பயணிகள் கவனத்திற்கு! ரயில்களில் இருக்கும் இந்த கோடுகள் எதற்காக தெரியுமா?

ரயில் பெட்டிகளில் இருக்கும் மஞ்சள், வெள்ளை கோடுகளின் அர்த்தம் என்ன தெரியுமா? பலருக்கும் இது பற்றி தெரிந்து இருப்பதில்லை. முழு விவரங்களுக்கு தொடர்ந்து படியுங்கள்.

மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் எந்த இலக்கும் சாத்தியமற்றது அல்ல: பிரதமர் மோடி

புதுடெல்லி: மத்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்து டீம் இந்தியாவைப் போல செயல்பட்டால், எந்த இலக்கும் சாத்தியமற்றது அல்ல என்று நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறும் நிதி ஆயோக்கின் 10-வது நிர்வாகக் குழு கூட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் பேசிய அவர், “நாம் வளர்ச்சியின் வேகத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. மத்திய அரசும், அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து டீம் இந்தியாவைப் … Read more

இனி எல்லா மாநிலங்களுக்கும் 'இதுதான்' டார்கெட் – பிரதமர் மோடி சொன்ன பிளான் என்ன?

PM Modi: டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில், பல்வேறு மாநில முதலமைச்சர்கள் மத்தியில், பிரதமர் மோடி முக்கியமாக வலியுறுத்தி பேசியவற்றை இங்கு பார்க்கலாம்.

கரோனா பாதிப்பு: கேரளா, மும்பை, டெல்லி மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தல்

புதுடெல்லி: பல மாதங்கள் இடைவெளிகளுக்குப் பின்பு, இந்தியாவின் நகர்ப்புறங்களில் கரோனா பாதிப்பு மீண்டும் பரவிவருகிறது. இதனால் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்க அறிவுத்தப்பட்டுள்ளன. கேரளா, தமிழகம் மற்றும் கர்நாடகாவில் மே மாதத்தில் புதிய கரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. அதேபோல் மூன்று ஆண்டுகளுக்கு பின்பு தேசிய தலைநகர் டெல்லியில் கரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. என்றாலும் இவைகள் தீவிரத் தன்மையற்ற, பாதிப்பு குறைவானவையே. இதுவரை இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை. தெற்காசியாவில் ஜேஎன்.1 மாறுபாடு (ஓமிக்ரானின் … Read more

கார் – லாரி மோதல்: ஆந்திராவில் 6 பேர் உயிரிழப்பு

ஓங்கோல்: ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், தாட்டிசெர்லமாடு எனும் கிராமத்துக்கு அருகில் நேற்று காலையில் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த கோர விபத்தில் பாபட்லா மாவட்டம், ஸ்டுவர்டிபுரம் பகுதியை சேர்ந்த 6 பேர் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த இவர்கள் அனைவரும், கர்னூல் அருகே உள்ள மகாநந்தி கோயிலுக்கு சென்று சுவாமியை தரிசனம் செய்து விட்டு, சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் … Read more

16 ஆண்டுகளுக்கு பின்… முன்கூட்டியே தொடங்கிய தென்மேற்கு பருவமழை – அதிக மழை பெய்யுமா?

Southwest Monsoon: தென்மேற்கு பருவமழை அதிகாரப்பூர்வமாக தொடங்கிவிட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்துள்ளது.

‘அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது’ – ஜெர்மனியில் ஜெய்சங்கர் பேச்சு

பெர்லின்: பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம். இந்தியா ஒருபோதும் அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு அடிபணியாது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். நேற்று (மே 23) ஜெர்மனியின் பெர்லினில் ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் ஜோஹன் வடேபுலுடன் நடந்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய ஜெய்சங்கர், “பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்த உடனேயே நான் பெர்லினுக்கு வந்தேன். அந்த சூழலில் வடேபுலுக்கு நான் தெரிவித்ததை … Read more

கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்துக்குள் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு

புதுடெல்லி: கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்துக்குள் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அவ்வாறு தொடங்கினால், கேரளாவில் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் வழக்கத்தைவிட ஒரு வாரத்துக்கு முன்னதாகவே பருவமழை தொடங்கியதாக அமையும். சாதகமான சூழல்: கடந்த இரண்டு தினங்களாகவே அரபிக் கடலில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு நிலை, மேலும் வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது. இதனால் அங்கு பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது, பருவமழைக்கு முந்தைய மழைப்பொலிவும் … Read more

கடைசி பணி நாளில் 11 தீர்ப்புகள் வழங்கிய நீதிபதி ஏ.எஸ்.ஓகா

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற நீதிபதி அபய் ஸ்ரீனிவாஸ் ஓகா நேற்று தனது கடைசி பணி நாளில் 11 தீர்ப்புகளை வழங்கினார். உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ்.ஓகா இன்று (மே 24) பணி ஓய்வு பெறுகிறார். இதையொட்டி உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் அவருக்கு கடந்த புதன்கிழமை பிரிவு உபசார விழா நடைபெற்றது. அதேநாளில் மும்பையில் அவரது தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, காலமானார். இதையடுத்து மும்பை சென்ற ஓகா, நேற்று முன்தினம் தனது தாயாருக்கு இறுதிச் சடங்குகளை … Read more

கரோனா வைரஸ் பாதிப்பு டெல்லியில் 23 ஆக உயர்வு

புதுடெல்லி: நாட்டில் மீண்டும் கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் டெல்லியில் இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் கரோனா நோயாளிகளுக்கு படுக்கைகள், ஆக்சிஜன் மற்றும் மருந்து, மாத்திரைகளை தயார் நிலையில் வைத்திருக்கும்படி அனைத்து மருத்துவமனைகளுக்கும் அரசு நேற்று அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 3 ஆக உயர்ந்தது. விசாகப்பட்டினம், மத்துலபாளையம் பகுதியில் 28 வயது பெண் ஒருவருக்கும் நந்தியாலா மாவட்டம், சீகலமர்ரி எனும் ஊரில் 75 … Read more