மாஸ்கோவில் ரஷ்ய செனட்டர்களுடன் கனிமொழி எம்.பி தலைமையிலான தூதுக் குழு சந்திப்பு

மாஸ்கோ: திமுக எம்.பி கனிமொழி தலைமையிலான அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய தூதுக் குழு இன்று மாஸ்கோவில் ரஷ்ய வெளியுறவு விவகாரங்களுக்கான கூட்டமைப்பு கவுன்சில் குழுவின் முதல் துணைத் தலைவர் உட்பட செனட்டர்கள் பலரையும் சந்தித்தது. இது குறித்து ரஷ்யாவில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் ஒன்றாக இணைந்துள்ளோம். ரஷ்யாவின் வெளியுறவு விவகாரங்களுக்கான குழுவின் முதல் துணைத் தலைவர் ஆண்ட்ரி டெனிசோவ் மற்றும் பிற செனட்டர்களுடன் எம்.பி கனிமொழி தலைமையிலான … Read more

கோட்டாவில் மாணவர்கள் உயிரை மாய்த்துக்கொள்வது ஏன்? – ராஜஸ்தான் அரசு மீது உச்ச நீதிமன்றம் காட்டம்

புதுடெல்லி: ராஜஸ்தானின் கோட்டா நகரில் அதிகரித்து வரும் மாணவர்களின் தற்கொலைகள் குறித்து அம்மாநில அரசை கடுமையாக சாடியிருக்கும் உச்ச நீதிமன்றம், நிலைமை மிகவும் தீவிரமானது என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு, ராஜஸ்தான் அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம், “அரசாக நீங்கள் என்ன செய்கிறீர்கள்? இந்தக் குழந்தைகள் கோட்டாவில் மட்டும் ஏன் இறக்கிறார்கள்? ஓர் அரசாக இதுபற்றி நீங்கள் யோசிக்கவில்லையா?” என்று கேள்வி எழுப்பியது. … Read more

“வங்கதேச உள்நாட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்தியா உதவ வேண்டும்” – முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

கொல்கத்தா: உள்நாட்டு பிரச்சினைகளில் இருந்து வெளிவர வங்கதேசத்துக்கு இந்தியா உதவ வேண்டும் என்றும், இரு நாடுகளும் நெருங்கிய நட்பு நாடுகளாக இருக்க வேண்டும் என்றும் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் கருத்து தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய எம்.கே.நாராயணன், “இந்தியாவுக்கு மிகப் பெரிய வலிமை உள்ளது என்பதை ஆபரேஷன் சிந்தூர் காட்டியுள்ளது. அதேநேரத்தில் அந்த வலிமை என்பது கட்டுப்பாட்டுடன் உள்ளது. அது ஒரு முக்கியமான செய்தி. நாம் ஒரு பொறுப்பான மற்றும் பெரிய சக்தி என்பதை … Read more

“பயங்கரவாதம் ஒரு நாள் பாகிஸ்தானை மூழ்கடிக்கும்” – யோகி ஆதித்யநாத்

அயோத்தி: “பயங்கரவாதம் ஒரு நாள் பாகிஸ்தானை மூழ்கடிக்கும்” என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கடுமையாக எச்சரித்தார். அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம் ஜென்மபூமி கோயிலில் பிரார்த்தனை செய்துவிட்டு, ஸ்ரீ ஹனுமன் கர்ஹி மந்திரில் ‘ஸ்ரீ ஹனுமத் கதா மண்டபம்’ திறப்பு விழா நடத்திய பிறகு பேசிய யோகி ஆதித்யநாத், “இது புதிய இந்தியா. புதிய இந்தியா யாரையும் சீண்டுவதில்லை. ஆனால், யாராவது அதை சீண்டிவிட்டுச் சென்றால், அது அவரை விட்டு வைப்பதில்லை. ஹனுமானும் அதையேதான் … Read more

குற்ற வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை: ராஜஸ்தான் பாஜக எம்எல்ஏ பதவி பறிப்பு

