மன்னிப்பு கேட்காவிட்டால் கமல்ஹாசன் படங்களை திரையிட அனுமதிக்க மாட்டோம்: கர்நாடக அமைச்சர் எச்சரிக்கை

பெங்களூரு: சென்​னை​யில் அண்​மை​யில் நடை​பெற்ற ‘தக் லைஃப்’ திரைப்பட நிகழ்​வில் நடிகரும் மக்​கள் நீதி மய்​யத்​தின் தலை​வரு​மான கமல்​ஹாசன் பேசுகை​யில், “தமிழில் இருந்து பிறந்தது தான் கன்​னடம்​” என குறிப்​பிட்​டார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரி​வித்​துள்ள கன்னட அமைப்​பினர், அவருக்கு எதி​ராக பெங்​களூரு போலீ​ஸில் புகார் அளித்​தனர். கர்நாடக முதல்​வர் சித்​த​ராமை​யா, பாஜக மாநில தலை​வர் விஜயேந்​திரா உள்​ளிட்டோரும் எதிர்ப்பு தெரி​வித்​தனர். இந்​நிலை​யில் கன்னட கலை மற்​றும் கலாச்​சா​ரத் துறை அமைச்​சர் சிவ​ராஜ் தங்​கடகி கூறும்போது, “கமல்​ஹாசனின் … Read more

ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் சசி தரூர், சல்மான் குர்ஷித் கருத்துக்கு மணீஷ் திவாரி ஆதரவு

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கையை பாராட்டிய காங்கிரஸ் தலைவர்கள் சசி தரூர், சல்மான் குர்ஷித் வரிசையில் தற்போது மணீஷ் திவாரியும் இணைந்துள்ளார். இது, மத்திய அரசை ஏற்கெனவே விமர்சித்து வரும் காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் கடுமையான நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு தெரிவிக்கும் வகையில், அனைத்து கட்சி எம்.பி.க்கள் அடங்கிய குழுவை மத்திய அரசு அமைத்து பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த தூதுக்குழுவில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் … Read more

இந்தியாவில் 3500+ கொரோனா பரவல்.. தமிழ்நாட்டில் எத்தனை பேர் பாதிப்பு?

Corona virus: இந்தியாவில் 3500க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் 199 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கொல்கத்தா இஸ்கான் கோயிலின் ஜெகந்நாதர் ரதத்தில் சுகோய் போர் விமான சக்கரம்

கொல்கத்தா: கொல்கத்தா இஸ்கான் கோயிலில் வலம் வர உள்ள ஜெகந்நாதர் ரதத்தில் சுகோய் ரக போர் விமானத்தின் சக்கரம் பொருத்தப்படுகிறது. கொல்கத்தாவில் உள்ள இஸ்கான் கோயிலில் வரும் 27-ம் தேதி வருடாந்திர ரத யாத்திரை நடைபெற உள்ளது. இதில் வலம் வரவுள்ள ஜெகந்நாதர் ரதத்தில் ரஷ்யாவின் சுகோய் ரக போர் விமானத்தின் சக்கரங்களை பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சக்கரங்கள் விமானம் புறப்படும்போது மணிக்கு 280 கி.மீ. வேகத்தில் சுற்றும் திறன் வாய்ந்தவை ஆகும். ஆனால் … Read more

மத நிகழ்ச்சியில் பங்கேற்காத ராணுவ அதிகாரி பணி நீக்கத்தை உறுதி செய்தது நீதிமன்றம்

புதுடெல்லி: மத நிகழ்ச்சிகளில் பங்கேற்க மறுத்த ராணுவ அதிகாரியின் பணி நீக்கத்தை டெல்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. ராணுவத்தில் கடந்த 2017-ம் ஆண்டு லெப்டினன்ட்டாக பணியில் சேர்ந்தவர் சாமுவேல் கமலேசன். இவர் சீக்கியர் படைப்பிரிவில் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இந்தப் படைப்பிரிவினர் தங்கியிருக்கும் முகாமில் கோயில் ஒன்றும், குருதுவாரா ஒன்றும் இருந்தது. இங்கு வீரர்கள் பங்கேற்கும் வழிபாடு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சாமுவேல் கமலேசன் மறுப்பு தெரிவித்தார். தான் கிறிஸ்தவ சமயத்தை சேர்ந்தவர் என்றும், சீக்கியர் படைப்பிரிவு முகாமில் … Read more

இந்த வங்கியில் கணக்கு இருக்கிறதா? இனி மினிமம் பேலன்ஸ் தேவை இல்லை!

