவுபடுத்தி பேசிய வழக்கில் நடிகை முன்முன் தத்தாவுக்கு இடைக்கால முன்ஜாமீன்: பஞ்சாப் – அரியானா ஐகோர்ட் உத்தரவு

மும்பை: குறிப்பிட்ட பிரிவினரின் ஜாதியை இழிவுபடுத்தி பேசிய விவகாரத்தில் நடிகை முன்முன் தத்தாவுக்கு இடைக்கால முன் ஜாமீனை பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றம் வழங்கி உள்ளது. பிரபல ஹிந்தி ‘டிவி’ தொடர் நடிகை முன்முன் தத்தா கடந்த சில மாதங்களுக்கு முன் சமூக வலைதளங்களில் வெளியிட்ட வீடியோ, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில், குறிப்பிட்ட ஜாதியை இழிவுபடுத்தும் வகையில் அவர் பேசியதாக கூறப்படுகிறது. இவ்விவகாரம் பூதாகரமாக வெடித்ததால், குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த சிலர் பல மாநில போலீசாரிடம் … Read more

உ.பி.யின் துறவி முதல்வரான யோகியிடம் 2 துப்பாக்கிகளுடன் ரூ.1.54 கோடி சொத்து: வேட்புமனுவில் தகவல்

புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தின் துறவி முதல்வரான யோகி ஆதித்யநாத்திடன் இரண்டு துப்பாக்கிகளுடன் ரூ.1.54 கோடி மதிப்பிலான சொத்தும் இருப்பது தெரிந்துள்ளது. இந்த தகவல், அவர் போட்டியிடும் கோரக்பூரில் தாக்கல் செய்த மனுவில் வெளியாகி உள்ளது. உ.பி.யில் ஆளும் பாஜகவின் முதல்வரான யோகி, சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் முதல்வர் வேட்பாளராக்கப்பட்டுள்ளார். இதனால், உ.பி.யில் ஆளும் பாஜகவின் முதல்வரான யோகி, முதன்முறையாக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுகிறார். இதற்காக அவர் தான் முறை போட்டியிட்டு வென்ற மக்களவை தொகுதியில் அமைந்துள்ள கோரக்பூர் நகர … Read more

தனியார் கல்லூரிகளில் கட்டணம் குறைப்பு.. தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் மருத்துவக் கல்விக்கான கட்டணங்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் விதிமுறைகளை மாற்றியுள்ளது. இதன்படி, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் 50% இடங்களுக்கு சம்பந்தப்பட்ட மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு இணையான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. அரசு ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்பு இடத்தை பெற்ற மாணவர்களுக்கு இந்த சலுகை கிடைக்கும். சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரியில் அதிகபட்சமாக 50% … Read more

216 அடி உயர ராமானுஜர் சிலை திறப்பு சமத்துவத்திற்கான சிலையை திறந்த பிரதமர்.! <!– 216 அடி உயர ராமானுஜர் சிலை திறப்பு சமத்துவத்திற்கான சிலை… –>

தெலங்கானா மாநிலத்தில் நிறுவப்பட்ட 216 அடி உயர பிராம்மாண்ட ராமானுஜர் சிலையை திறந்து வைத்த பிரதமர் மோடி, ராமானுஜரின் பணியில் தமிழுக்கு முக்கிய இடம் உள்ளதாக குறிப்பிட்டார். வைணவ ஆச்சாரியார் ராமானுஜர் அவதரித்து 1,000 ஆண்டுகள் நிறைவுற்றதை கொண்டாடும் வகையில், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை அடுத்துள்ள முச்சிந்தல் பகுதியில் ‘சமத்துவத்திற்கான சிலை’ என்ற பெயரில் ராமானுஜருக்கு பஞ்சலோக சிலை அமைக்கப்பட்டுள்ளது. சின்ன ஜீயர் ஆஸ்ரமத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் மிக பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ள இடத்தில் உள்ள பீடத்தின் … Read more