உயிருக்கு அச்சுறுத்தல்: புனே நீதிமன்றத்தில் ராகுல் மனு தாக்கல்

புனே: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் லண்டன் நிகழ்ச்சியில் பேசும்போது, “ஒரு முறை நண்பர்கள் சிலருடன் சேர்ந்து ஒரு முஸ்லிமை தாக்கினோம். அது மகிழ்ச்சியாக இருந்தது என சாவர்க்கர் நூலில் குறிப்பிட்டுள்ளார்” என்றார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாவர்க்கர் வம்சாவளியைச் சேர்ந்த சத்யாகி சாவர்க்கர் ராகுல் காந்தி மீது புனே நகரில் உள்ள எம்.பி., எம்எல்ஏ-க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், “மனுதாரர் நாதுராம் கோட்சேவின் … Read more

குடியுரிமை பெறும் முன்பே வாக்காளர் அட்டை பெற்ற சோனியா: பாஜக தலைவர் அமித் மாளவியா குற்றச்சாட்டு

புதுடெல்லி: “காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பே வாக்காளர் அட்டை பெற்றுள்ளது சட்டவிரோதம் இல்லையா?” என்று பாஜக மூத்த தலைவர் அமித் மாளவியா குற்றம் சாட்டியுள்ளார். மகாராஷ்டிரா, கர்நாடகா, ஹரியானா போன்ற மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல், மக்களவை தேர்தலில் வாக்குகள் திருடப்பட்டுள்ளன என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இதை மறுத்துள்ள தேர்தல் ஆணையம், குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை அளிக்கும்படி ராகுல் … Read more

கேரள அரசு – ஆளுநர் மோதல் எதிரொலி: துணைவேந்தர் நியமனத்துக்கு குழு அமைக்க நீதிமன்றம் முடிவு

புதுடெல்லி: துணைவேந்தர் நியமனங்கள் தொடர்பாக மாநில அரசின் அதிகாரத்தை உறுதிசெய்யும் கேரள உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் தொடர்ந்த வழக்கும், அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துக்கு தற்காலிக துணைவேந்தரை கேரள ஆளுநர் நியமித்ததை எதிர்த்து கேரள அரசு தொடர்ந்த வழக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜெ.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன. ஆளுநர், கேரள அரசின் வாதங்களை கேட்ட நீதிபதிகள், யுஜிசி விதிமுறைப்படி துணைவேந்தரை … Read more

வெளிநாட்டு துப்பாக்கிகள் கடத்தலில் முக்கிய குற்றவாளி கைது

புதுடெல்லி: நாட்டின் மிகப்பெரிய சட்டவிரோத ஆயுதக் கடத்தல்காரராக இருப்பவர் பிஸ்டல் சலீம். டெல்லியின் ஜாப்ராபாத்தை சேர்ந்த இவரை சுமார் 5 ஆண்டுகளுக்கு முன் 26 வெளிநாட்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் 800 தோட்டாக்களுடன் டெல்லி போலீஸார் பிடித்தனர். ஆனால் சிறையிலிருந்து ஜாமீன் பெற்றவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார். பிறகு வெளிநாடுகளில் இருந்தவாறு இந்தியாவுக்கு ஆயுதங்களை கடத்தி, டெல்லி, உ.பி., மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் செயல்படும் சமூகவிரோதக் கும்பல்களுக்கு விற்பனை செய்துள்ளார். இவர் நேபாள எல்லையில் மறைந்திருப்பதாக டெல்லி போலீஸாருக்கு … Read more

அமெரிக்காவுடன் பதற்றம் நிலவும் சூழலில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகஸ்ட் 21-ம் தேதி ரஷ்யா பயணம்

புதுடெல்லி: ஆகஸ்ட் 21-ம் தேதி மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர் ரஷ்யா செல்கிறார். இந்திய பொருட்களுக்கு 50% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளார். இதனால் இந்தியா, அமெரிக்கா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்​நிலை​யில் தேசிய பாது​காப்பு ஆலோ​சகர் அஜித் தோவல் ரஷ்​யா​வுக்கு சென்​றிருந்​தார். அங்கு அதிபர் புதினை சந்​தித்​துப் பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார். இந்த சந்​திப்​புக்​குப் பிறகு அஜித் … Read more

