ரோஹித் வெமுலா வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும்: தெலங்கானா டிஜிபி தகவல்

ஹைதராபாத்: மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும். அதற்காக நீதிமன்றத்தில் உரிய அனுமதி பெறப்படும் என தெலங்கானா டிஜிபி ரவி குப்தா தெரிவித்துள்ளார். ஹைதராபாத் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை வழக்கு விசரணையை முடித்துவைத்ததாக தெலங்கானா போலீஸ் அறிவித்தனர். மேலும் ரோஹித் வெமுலா பட்டியலினத்தைச் சேர்ந்தவே இல்லை என்றும் அந்த விசாரணை அறிக்கையில் போலீஸார் தெரிவித்திருந்தனர். ஹைதராபாத் போலீஸாரின் இந்த அறிவிப்பு பரவலாக சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த அறிவிப்பு சில மணி … Read more

முன்னாள் முதல்வர் பேசும்போது மைக்கை அணைத்த ம.பி. போலீஸ் அதிகாரியை மிரட்டிய பாஜக எம்எல்ஏ

போபால்: முன்னாள் மத்தியபிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ் சவுகான் தேர்தல் கூட்டத்தில் பேசும்போது மைக்கை அணைத்த போலீஸ் அதிகாரி ஒருவரை பாஜக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான சுரேந்திர பட்வா மிரட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேச முன்னாள் முதல்வரான சிவராஜ் சவுகான், தற்போது மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் விதிஷா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட போஜ்பூர் பேரவைத் தொகுதியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் சிவராஜ் சவுகான் … Read more

ஹைதராபாத்தில் உச்ச நீதிமன்ற கிளை: தெலங்கானா காங்கிரஸ் வாக்குறுதி

தெலங்கானாவில் உள்ள 17 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 13-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தெலங்கானா மாநில காங்கிரஸ் சார்பில் தேர்தல் அறிக்கையை, கட்சியின் மேலிட பொறுப்பாளர் தீபாதாஸ் முன்ஷி நேற்று ஹைதராபாத்தில் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் ஸ்ரீதர்பாபு பேசியதாவது: காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் மாநில பிரிவினை சட்டம் முழுமையாக அமல்படுத்தப்படும். விளையாட்டு துறையை மேம்படுத்த ஹைதராபாத்தில் விளையாட்டு பல்கலைக்கழகம் அமைக்கப்படும். மேடாரம் பண்டிகைக்கு தேசிய அளவிலான அந்தஸ்து … Read more

வரலாற்றில் சந்தேகத்துக்குரிய நாடு பாகிஸ்தான்: ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் பதிலடி

புதுடெல்லி: ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் பாகிஸ்தான் தூதர் முனிர் அக்ரம், காஷ்மீர், குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் அயோத்தி ராமர் கோயில் குறித்து எதிர்மறை கருத்துகளைத் தெரிவித்தார். இதற்கு பதிலடி கொடுத்த ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்த தூதர் ருசிரா கம்போஜ் கூறியதாவது: தற்போதைய இக்கட்டான சூழலுக்கு மத்தியில் இந்த சபை அமைதிக்கான பண்பாட்டை வளர்த்தெடுக்க முயல்கிறது. ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதில் முனைப்பாக இருக்கிறோம். ஆகையால் அண்டை நாட்டு உறுப்பினர் முன்வைக்கும் கண்ணியமற்ற கருத்துக்களைக் … Read more

தார் கலவையில் எஃகு நார்கள் சேர்த்து பள்ளத்தை தானே சரிசெய்யும் சாலைகள் அமைக்க திட்டம்

புதுடெல்லி: நாட்டில் உள்ள நெடுஞ்சாலைகளை பராமரிக்க புரட்சிகர தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டு வருகிறது. நெடுஞ்சாலையில் பள்ளம், குழி ஏற்பட்டால், அவற்றை தானாக சரி செய்துகொள்ளும் வகையில் புதிய தார்கலவை பயன்படுத்தப்பட உள்ளது. இதில் எஃகு நார்கள் இருக்கும். சாலையில் பள்ளம் ஏற்பட்டவுடன் தார் கலவை மற்றும் எஃகு நார்கள் தானாக நெகிழ்ந்து பள்ளத்தை அடைத்துவிடும். ஆனால் எஃகு நார்கள் சேர்க்கப்பட்ட தார்கலவை, எவ்வளவு காலத்துக்கு தானாக பழுதுபார்க்கும் பணியை தொடரும் என தெரியவில்லை. … Read more

