செஸ் வரி வசூல் ரூ.3.69 லட்சம் கோடியை உரிய திட்டங்களுக்கு பயன்படுத்தவில்லை: மத்திய அரசு மீது சிஏஜி குற்றச்சாட்டு
புதுடெல்லி: 2023-24 நிலவரப்படி செஸ் வரி மூலம் மத்திய அரசு வசூலித்த ரூ.3.69 லட்சம் கோடி தொகையை உரிய திட்டங்களுக்கு பயன்படுத்தவில்லை என்று மத்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) அறிக்கை தெரிவித்துள்ளது. 2023-24-ம் நிதி ஆண்டுக்கான மத்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் அறிக்கை இன்று (செவ்வாய்கிழமை) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கமான வரிகளுக்கு கூடுதலாக குறிப்பிட்ட சதவிகித தொகை செஸ் வரியாக வசூலிக்கப்படுகிறது. இந்த கூடுதல் வரி, கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, எண்ணெய் துறை மேம்பாடு … Read more