“எங்களிடம் பிரம்மோஸ் உள்ளது” – பாகிஸ்தான் பிரதமருக்கு ஒவைசி பதிலடி

புதுடெல்லி: தங்களுக்கு சொந்தமான ஒரு சொட்டு தண்ணீரைக் கூட பறிக்க அனுமதிக்க மாட்டோம் என இந்தியாவை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சீண்டிய நிலையில், அதற்கு ஏஐஎம்ஐஎம் தலைவரும், எம்.பியுமான அசாதுதீன் ஒவைசி, ‘எங்களிடம் பிரம்மோஸ் உள்ளது’ என பதிலடி கொடுத்துள்ளார். பாகிஸ்தானில் நேற்று நடந்த ஒரு விழாவில் உரையாற்றிய ஷெபாஸ் ஷெரீப், “இந்தியாவால் பாகிஸ்தானிடமிருந்து ஒரு சொட்டு தண்ணீரைக் கூட பறிக்க முடியாது. எங்கள் தண்ணீரை நிறுத்துவதாக நீங்கள் மிரட்டுகிறீர்கள். நீங்கள் அத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டால், … Read more

ஐ.நா பொதுச் சபையில் உரையாற்ற அமெரிக்கா செல்கிறார் பிரதமர்

புதுடெல்லி: ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ததால், இந்தியா மீதான இறக்குமதி வரியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 50 சதவீதமாக உயர்த்தினார். இந்நிலையில், ஐ.நா பொதுச் சபையின் 80-வது பொதுக் கூட்டம் செப். மாதம் 9-ம் தேதி தொடங்குகிறது. பொது விவாத நிகழ்ச்சி செப். 23 முதல் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இஸ்ரேல், சீனா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளின் தலைவர்கள் உரையாற்றுகிறார்கள். இதில் உரையாற்றுமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு … Read more

‘இறந்துபோன’ வாக்காளர்கள் உடன் தேநீர் விருந்து: தேர்தல் ஆணையத்துக்கு நன்றி என ராகுல் காந்தி பதிவு

புதுடெல்லி: இறந்தவர்கள் என காரணம் காட்டி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பிஹார் மாநிலத்தை சேர்ந்த வாக்காளர்களுடன் தேநீர் பருகினார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி-யுமான ராகுல் காந்தி. இந்த தனித்துவ அனுபவத்தை தனக்கு கொடுத்த தேர்தல் ஆணையத்துக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். பிஹாரை சேர்ந்த ஏழு பேர் குழு புதன்கிழமை அன்று ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்தனர். அப்போது இறந்தவர்கள் என காரணம் காட்டி வாக்காளர் பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையத்தால் தங்கள் … Read more

உயிரிழந்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்த வாக்காளர்களுடன் தேநீர் பருகிய ராகுல் காந்தி!

புதுடெல்லி: இறந்தவர்கள் என காரணம் காட்டி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பிஹார் மாநிலத்தை சேர்ந்த வாக்காளர்களுடன் தேநீர் பருகினார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி-யுமான ராகுல் காந்தி. இந்த தனித்துவ அனுபவத்தை தனக்கு கொடுத்த தேர்தல் ஆணையத்துக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். பிஹாரை சேர்ந்த ஏழு பேர் குழு புதன்கிழமை அன்று ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்தனர். அப்போது இறந்தவர்கள் என காரணம் காட்டி வாக்காளர் பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையத்தால் தங்கள் … Read more

டெல்லியில் தெரு நாய்கள், மும்பையில் புறாக்கள்… – பிரச்சினையும் பின்னணியும்

புதுடெல்லி: டெல்லியில் தெரு நாய்கள் பிரச்சினை வலுத்து வருவதற்கு முன்பே, மும்பையில் புறாக்களுக்கு உணவு அளிக்கத் தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்த இரு பெரும் நகரங்களில் தெருநாய்கள் மற்றும் புறாக்களின் வாழ்க்கை சிக்கலாகிவிட்டது. டெல்லியில் தெரு நாய்கள் பிரச்சினை நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டது. அதிகரித்து வரும் நாய்க்கடி மற்றும் அதன் தாக்குதல் சம்பவங்கள் மக்களை கவலையடையச் செய்துள்ளன. உச்ச நீதிமன்றம் இந்தப் பிரச்சினையை மிகவும் தீவிரமாகக் கருதி, தானாக முன் வந்து இந்த வழக்கை விசாரித்தது. தெரு … Read more