ஜூன் 1 2025 முதல், அனைத்து சேமிப்புக் கணக்குகளுக்கும் குறைந்தபட்ச இருப்புத் தொகையை (MBR) பராமரிக்க வேண்டிய தேவையை வங்கி முற்றிலும் நீக்கி உள்ளது. இந்த முடிவு வங்கித் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது.

‘பிரதமர் மோடி எப்போது மவுனத்தை கலைப்பார்?’ – ட்ரம்ப் கருத்தை சுட்டிக்காட்டி காங்கிரஸ் கேள்வி

புதுடெல்லி: இந்தியா – பாகிஸ்தான் அணுஆயுத மோதலை தான் தான் தடுத்ததாக 11-வது முறை டொனால்ட் ட்ரம்ப் கூறிவிட்டார். இவ்விஷயத்தில் பிரதமர் மோடி எப்போது மவுனத்தை கலைப்பார் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவுகளில், “பாகிஸ்தானுடனான போர் நிறுத்தம் எவ்வாறு நடந்தது என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரும் அமெரிக்க அதிபருமான டொனால்ட் ட்ரம்ப் 21 … Read more

‘பாகிஸ்தான் பதிலுக்கு விரோதத்தை மட்டுமே கொடுக்கிறது’ – முப்படை தலைமை தளபதி அனில் சவுகான்

புதுடெல்லி: “இந்தியா ராஜதந்திர தொடர்புகளை கொண்டிருந்தபோதிலும் பாகிஸ்தானிடமிருந்து விரோதத்தைத் தவிர வேறு எதையும் திரும்பப் பெறவில்லை.” என முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் தெரிவித்துள்ளார். ஆசியாவின் முதன்மையான பாதுகாப்பு உச்சி மாநாடான ஷாங்க்ரி-லா உரையாடலில் பேசிய இந்திய முப்படை தலைமை தளபதி அனில் சவுகான், “இந்தியா – பாகிஸ்தான் உறவில், நாங்கள் மூலோபாயம் இல்லாமல் செயல்படவில்லை. நாம் சுதந்திரம் பெற்றபோது, ​​சமூக, பொருளாதார, தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி என ஒவ்வொரு அளவீட்டிலும் பாகிஸ்தான் நம்மை … Read more

வட கிழக்கு மாநிலங்களில் கனமழை: அசாம் நிலச்சரிவில் 5 பேர் பலி, சிக்கிமுக்கு ரெட் அலர்ட்!

இட்டாநகர்: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் வடகிழக்கு மாநிலங்களில் பரவலாக கனமழையும், அசாமில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. அசாம், அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் என வடகிழக்கு மாநிலங்கள் பலத்த மழை பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. அசாமின் காம்ரூப் மெட்ரோ மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். அசாம் நிலச்சரிவில் 5 பேர் பலி: அசாம் மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக, தலைநகர் குவாஹாட்டி உட்பட பல பகுதிகளில் சாலைகளில் நீர் தேங்கி இயல்பு வாழ்க்கை … Read more

டெல்லியில் தமிழர்கள் குடியிருப்பு அகற்றம்: 370-க்கும் மேற்பட்ட வீடுகள் இடித்து தரைமட்டம்

உயர் நீதிமன்ற உத்தரவின்படி டெல்லியின் ஜங்புரா பகுதியில் தமிழர்கள் குடியிருப்பு நேற்று அகற்றப்பட்டது. சுமார் 370-க்கும் மேற்பட்ட வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. தெற்கு டெல்லியின் ஜங்புரா பகுதியில் மதராசி கேம்ப் என்ற தமிழர்கள் குடியிருப்பு உள்ளது. அங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு ஜங்புரா பகுதியில் தமிழர்கள் குடியேறினர். சென்னை, விழுப்புரம் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுமார் 3,000 பேர் மதராசி கேம்ப் பகுதியில் வசித்து வந்தனர். … Read more