ரூ.4,600 கோடியில் ஒடிசா, பஞ்சாப் ஆந்திராவில் செமிகண்டக்டர் ஆலைகள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: ஒடி​சா, பஞ்​சாப், ஆந்​திர மாநிலங்​களில் ரூ.4,600 கோடி மதிப்​பில் செமிகண்​டக்​டர் ஆலைகளை அமைக்​க மத்​திய அமைச்​சரவை நேற்று ஒப்​புதல் வழங்​கியது. பிரதமர் நரேந்திர மோடி தலை​மையி​ல் மத்​திய அமைச்​சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பிறகு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்​தி​யா​வில் செமிகண்டக்டர்​களை தயாரிப்​ப​தற்​கான சூழல் மேம்​பட்டு வரு​கிறது. இதற்​கான ஆறு அங்​கீகரிக்​கப்​பட்ட திட்​டங்​கள் ஏற்கெனவே பல்​வேறு கட்​டங்​களில் செயல்​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன. இந்த நிலை​யில், சிக்​செம், காண்​டினென்​டல் டிவைஸ் இந்​தியா (சிடிஐஎல்), … Read more

ஆதார் ‘குடியுரிமை’க்கான ஆதாரம் அல்ல: நீதிமன்றங்கள் சொல்வது என்ன?

புதுடெல்லி / மும்பை: இந்திய குடியுரிமைக்கான ஆதாரமாக ஆதார அட்டையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று உச்ச நீதிமன்றமும், மும்பை உயர் நீதிமன்றமும் கூறியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. பிஹாரில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 11 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு நீதிபதிகள் சூரிய காந்த், ஜாய்மாலாபாக்சி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் கூறும்போது. “ஐந்து கோடி வாக்காளர்கள், தாங்கள் இந்தியக் குடிமகன்கள் என்பதை இரண்டரை மாதங்களில் நிரூபிக்க … Read more

செம்டம்பரில் பிரதமர் மோடி – அதிபர் ட்ரம்ப் சந்திப்பு?… வரி போருக்கு மத்தியில் வெளியாகியுள்ள முக்கிய தகவல்

பிரதமர் மோடி ஐநா பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள அமெரிக்கா செல்ல இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அப்போது அதிபர் டொனால்ட் டிரம்பை சந்திக்கக் கூடும்.

நீதிபதி யஷ்வந்த் பதவிநீக்க விவகாரம்: 3 பேர் அடங்கிய குழு விசாரிக்கும் – மக்களவை சபாநாயகர் உத்தரவு 

புதுடெல்லி: டெல்லி உயர் நீதி​மன்ற நீதிப​தி​யாக பணி​யாற்​றிய யஷ்வந்த் வர்மா வீட்​டில் கடந்த மார்ச் 14-ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்​துக்கு சென்ற தீயணைப்​புத் துறை​யினர் தீயை கட்​டுக்​குள் கொண்டு வந்​தனர். அப்​போது ஓர் அறை​யில் பல மூட்​டைகளில் கட்​டுக்​கட்​டாக பணம் பாதி எரிந்த நிலை​யில் இருந்​தது தெரிய​வந்​தது. இதுகுறித்து தகவல் அறிந்த உச்ச நீதி​மன்​றத்​தின் அப்​போதைய தலைமை நீதிபதி சஞ்​சீவ் கன்னா அலகா​பாத் உயர் நீதிமன்றத்துக்கு வர்​மாவை பணி​யிட மாற்​றம் … Read more

நாக்பூரில் விபத்தில் சிக்கி உயிரிழந்த மனைவியின் உடலை பைக்கில் எடுத்துச் சென்ற கணவர்

