மைதேயி இன முக்கிய தலைவர் கைது எதிரொலி: மணிப்பூரில் கலவரம்; இணைய சேவை துண்டிப்பு

மணிப்பூரில் முக்கிய மெய்தி இனத் தலைவர் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவலையடுத்து போராட்டக்காரர்கள் தலையில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்கப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். மணிப்பூரில் அரம்பாய் தெங்கோல் (ஏடி) என்ற மெய்தி அமைப்பின் தலைவர் கனன் சிங் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டார். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மொய்ராங்தெம் அமித்தின் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் அதைத் தொடர்ந்து பிப்ரவரி 2024-ல் மூத்த காவல் அதிகாரி ஒருவர் கடத்தப்பட்ட சம்பவங்களி்ல் கனன் சிங் சந்தேகத்துக்குரிய முக்கிய நபராக … Read more

17 ஆண்டு வாழ்க்கையை அர்ப்பணித்து பாலத்தை கட்டிய ஆந்திர பெண் இன்ஜினீயர்: செனாப் ரயில் பாலம் உருவான கதை

ஆந்திராவை சேர்ந்த பெண் இன்ஜினீயர் மாதவி லதா, தனது 17 ஆண்டு கால வாழ்க்கையை அர்ப்பணித்து உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தை வடிவமைத்து, பிரம்மாண்டமாக கட்டி எழுப்பி உள்ளார். ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தால் பக்கால்- கவுரி பகுதிகளுக்கு இடையே செனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்டு உள்ள புதிய ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் திறந்துவைத்தார். இது, உலகின் மிக உயரமான ரயில் பாலம் ஆகும். பூகம்பம், வெடிகுண்டு தாக்குதலை … Read more

'தொப்பியும் இருக்காது, தாடியும் இருக்காது' முஸ்லீம்களுக்கு அச்சுறுத்தல் – சர்ச்சை பேச்சு

Uttar Pradesh News: உத்தர பிரதேசத்தின் மதுராவில் இந்து மத தலைவர் என கூறிக்கொள்ளும் ஒருவர், இஸ்லாமியர்களை அச்சுறுத்தம் விதமாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 

ராகுல் கருத்து அடிப்படை ஆதாரமற்றது: தலைமை தேர்தல் ஆணையம் கருத்து

மகாராஷ்டிரா தேர்தல் முடிவு குறித்த ராகுல் காந்தியின் கருத்து அடிப்படை ஆதாரமற்றது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், “கடந்த ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றன. இது வரும் பிஹார் தேர்தலிலும் நடக்கும்” என குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மகாராஷ்டிரா தேர்தல் முடிவு குறித்த ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு … Read more

இந்தியாவில் கரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை நெருங்குகிறது

இந்தியாவில் கரோனா பரவல் அதிகரித்து வரும் வேளையில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்குகிறது. இதில் கேரளா மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது மீண்டும் கரோனா வைரஸ் பரவி வருகிறது. இதற்கு உருமாற்றம் பெற்ற எல்எப்.7, எக்ஸ்எப்ஜி, ஜேஎன்.1 ஆகிய புதிய வைரஸ்களும் சமீபத்தில் அடையாளம் காணப்பட்ட என்பி.1.8.1 என்ற துணை திரிபும் காரணமாக உள்ளது. இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சக புள்ளிவிவரப்படி நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் … Read more

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மத்திய அரசு மறுவரையறை செய்துள்ளது: பிரதமர் மோடி

புதுடெல்லி: கடந்த 11 ஆண்டுகளில், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மறுவரையறை செய்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கடந்த 11 ஆண்டுகளில், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மறுவரையறை செய்துள்ளது. தூய்மை இந்தியா மூலம் கண்ணியத்தை உறுதி செய்வதிலிருந்து ஜன் தன் கணக்குகள் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய நிதிச் சேவைகள் வரை பல்வேறு முயற்சிகள் மூலம், நமது … Read more

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் பிரதமர் மோடி மீது நம்பிக்கை உள்ளது: சந்திரபாபு நாயுடு

ஹைதராபாத்: தொகுதி மறுவரையறை விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மீது தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாக ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்ற சந்திரபாபு நாயுடு, இதில் முதல் ஆண்டை ஜூன் 12ம் தேதி நிறைவு செய்கிறார். மக்களவை தொகுதி மறுவரையறையை மேலும் 25 ஆண்டுகளுக்கு கடந்த 2001 ஆம் ஆண்டு பிரதமர் வாஜ்பாய் ஒத்திவைத்தபோது, அதற்கான அரசியலமைப்புத் திருத்தத்தை மேற்கொள்வதில் முக்கிய பங்கு வகித்தவர் சந்திரபாபு நாயுடு. அப்போதைய … Read more

தலையில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு போராட்டம் – மணிப்பூரில் மீண்டும் வன்முறை… ஏன்?

Manipur Fresh Violence: மணிப்பூரில் தற்போது புதிதாக வன்முறை வெடித்திருக்கும் நிலையில், இதன் பின்னணி என்ன என்பதை இங்கு தெரிந்துகொள்ளலாம். 

ஜூன் முதல் டிசம்பர் மாதத்துக்குள் 10 போர்க் கப்பல்கள் கடற்படையில் இணைப்பு

ஜூன் முதல் டிசம்பர் மாதத்துக்குள் 10 போர்க்கப்பல்கள் கடற்படையில் இணைக்கப்பட உள்ளன. இந்திய கடற்படையில் 135-க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் உள்ளன. இதில் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா, ஐஎன்எஸ் விக்ராந்த் ஆகியவை விமானந்தாங்கி போர்க்கப்பல்கள் ஆகும். 20 நீர்மூழ்கிகளும் கடற்படையில் உள்ளன. வரும் 2030-ம் ஆண்டில் இந்திய போர்க்கப்பல்களின் எண்ணிக்கையை 160 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. வரும் 2035-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கையை 200 ஆக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்திய கடற்படைக்காக 3-வது விமானந்தாங்கி போர்க்கப்பலை … Read more

‘நான் இங்கேயே இருந்து விடுகிறேன்’ – நெரிசலில் உயிரிழந்த மகனின் கல்லறையில் தந்தை உருக்கம்

ஹாசன்: கடந்த புதன்கிழமை பெங்களுருவில் ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 11 பேரில் பூமிக் லக்‌ஷ்மண் என்ற இளைஞரும் ஒருவர். அவரது கல்லறையில் இருந்து விலக மனமில்லாத அவரது தந்தை பி.டி.லக்‌ஷ்மண், ‘நான் இங்கேயே இருந்து விடுகிறேன்’ என கதறி அழுதது பலரையும் கலங்க செய்துள்ளது. ஐபிஎல் 2025-ம் ஆண்டு சீசனில் முதல் முறையாக ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது. அந்த அணியின் வெற்றியை கொண்டாடும் … Read more