கபினி அணையின் பாதுகாப்பு கருதி விநாடிக்கு 40 ஆயிரம் கன அடி நீர் திறப்பு

பெங்களூரு: கடந்த 11-ம் தேதி நடந்த காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில், வரும் 31-ம் தேதி வரை தினமும் விநாடிக்கு 11 ஆயிரத்து 500 கன அடி நீரை தமிழகத்துக்கு கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த‌ கர்நாடக அரசு, விநாடிக்கு 8 ஆயிரம் கன அடி நீரை திறப்பதாக தெரிவித்தது. இந்நிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹேமாவதி, … Read more

டெல்லியில் கேதார்நாத் கோயில் கட்ட எதிர்ப்பு: உத்தராகண்டில் துறவிகள், மடாதிபதிகள் ஆர்ப்பாட்டம்

புதுடெல்லி: உத்தராகண்டில் சார்தாம் என்ற பெயரில் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய புனித தலங்கள் உள்ளன. இதில் ருத்ரபிரயாக் மாவட்டம் கேதார்நாத்தில் இருப்பது போல் டெல்லியில் ஒரு சிவன் கோயிலை அதே பெயரில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக கேதார்நாத் தாம் அறக்கட்டளை, டெல்லி என்ற அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. இதன் சார்பில் டெல்லி, புராரி பகுதியில் கடந்த ஜூலை 10-ம் தேதி நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில் உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியும் கலந்துகொண்டார். இந்நிலையில், … Read more

பத்திரங்களாக மாறும் கோயில் தங்க நகைகள்: தெலங்கானா அரசு முடிவு

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் உள்ள கோயில்களின் உண்டியல்களில் பக்தர்கள் பணம், தங்கம், வெள்ளி பொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். தங்கத்தை மும்பை மிண்ட் பகுதியில் உருக்கி, அதனை வங்கிகளில் டெபாசிட் செய்து, அதற்கு தகுந்த பத்திரங்களை பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வரும் வட்டியை கோயிலின் வளர்ச்சி பணிகளுக்கு உபயோகிப்பது என மாநில இந்து சமய அறநிலைய துறை முடிவெடுத்துள்ளது. இந்த திட்டம் படிப்படியாக அமல்படுத்தப்படும். ஆண்டுதோறும் அதிகரிக்கும் காணிக்கைகளை வங்கிகளில் டெபாசிட் செய்வதன் மூலம் அவை … Read more

மாற்றுத் திறனாளி கிடையாது, இடஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் படித்தவர் பூஜா: விசாரணையில் புதிய தகவல்கள் அம்பலம்

மும்பை: பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியான பூஜா கேத்கர் மாற்றுத் திறனாளி கிடையாது என்றும், ஓபிசி இடஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் படிப்பு படித்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற குடிமைப் பணிகள் தேர்வில் (யுபிஎஸ்சி) தேர்ச்சி பெற்று பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியாக இருப்பவர் பூஜா மனோரமா திலீப்கேத்கர். இவர் மாற்றுத்திறனாளிகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டசமூகத்தினருக்கான (ஓபிசி)இடஒதுக்கீட்டை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளார். Source link

மருத்துவமனை லிப்டில் சிக்கியவர் 2 நாட்களுக்கு பிறகு மீட்பு: கேரளாவில் 3 ஊழியர்கள் பணியிடை நீக்கம்

திருவனந்தபுரம்: கேரள மருத்துவமனை லிப்டில் 2 நாட்களாக சிக்கி இருந்தவர் நேற்று மீட்கப்பட்டார். இது தொடர்பாக 3 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதுகுறித்து கேரள போலீஸார் நேற்று கூறியதாவது: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ரவீந்திரன் நாயர் (59), கடந்த சனிக்கிழமை மருத்துவ பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவர் வீடு திரும்பாததால், ரவீந்திரன் நாயரை காணவில்லை என அவருடைய குடும்பத்தினர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு புகார் அளித்தனர். இந்நிலையில், … Read more