ஜெய்ப்பூர்: அரசு அதிகாரியை நோக்கி துப்பாக்கியை நீட்டிய மிரட்டிய வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற கன்வர் லால் மீனாவின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜஸ்தான் சட்டமன்றம் ரத்து செய்தது. சட்டமன்ற செயலகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, மே 1 முதல் கன்வர் லால் மீனாவின் உறுப்பினர் பதவி ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. சபாநாயகர் இந்த முடிவை எடுப்பதற்கு முன்பு அட்வகேட் ஜெனரல் மற்றும் மூத்த சட்ட நிபுணர்களிடமிருந்து சட்டக் கருத்தைக் கோரினார். ‘இன்று பெறப்பட்ட சட்டக் … Read more

“தூதுக் குழுக்கள் நாடு திரும்பியதும் நாடாளுமன்றத்தை கூட்டுக” – மம்தா பானர்ஜி

கொல்கத்தா: பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டினை விளக்குவதற்காக பல்வேறு நாடுகளுக்குச் சென்றுள்ள தூதுக் குழுக்கள் நாடு திரும்பியதும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானஜி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பல்வேறு நாடுகளுக்கு பிரதிநிதிகள் குழுக்கள் சென்றிருப்பதை பார்க்கும்போது நான் மகிழ்ச்சியடைகிறேன். நான் தொடர்ந்து கூறிவருவது போல, தேசத்தின் நலனுக்காகவும், நமது இறையாண்மையை … Read more

“இந்திய வெளியுறவுக் கொள்கை சரிந்துவிட்டது” – ஜெய்சங்கர் மீது ராகுல் காந்தி கடும் தாக்கு

புதுடெல்லி: இந்தியா – பாகிஸ்தான் இடையேயான ராணுவ நடவடிக்கை விவகாரத்தில், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சரிந்துவிட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஜேஜே விளக்குவாரா: இந்தியா ஏன் பாகிஸ்தானுடன் இணை வைக்கப்படுகிறது? பாகிஸ்தானைக் கண்டிப்பதில் ஒரு நாடு கூட நம்மை ஆதரிக்கவில்லையே ஏன்? இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் “மத்தியஸ்தம்” செய்ய ட்ரம்பிடம் யார் கேட்டார்கள்?” என்று கேள்விகளை எழுப்பியுள்ளார். தொடர்ந்து, “இந்தியாவின் … Read more

ஆபரேஷன் சிந்தூர் எதிரொலி: இனி மைசூர் பாக் இல்ல.. மைசூர் ஸ்ரீ!

இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்த நிலையில், ஜெய்ப்பூரில் இனிப்புகளின் பெயரில் இருந்து பாக் என்ற சொல்லை நீக்கி உள்ளனர். 

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம் அமெரிக்காவுக்கு தொடர்பு இல்லை: அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மீண்டும் திட்டவட்டம்

புதுடெல்லி: இந்​தி​யா- பாகிஸ்​தான் இடையி​லான போர் நிறுத்​தம் சர்​வ​தேச மத்​தி​யஸ்​தத்​தால், குறிப்​பாக அமெரிக்​கா​வின் செல்​வாக்​கால் ஏற்​பட​வில்லை என்று வெளி​யுறவு அமைச்​சர் எஸ்​.ஜெய்​சங்​கர் மீண்​டும் திட்டவட்டமாக கூறினார். நெதர்​லாந்து ஊடகம் ஒன்​றுக்கு எஸ்​.ஜெய்​சங்​கர் பேட்டி அளித்​தார். அப்​போது அவர் கூறிய​தாவது: பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்​தூர் இன்​னும் தொடர்​கிறது. ஏனென்​றால் அந்த நடவடிக்​கை​யில் ஒரு தெளி​வான செய்தி இருந்​தது. ஏப்​ரல் 22-ம் தேதி நாம் கண்​டது போன்ற செயல்​கள் (பஹல்​காம் தாக்​குதல்) நடந்​தால், அதற்கு பதிலடி தரப்​படும் என்​பது​தான் … Read more

டெல்லியில் இடியுடன் மழை; கோவாவுக்கு ரெட் அலர்ட்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

புதுடெல்லி: புதுடெல்லியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், கோவாவுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்டும், ராஜஸ்தானுக்கு வெப்ப அலைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. இதுகுறித்து பேசிய இந்திய வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி அகில் ஸ்ரீவஸ்தவா, “டெல்லியில் அடுத்த இரண்டு நாட்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் லேசானது முதல் மிக லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38 … Read more