மேற்கு வங்க மாநில ஆளுநர் மீது பெண் ஊழியர் பாலியல் புகார்

கொல்கத்தா: மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த் போஸ் மீது ஆளுநர் மாளிகை பெண்ஊழியர் பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், பாலியல் புகார் தொடர்பாக ஆளுநர் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அரசு, மத்திய அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. இதற்கு பதிலடியாக ஆளுநர் ஆனந்த் போஸ், மாநில அரசுடன் மோதல்போக்கை கொண்டிருக்கிறார். இந்நிலையில், மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்துக்காக மேற்கு வங்கம் வந்துள்ள பிரதமர் … Read more

அனந்த்நாக் – ரஜோரி தொகுதியில் தேர்தல் ஒத்திவைப்பு: குலாம் நபி ஆசாத் வரவேற்பு

ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியின் (டிபிஏபி) தலைவர் குலாம் நபி ஆசாத் நேற்று கூறியதாவது: அனந்த்நாக்-ரஜோரி தொகுதியில் தேர்தலை ஒத்திவைக்க தேர்தல் ஆணையம் எடுத்துள்ள முடிவு அரசியல் கட்சிகளுக்கு நிம்மதி அளித்துள்ளது. இதனால் அவற்றுக்கு நல்ல பலன் கிடைக்கும். இந்த சரியான முடிவை எடுத்ததற்காக தேர்தல் ஆணையத்துக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார். பனிப்பொழிவு காரணமாக முகலாய சாலை மூடப்பட்டுள்ளது. பூஞ்ச் மற்றும் ரஜோரியை ஸ்ரீநகருடன் இணைக்கும் இந்த சாலை ஷோபியான் – பூஞ்ச் இடையிலான பயண தூரத்தை … Read more

“அச்சப்பட்டு ஓட வேண்டாம்” – ரேபரேலியில் போட்டியிடும் ராகுல் மீது பிரதமர் மோடி விமர்சனம்

புதுடெல்லி: காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி அமேதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் ரேபரேலி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனை பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது. மேற்கு வங்கத்தில் ஒரு பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) பேசிய பிரதமர் மோடி, “வயநாட்டில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தால் இளவரசர் போட்டியிட வேறு தொகுதியைத் தேடிக் கொண்டிருக்கிறார் என நான் ஏற்கெனவே சொல்லியிருந்தேன். இப்போது அமேதியிலிருந்து ஓடிப்போய் ரேபரேலியை அவர் தேர்வு செய்துள்ளார். இவர்கள்தான் ஊர் ஊராகச் … Read more

“இந்துக்களை இரண்டாம் நிலை குடிமக்களாக மாற்றி இருக்கிறது திரிணமூல் காங்.” – பிரதமர் மோடி சாடல்

கொல்கத்தா: “மேற்கு வங்கத்தில் இந்துக்களை இரண்டாம் நிலை குடிமக்களாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி மாற்றியுள்ளது” என்று பிரதமர் நரேந்திர மோடி சாடியுள்ளார். மக்களவைத் தேர்தலை ஒட்டி மேற்கு வங்கத்தின் பர்தமான் – துர்காபூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று (வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் மேற்கொண்டார். அதில் பிரதமர் மோடி பேசியது: “திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் மேடைப் பேச்சின்போது இந்துக்களை கடுமையாக சாடியுள்ளார். ‘இந்துக்களை 2 மணி நேரத்தில் பகீரதி ஆற்றில் தூக்கி வீசுவோம்’ எனக் … Read more

ஆபாச வீடியோ சர்ச்சை: எச்.டி.ரேவண்ணா மீது 2-வது எஃப்ஐஆர் பதிவு

பெங்களூரு: பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ வழக்கில் ஜனதா தளம் (எஸ்) மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சரும், பிரஜ்வலின் தந்தையுமான எச்.டி.ரேவண்ணா மீது இரண்டாவது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மைசூரு கேஆர் நகர் காவல் நிலையத்தில் ரேவண்ணா மீது இந்த இரண்டாவது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரஜ்வால் ரேவண்ணாவால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான பெண்ணை கடத்திய குற்றச்சாட்டின் பேரில் அவர் மீது இந்த எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனை சட்டப் பிரிவுகள் 376(2)(N), 506, 354A(1), … Read more