இமாச்சலில் நிலச்சரிவில் சிக்கிய பேருந்து: 15 பேர் உயிரிழப்பு

பிலாஸ்பூர்: இமாச்சல் பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (அக்.7) ஏற்பட்ட நிலச்சரிவில் தனியார் பேருந்து ஒன்று சிக்கியது. இதில் பேருந்தில் பயணித்த சுமார் 15 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து சம்பவ இடத்துக்கு மாவட்ட நிர்வாகத்தினர் மீட்பு பணிக்காக அங்கு விரைந்துள்ளனர். இதில் காவல் துறையினர், தீயணைப்பு படையினர் மற்றும் பேரிடர் கால மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். தலைநகர் சிம்லாவில் இருந்தபடி நிலைமையை முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு உன்னிப்பாக கவனித்து வருவதாக … Read more

ரூ.24,634 கோடி மதிப்பிலான 4 மிகப் பெரிய ரயில் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: ரூ.24,634 கோடி மதிப்பிலான 4 மிகப்பெரிய ரயில் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், குஜராத், சத்தீஸ்கர் மாநிலங்களுக்கான நான்கு ரயில்வே திட்டங்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. மகாராஷ்டிராவின் வார்தா – பூஷாவல் இடையேயான 314 கிலோ மீட்டர் தொலைவுக்கு 3-வது மற்றும் 4-வது ரயில் பாதைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், மகாராஷ்டிராவின் கோண்டியா மற்றும் சத்தீஸ்கரின் டோன்கர்கர் இடையேயான 84 … Read more

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி முன்பதிவு டிக்கெட் தேதியை மாற்றிக்கொள்ளலாம்.. முழு விவரம்!

IRCTC Train Ticket: ரயில் முன்பதிவு டிக்கெட் தேதியை இனி எந்த கட்டணமும் இன்றி மற்றிக்கொள்ளலாம் என ரயில்வே துறை அமைச்சர்  அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். 

பிரசாந்த் கிஷோருடன் சிராக் பாஸ்வான் கூட்டணி? – பிஹார் அரசியலில் பரபரப்பு!

பாட்னா: அடுத்த மாதம் நடைபெறவுள்ள பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் சிராக் பாஸ்வான் – பிரசாந்த் கிஷோர் கூட்டணி அமைவதற்கான வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏனெனில் ‘அரசியலில் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும்’ என்று லோக் ஜனசக்தி கட்சி வட்டாரங்கள் சமீபத்தில் தெரிவித்துள்ளன. பிஹாரின் மறைந்த அரசியல் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான், அம்மாநில அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக உள்ளார். அவர் கடந்த 2020 பிஹார் தேர்தலில் தனித்து களமிறங்கி நிதிஷ் குமார் … Read more

இரவில் நாகினியாக மாறும் மனைவி..கணவர் கொடுத்த பகீர் புகார்!

Husband Complaints Wife Turning Into Nagin : உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஒருவர், தனது மனைவி இரவில் பாம்பு போல் செய்வதாக புகார் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

ஹரியானா மூத்த ஐபிஎஸ் அதிகாரி துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை!

சண்டிகர்: ஹரியானாவின் மூத்த ஐபிஎஸ் அதிகாரியான புரன் குமார், சண்டிகரில் உள்ள தனது செக்டார் 11 இல்லத்தில் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. சண்டிகரில் உள்ள செக்டார் 11 இல்லத்தில் ஹரியானாவின் மூத்த ஐபிஎஸ் அதிகாரியான புரன் குமார், இன்று தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து உடனடியாகத் தெரியவில்லை. இது தொடர்பாக சண்டிகர் மூத்த காவல் கண்காணிப்பாளர் கன்வர்தீப் கவுர் … Read more

தவறாக தொட்டாரா டெலிவரி ஊழியர்..! வீடியோ வெளியிட்டு பெண் புகார்!

Woman Video On Blinkit Delivery Person : மும்பையில் ஒரு பெண், BLINK IT டெலிவரி டிரைவர் தன்னை தகாத முறையில் தொட்டதாக குற்றம் சாட்டி சமூக ஊடகங்களில் பதிவிட்டது விவாதத்தை கிளப்பியுள்ளது.

ஏஐ தொழில்நுட்பத்துக்கு நம்பிக்கையும், பாதுகாப்பும் அடிப்படையாக இருக்க வேண்டும்: எஸ் ஜெய்சங்கர்

புதுடெல்லி: நம்பிக்கையும், பாதுகாப்பும் நிறைந்த சமநிலையான தொழில்நுட்பமாக செயற்கை நுண்ணறிவு விளங்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார். செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்தும் தாக்கம் தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜெய்சங்கர், “மனிதகுல வரலாற்றில் தொழில்நுட்ப வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டே முன்னேற்றம் தீர்மானிக்கப்படுகிறது. எனினும், அதன் பாதை எப்போதும் நேரானதாக இருப்பதில்லை. வாக்குறுதிகளும், மீறல்களும் எப்போதும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகவே இருக்கின்றன. அதிகாரமளித்தல் மற்றும் சுரண்டல், ஜனநாயகமாக்கல் மற்றும் ஆதிக்கம், கூட்டாண்மை … Read more

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணை கோரிய மேல்முறையீட்டு மனுவை அக்.10-ல் விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்

புதுடெல்லி: கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மறுத்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை எதிர்த்து பாஜகவின் உமா ஆனந்தன் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு, அக்டோபர் 10-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கரூர் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, தற்போதைய சூழ்நிலையில் சிபிஐ … Read more

‘எனக்கு அதில் வருத்தமில்லை; மன்னிப்பு கேட்க மாட்டேன்’ – தலைமை நீதிபதி மீது காலணி வீசிய ராகேஷ் கிஷோர்!

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது காலணியை வீச முயன்ற வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர், தனது செயலுக்கு வருத்தப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். உச்ச நீதி​மன்​றத்​தில் தலைமை நீதிபதி பி.ஆர்​. க​வாய் தலை​மையி​லான அமர்வு வழக்கு விசா​ரணைக்​காக நேற்று கூடியது. அப்​போது வழக்​கறிஞர் ராகேஷ் கிஷோர் தனது காலணியை கழற்றி தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாயை நோக்கி வீசி உள்​ளார். ஆனால் அது அவர் மீது படவில்லை என கூறப்​படு​கிறது. இதையடுத்து அவர் போலீ​ஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். … Read more