ஐபிஎஸ் அதி​காரி பூரண் குமார் குடும்​பத்​தினருக்கு ராகுல் ஆறு​தல்

புதுடெல்லி: ஹரி​யானா ஐபிஎஸ் அதிகாரியான பூரண் குமார் கடந்த 7-ம் தேதி தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி அம்னீத் பி.குமார், மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஆவார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். பட்டியல் வகுப்பை சேர்ந்த தனக்கு எதிராக மூத்த அதிகாரிகள் 10 பேர் சாதியப் பாகுபாடு காட்டியதாகவும் மனரீதியாக துன்புறுத்தியதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று காலை 11 மணியளவில் சண்டிகரில் உள்ள பூரண் … Read more

மகா​ராஷ்டிர சாலை பள்ளத்தில் உயிரிழந்தால் ரூ. 6 லட்சம் இழப்பீடு

மும்பை: மகாராஷ்டிர மாநிலம், மும்பை சாலைகளின் பரி​தாப நிலை மற்​றும் சாலை பள்​ளங்​களால் ஏற்​படும் உயி​ரிழப்​பு​கள் குறித்து மும்பை உயர் நீதி​மன்​றம் தாமாக முன்​வந்து விசா​ரணை நடத்​தி​யது. இந்த வழக்​கில் நீதிப​தி​கள் ரேவதி மோஹிதே தேரே, சந்​தேஷ் பாட்​டீல் ஆகியோர் அடங்​கிய அமர்வு நேற்று தீர்ப்பு வழங்​கியது. இந்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது: குடிமக்கள் நல்ல சாலைகளுக்கு உரிமை உடையவர்கள். சாலை பள்ளங்கள் அல்லது திறந்தவெளி சாக்கடைகளால் உயிரிழப்பு ஏற்பட்டால், இறந்தவரின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு ரூ.6 லட்சமும் காயம் … Read more

புரன் குமார் ஐபிஎஸ் தற்கொலை வழக்கு… தேசமே திரும்பிப் பார்க்க காரணம் என்ன?

தற்கொலைகள் பிரபலங்கள் அல்லது அதிகார வட்டத்தில் நடக்கும்போது அது பேசுபொருளாவது ஒன்றும் புதிதல்ல. ஆனால், அப்படியான ஓர் அதிகார வட்ட தற்கொலை வழக்கில் அடுத்தடுத்து ஏற்படும் திடீர் திருப்பங்களும், அது அரசியல் வட்டத்தில் ஏற்படுத்தும் அதிர்வலைகளும், அதனால், அரசாங்கம் வரிந்து பேசும் சமரசங்களும், முக்கிய அரசியல் ஆளுமைகள் வரை எழும் சந்தேகக் குரல்களும், அதை தேசமே திரும்பிப் பார்க்க வைக்கும் வழக்காக மாற்றிவிடும் எனலாம். அதுதான் புரன் குமாரின் வழக்கிலும் நடந்திருக்கிறதோ எனுமளவுக்கு அதில் பல விஷயங்கள் … Read more

மாவோயிஸ்டுகளால் அதிகம் பாதித்த மாவட்டங்கள் 3 ஆக குறைந்தது: மத்திய அரசு

புதுடெல்லி: மாவோயிஸ்டுகளால் அதிகம் பாதிக்கப்பட்ட (most-affected) மாவட்டங்களின் எண்ணிக்கை 6ல் இருந்து 3 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவோயிஸ்டுகளின் அச்சுறுத்தலை மார்ச் 31, 2026-க்குள் முற்றிலுமாக ஒழிக்க அரசு உறுதிபூண்டுள்ளது. இதை நோக்கிய அரசின் செயல்பாடுகள், வெற்றிகரமாக உள்ளன. மாவோயிஸ்டுகளால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதம் 12-ல் இருந்து 6 ஆக குறைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த எண்ணிக்கை … Read more

3 பாகுபலிகள்… நிதிஷ் குமார் பற்ற வைத்த நெருப்பு; NDA கூட்டணியில் சிக்கல் – பீகார் தேர்தல் அப்டேட்!

Bihar Assembly Election 2025: பீகார் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் வெளியிட்டுள்ள முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் இருக்கும் அமைச்சர்கள் மற்றும் மூன்று பாகுபலிகளால் தே.ஜ. கூட்டணியில் சிக்கல் வர வாய்ப்புள்ளது. 

பிஹார் தேர்தல்: ரகோபூர் தொகுதியில் போட்டியிட தேஜஸ்வி யாதவ் வேட்புமனு தாக்கல்

பாட்னா: வைஷாலி மாவட்டத்தில் உள்ள ரகோபூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தேஜஸ்வி யாதவ் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது, முன்னாள் முதல்வர்களும் அவரது பெற்றோருமான லாலு பிரசாத் யாதவ் மற்றும் ராப்ரி தேவி ஆகியோர் உடன் இருந்தனர். 243 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்டுள்ள பிஹார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல்கட்டத் தேர்தலில் 121 தொகுதிகளிலும், இரண்டாம் கட்டத் தேர்தலில் 122 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற உள்ளது. … Read more

சபரிமலையில் மாயமான தங்கம்! அடுத்தடுத்து சிக்கும் அதிகாரிகள்-நடந்தது என்ன?

SIT Probing Sabarimala Gold Theft : சபரிமலை ஐயப்பன் கோயிலின் வெளியே 12 துவாரபாலகர் சாமி சிலை உள்ளது. இந்த சிலையில் தங்க முலாம் பூசப்பட்ட கவசங்கள் பொருத்தப்பட்டு இருந்தது. இது காணாமல் போயுள்ளது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

டெல்லியில் தீபாவளிக்கு பசுமைப் பட்டாசுகளை விற்க, வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

புதுடெல்லி: டெல்லியில் தீபாவளிக்கு பசுமைப் பட்டாசுகளை விற்க, வெடிக்க நிபந்தனைகளுடன் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதி கே. வினோத் சந்திரன் அடங்கிய அமர்வு, “தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 18 முதல் 21 வரை டெல்லியில் பசுமைப் பட்டாசுகளை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. நியமிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும். காலை 6 மணி முதல் 7 … Read more

இறந்தது போல் நாடகமாடிய நபர்..அதுவும் ‘இந்த’ காரணத்துக்காக! வைரல் செய்தி..

Bihar Man Holds Fake Funeral : ஒருவர், இறந்தது போல நாடகமாடி தன் மீது யாரெல்லாம் பாசம் வைத்திருக்கிறார்கள் என்று கண்டுபிடித்திருக்கிறார். இது குறித்த முழு விவரம், இதோ.

பாகிஸ்தான் எல்லை​ பகுதியில் ஆயுத, போதை கடத்தல்​ முறியடிப்பு

சண்​டிகர்: கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் எல்லைப் பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் ஆயுத, போதைப் பொருட்கள் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. இதை தடுக்க பஞ்சாப் மாநில காவல் துறை சார்பில் எல்லைப் பகுதிகளில் ட்ரோன் தடுப்பு சாதனங்கள் நிறுவப்பட்டு உள்ளன. இவற்றின் மூலம் அண்மை காலமாக பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் கடத்தல் முயற்சிகள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து பஞ்சாப் போலீஸார் கூறியதாவது: பாகிஸ்தானில் இருந்து ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள், கையெறி … Read more