மோந்தா புயல் எதிரொலி: 11 ரயில்களின் நேரம் மாற்றம்.. முழு விவரம்!
Train Rescheduled: மோந்தா புயல் எதிரொலியால், 11 ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Train Rescheduled: மோந்தா புயல் எதிரொலியால், 11 ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பாட்னா: பிஹார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் கஹல்கான் தொகுதி பாஜக எம்எல்ஏ பவன் யாதவுக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. இத்தொகுதி கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் ஏமாற்றம் அடைந்த பவன் யாதவ் இத்தொகுதியில் என்டிஏ வேட்பாளருக்கு எதிராக சுயேச்சையாக போட்டியிடுகிறார். இதையடுத்து கட்சி விரோத செயல்பாடுகள் காரணமாக பவன் யாதவ் உள்ளிட்ட 6 பேர் மீது பாஜக ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக … Read more
Montha Cyclone: மோந்தா புயல் காரணமாக தமிழகம், ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், அந்த புயல் எப்போது கரையை கடக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
பெங்களூரு: கர்நாடகாவில் வரும் நவம்பரில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். கர்நாடகாவில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் வென்றதை தொடர்ந்து சித்தராமையா முதல்வராக பதவியேற்றார். அப்போது முதல்வர் பதவி கேட்ட டி.கே.சிவகுமாருக்கு காங்கிரஸ் மேலிடம் துணை முதல்வர் பதவி வழங்கியது. முதல்வராக சித்தராமையா பொறுப்பேற்று வரும் நவம்பருடன் இரண்டரை ஆண்டு நிறைவடைகிறது. எனவே டி.கே.சிவகுமாருக்கு முதல்வர் பதவி வழங்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். ஆனால் … Read more
புதுடெல்லி: பிளாஸ்டிக் கழிவை கொடுத்து உணவு பெறும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் சத்தீஸ்கர் அரசு எடுத்துள்ள முன்முயற்சிக்கு மன்கி பாத் உரையில் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். மாதம் தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடி வானொலி வழியாக நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் நேற்றைய 127-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: சூரிய கடவுளுக்கு மரியாதை செலுத்தும் சாத் பூஜை இந்தியாவின் சமூக … Read more
புதுடெல்லி: இந்தி நடிகர் சல்மான் கான் தீவிரவாதியாம் என பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது. சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் இந்தி நடிகர்கள் சல்மான் கான், ஷாருக் கான், அமீர் கான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் சல்மான் கான் பேசும்போது, “இப்போது, இந்தி திரைப்படத்தை இங்கு வெளியிட்டால் அது சூப்பர் ஹிட் ஆகும். தமிழ், தெலுங்கு அல்லது மலையாள திரைப்படம் வெளியிட்டாலும் பல நூறு கோடி வசூலாகும். ஏனென்றால், இங்கு பலுசிஸ்தான், ஆப்கானிஸ்தான், … Read more
புதுடெல்லி: தமிழகம், புதுச்சேரி, கேரளா உட்பட நாடு முழுவதும் 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி இன்று தொடங்குகிறது. இதுதொடர்பாக டெல்லியில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறியதாவது: இந்தியாவில் கடந்த 1951 முதல் 2004 வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி 8 முறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடைசியாக 2002-04 காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது. சுமார் 21 ஆண்டுகளுக்கு பிறகு, பிஹார் மாநிலத்தில் … Read more
புதுடெல்லி: நாடு முழுவதும் தெருநாய்களால் ஏற்படும் பிரச்சினை தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கும் வழக்கில் உரிய காலக்கெடுவுக்குள் பதில்மனு தாக்கல் செய்யாத தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களின் தலைமைச் செயலர்கள் வரும் நவ.3-ம் தேதி ஆஜராகி விளக்கமளிக்க வேண்டுமென சம்மன் பிறப்பித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். தலைநகரான டெல்லியில் சிறுவர்களை தெருநாய்கள் துரத்தி, துரத்தி கடித்து ரேபிஸ் தொற்று பரவியது தொடர்பாக வெளியான செய்தியின் அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள தெருநாய்கள் பிரச்சினை … Read more
டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம், ஜான்சர் – பவார் பகுதியில் உள்ளது கந்தார் கிராமம். பழங்குடியின மக்கள் வசிக்கும் இந்த கிராமத்தில் சமீபத்தில், பழங்குடியின தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. அப்போது திருமணம் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளில் திருமணமான பெண்கள், தங்க நகைகள் அணிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் திருமணமான பெண்கள், தங்கத்தில் கம்மல், மூக்குத்தி, தாலி ஆகியவற்றை மட்டும் அணியலாம். மற்றபடி ஆடம்பரமான தங்க நகைகளை அணிய கூடாது. மீறினால் ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும் … Read more
புதுடெல்லி: தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது நீதிமன்ற அறையில் நிகழ்ந்த தாக்குதலை அவர் புறக்கணிக்க விரும்புவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு வழக்கு விசாரணைக்காக கடந்த 6-ம் தேதி கூடியபோது, வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் தனது காலணியை கழற்றி தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயை நோக்கி வீசினார். ஆனால் அது அவர் மீது படவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து அவர் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். விசாரணைக்கு பிறகு போலீஸார் அவரை விடுவித்தனர். … Read more