நாக்பூர்: மத்​தி​யபிரதேச மாநிலத்​தின் சியோனி மாவட்​டம், கரன்​பூர் என்ற கிராமத்தை சேர்ந்​தவர் அமித் யாதவ் (35). இவர் கடந்த வெள்​ளிக்​கிழமை தனது மனைவி கயார்சி உடன், மகா​ராஷ்டிர மாநிலம் நாக்​பூரில் இருந்து மோட்​டார் சைக்​கிளில் சொந்த ஊருக்​குப் புறப்​பட்​டார். ஜபல்​பூர் தேசிய நெடுஞ்​சாலை​யில் நாக்​பூரின் லோனாரா அரு​கில் செல்​லும்​போது இவர்​களின் பைக் மீது ஒரு லாரி உரசி​யது. இதில் சாலை​யில் விழுந்த கயார்சி லாரி​யின் சக்​கரத்​தில் சிக்கி பரி​தாப​மாக உயி​ரிழந்​தார். விபத்​துக்கு பிறகு லாரியை நிறுத்​தாமல் டிரைவர் … Read more

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்: டி ஷர்ட்டில் இடம்பெற்ற ‘மின்டா தேவி’ யார்?

புதுடெல்லி: பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் இண்டியா கூட்டணி எம்பிக்கள் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற பிரியங்கா காந்தி உள்ளிட்ட சில எம்பிக்கள் மின்டா தேவி (Minta Devi) என்ற பெயர் பொறிக்கப்பட்ட டி ஷர்ட்களை அணிந்துகொண்டு கோஷங்களை எழுப்பினர். இந்திய தேர்தல் ஆணையம் பிஹாரில் நடத்தி வரும் சிறப்பு தீவிர திருத்தத்தை நிறுத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். … Read more

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! மாநில அரசின் புதிய முடிவு!

தெலங்கானா மாநிலத்தில் ஏற்பட்ட இயற்கை பேரிடர்களை கருத்தில் கொண்டு, அரசு கடந்த ஜூன் மாதத்திலேயே, மூன்று மாதங்களுக்கு தேவையான அரிசியை மொத்தமாக விநியோகித்தது.

நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழுவை அறிவித்தார் மக்களவை சபாநாயகர்

புதுடெல்லி: அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் மூட்டை மூட்டையாக பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக அவரிடம் விசாரணை மேற்கொள்ள மூன்று பேர் அடங்கிய விசாரணைக் குழுவை நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார். நீதிபதிகள் விசாரணைச் சட்டம் 1968-ன் கீழ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள ஓம் பிர்லா, உச்ச நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா, கர்நாடக உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் … Read more

சிராக் பாஸ்வான் முதல் பிரசாந்த் கிஷோர் வரை… பிஹாரில் கோலோச்சும் சிறிய கட்சிகள்!

பாட்னா: பிஹார் மாநிலத்தில் கடந்த சில தேர்தல்களில் லோக் ஜனசக்தி கட்சி, சிபிஎம்-எல், ஹெச்ஏஎம் போன்ற சிறிய கட்சிகள் பெரும் தாக்கத்தை உருவாக்கியுள்ளன. 243 உறுப்பினர்களைக் கொண்ட பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெறவிருக்கும் நிலையில், சிறிய கட்சிகள் மீதான கவனமும் அதிகரித்துள்ளது. பிஹாரில் மிகப்பெரிய கட்சிகள் என்றால் அது லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி மற்றும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் தான். அதுபோல தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளும் … Read more

குடியுரிமைக்கான ஆதாரமாக ஆதாரை ஏற்க முடியாது: தேர்தல் ஆணையத்தின் வாதத்தை ஏற்றது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: இந்திய குடியுரிமைக்கான ஆதாரமாக ஆதாரை ஏற்றுக்கொள்ள முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. பிஹாரில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 11 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு நீதிபதிகள் சூரிய காந்த், ஜாய்மாலாபாக்சி அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் கூறும்போது. “5 கோடி வாக்காளர்கள், தாங்கள் இந்தியக் குடிமகன்கள் என்பதை 2.5 மாதங்களில் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. இந்நிலையில், ஆதாரை ஆவணமாக ஏற்க … Read more