ஹனிமூன் கொலை: நரபலி கொடுக்கப்பட்ட ராஜா ரகுவன்ஷி? வெளியான திடுக்கிடும் பின்னணி

Meghalaya Honeymoon Murder Case Latest Update : இந்தூரை சேர்ந்த தம்பதி, மேகாலாயாவிற்கு தேனிலவுக்கு சென்ற நிலையில், கணவர் மட்டும் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இவரை அவரது மனைவியே கொன்றதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் முக்கிய புள்ளியாக உயிரிழந்தவரின் தாயார் கூறுவது பார்க்கப்படுகிறது.  

“பஹல்காம் தாக்குதல் பற்றி நாங்கள் எழுப்பும் 4 கேள்விகளுக்கு பிரதமர் பதில் அளிப்பாரா?” – காங்கிரஸ்

புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாதம் தொடர்பாக நாங்கள் எழுப்பும் 4 கேள்விகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பதில் அளிப்பாரா என்று ஜெயராம் ரமேஷ் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “32 நாடுகளுக்கு அனுப்பப்பட்ட 7 நாடாளுமன்றக் குழுக்களின் உறுப்பினர்களை பிரதமரே இப்போது சந்தித்துவிட்டதால், குறைந்தபட்சம் இப்போதாவது அவர் நாங்கள் முன்வைத்து வரும் இந்த 4 கேள்விகளுக்கு பதில் அளிப்பாரா? 1. … Read more

‘90% மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் 2 பிரச்சினைகள்’ – பிரதமருக்கு ராகுல் கடிதம்

புதுடெல்லி: விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்த 90% மாணவர்களின் கல்வி வாய்ப்புகளுக்குத் தடையாக இருக்கும் இரண்டு முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண பிரதமர் நரேந்திர மோடியை ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஜூன் 10 தேதியிட்டு, காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “தலித், எஸ்டி, இபிசி, ஓபிசி மற்றும் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான குடியிருப்பு விடுதிகளின் நிலைமை மிகவும் பரிதாபகரமானதாக … Read more

பிணையம் இல்லாமல் ரூ. 10 லட்சம் கடன் தரும் அரசு! விண்ணப்பிப்பது எப்படி?

மத்திய அரசு சொந்த தொழில் தொடங்க தனி நபர்களுக்கு ரூபாய் பத்து லட்சம் வரை பாரத பிரதமர் முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் கடன் வழங்குகிறது. இதனை எப்படி பெறலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள். 

“பிரதமர் மோடியின் 11 ஆண்டு ஆட்சி இந்தியாவின் பொற்காலம்” – உ.பி முதல்வர் யோகி பாராட்டு

புதுடெல்லி: பிரதமர் நரேந்திரமோடியின் 11 ஆண்டு கால ஆட்சி இந்தியாவின் பொற்காலம் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து மூன்றாவது முறை நாட்டின் பிரதமராக இருப்பவர் நரேந்திர மோடி. அவர், தனது 11 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்கிறார். இதைப் பாராட்டும் வகையில் நாட்டின் பாஜக ஆளும் மாநிலங்களில் பல முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்த வகையில், பாஜகவின் முக்கிய மாநிலமான உ.பி.யின் 75 மாவட்டங்களிலும் பிரதமர் மோடி ஆட்சியின் சாதனைகளை … Read more

இந்தியர் சுபான்ஷு சுக்லாவை விண்வெளிக்கு அனுப்பும் ஆக்சியம்-4 ஏவுதல் மீண்டும் தள்ளிவைப்பு – காரணம் என்ன?

புளோரிடா: இந்திய விண்வெளி வீரரான கேப்டன் சுபன்ஷு சுக்லாவை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு கொண்டு செல்லும் ஆக்சியம்-4 பயணத்தின் ஏவுதல் இன்று ஐந்தாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டது. ஃபால்கன் 9 ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த ஏவுதல் ஒத்திவைக்கப்பட்டது என்று ஸ்பேஸ்-எக்ஸ் தெரிவித்துள்ளது. இது குறித்து ஸ்பேஸ்-எக்ஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஜூன் 11 புதன்கிழமை, புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் உள்ள லாஞ்ச் காம்ப்ளக்ஸ் 39A (LC-39A)-லிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு … Read more

‘ஆபரேஷன் ஹனிமூன்’ – மேகாலயாவின் 120 போலீஸார் அடங்கிய தனிப்படைகள்

ஷில்லாங்: மேகாலயாவில் தேனிலவுக்கு சென்றபோது கணவர் ராஜா ரகுவன்சி கொல்லப்பட்ட சம்பவத்தில், அவரது மனைவி சோனம் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில், ‘ஆபரேஷன் ஹனிமூன்’ பற்றிய விவரம் வெளிவந்துள்ளது. மத்தியப் பிரதேசத்தின் இந்தூரை சேர்ந்த டிராவல்ஸ் நிறுவன அதிபர் ராஜா ரகுவன்சி (28). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சோனத்துக்கும் (25) கடந்த மே 11-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இருவரும் தேனிலவை கொண்டாட மேகாலயா சென்றனர். கடந்த மே 23-ம் தேதி ராஜாவையும் சோனத்தையும் காணவில்லை. … Read more

இனி 20°C கீழ் ஏசியை வைக்க முடியாது! புதிய விதியை அறிமுகப்படுத்தும் மத்திய அரசு!

New AC Rules: வரும் காலங்களில் ஏசியை 20°C–28°C-க்கு இடையில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற விதியை அமல்படுத்த உள்ளதாக அமைச்சர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.

சித்தராமையா மீதான நில முறைகேடு வழக்கு: ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்

புதுடெல்லி / பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா மீதான நில முறைகேடு வழக்கில் தொடர்புடைய ரூ.100 கோடி மதிப்பிலான 92 அசையா சொத்துகளை முடக்கி அமலாக்கத் துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்குச் சொந்தமான நிலத்தை கையகப்படுத்தியதற்காக, மைசூரு மாநகர மேம்பாட்டுக் கழகம் அவருக்கு மாற்று நிலம் ஒதுக்கியது. கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பை விட, மாற்றாக வழங்கப்பட்ட நிலத்தின் மதிப்பு அதிகமாக இருந்ததால் சர்ச்சை ஏற்பட்டது. இதையடுத்து, சித்தராமையா, அவரது மனைவி பார்வதி … Read more

‘கணவரின் கொலையை நேரில் பார்த்த சோனம்’ – கைதானவர்கள் வாக்குமூலம் | மேகாலயா தேனிலவு கொலை

இந்தூர்: மேகாலயாவில் தேனிலவுக்கு சென்று ராஜா ரகுவன்சி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் அவரது மனைவி சோனம் மற்றும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், தன் கணவர் ராஜா ரகுவன்சி கொலையை சோனம் நேரில் பார்த்ததாக கொலையாளிகள் வாக்குமூலம் தந்துள்ளனர். இதை இந்தூர் குற்றப்பிரிவு காவல் துறை ஏசிபி பூனம் சந்த் யாதவ் தெரிவித்துள்ளார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு இது குறித்து பூனம் சந்த் யாதவ் கூறியுள்ளார். “ராஜா ரகுவன்சியை கொலை செய்ததாக கைது … Read more