பிரதமர் மோடிக்கு எதிராக வன்முறையை தூண்டும் ராகுல்: பாஜக தலைவர்கள் குற்றச்சாட்டு

புதுடெல்லி: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு ட்ரம்ப் மீது நேற்று முன்தினம் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. ட்ரம்ப் மீதான வெறுப்புணர்வின் காரணமாக தாமஸ் மேத்யூ என்பவர் தனிநபராக அவரை கொலை செய்ய முயன்றிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தை மேற்கோள் காட்டி பாஜக செய்தித் தொடர்பாளர் அமித் மாளவியா சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது: ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது என்ற கருத்தை மையமாகவைத்து அமெரிக்க அதிபர் தேர்தலில் பிரச்சாரம் நடைபெறுகிறது. இதேபோல … Read more

மாநிலங்களவையில் பாஜக பலம் 86 ஆக குறைவு

புதுடெல்லி: மாநிலங்களவையில் நியமன உறுப்பினர்களான ராகேஷ் சின்ஹா, ராம் ஷகல், சோனல் மான்சிங், மகேஷ் ஜெத்மலானி ஆகியோரின் பதவிக்காலம் கடந்த சனிக்கிழமை முடிவடைந்தது. பாஜகவுடன் இணைந்து செயல்பட்ட இவர்கள் ஓய்வுபெற்றதால் மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 86 ஆகவும் அக்கட்சி தலைமையிலான என்டிஏ-வின் பலம் 101 ஆகவும் குறைந்துள்ளது. எனினும் கட்சி சாராத 7 நியமன உறுப்பினர்கள், 2 சுயேச்சைகள் மற்றும் அதிமுக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் போன்ற நட்பு கட்சிகளின் உதவியுடன் முக்கிய மசோதாக்களை வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் … Read more

பழங்குடியினர் ஆணைய ஊழல் விவகாரத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு நெருக்கடி

பெங்களூரு: கர்நாடக வால்மீகி பழங்குடியினர் வளர்ச்சி ஆணையத்தில் நடந்த ஊழல் விவகாரத்தில், மாநில முதல்வர் சித்தராமையாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி வலியுறுத்தியுள்ளார். கர்நாடக வால்மீகி பழங்குடியினர் வளர்ச்சி ஆணையத்தில் ரூ.187.3 கோடி ஊழல் நடந்ததாக அதன் கண்காணிப்பாளர் சந்திரசேகரன் குற்றம்சாட்டினார். மேலும் அந்த ஊழலுக்கு உடந்தையாக இல்லாததால் தனக்கு நெருக்கடி கொடுக்கப்படுவதாக குற்றம்சாட்டிய அவர், கடந்த மே மாதம் தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து ஆணையத்தின் நிர்வாக … Read more

கரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான பி.எம். கேர்ஸ் திட்டம்: 51% விண்ணப்பங்கள் நிராகரிப்பு

புதுடெல்லி: கரோனா பெருந்தொற்று காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான பி.எம். கேர்ஸ் திட்டத்தின் கீழ் பெறப்பட்டவற்றில் சுமார் 51% விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கரோனா பெருந்தொற்று காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான பி.எம். கேர்ஸ் திட்டம் கடந்த 2021-ம் ஆண்டு மே 29-ம் தேதி தொடங்கப்பட்டது. குழந்தைகளுக்கான பி.எம். கேர்ஸ் திட்டம் மார்ச் 11, 2020 முதல் மே 05, 2023 வரை கரோனா பெருந்தொற்று காரணமாக பெற்றோர்கள் இருவரையோ, அல்லது உயிருடன் இருந்த பெற்றோரில் … Read more

கன்னடர்களுக்கு கட்டாய வேலைக்கான இடஒதுக்கீடு மசோதா – கர்நாடக அரசு ஒப்புதல் | HTT Explainer

பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள தொழிற்சாலைகள், பிற நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் 50 சதவீத நிர்வாக பணிகளிலும், 75 சதவீதம் நிர்வாகம் அல்லாத பணிகளிலும் கன்னடம் தெரிந்த உள்ளூர் நபர்களை கட்டாயம் நியமிக்க வழிவகுக்கும் சட்ட மசோதாவுக்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கர்நாடக மாநிலத் தொழில்கள், தொழிற்சாலைகள் மற்றும் பிற நிறுவனங்களில் உள்ளூர் நபர்களுக்கான வேலைவாய்ப்பு மசோதா 2024 எனப் பெயரிடப்பட்ட அந்த மசோதாவுக்கு திங்கள்கிழமை (ஜூலை 15) அன்று முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் … Read more