ஹாத்ரஸ் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சதி: சிறப்பு புலனாய்வு குழு விசாரணை அறிக்கையில் தகவல்

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் 121 பேரின் உயிரை பறித்த ஹாத்ரஸ் நெரிசல் சம்பவத்தின் பின்னணியில் மிகப் பெரிய சதிக்கான வாய்ப்பு இருப்பதாக சிறப்பு புலனாய்வு குழு தெரிவித்துள்ளது. உ.பி.யின் ஹாத்ரஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் கடந்த 2-ம் தேதி சாமியார் போலே பாபாவின் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி முடிந்த பிறகு போலே பாபா புறப்படும்போது ஏற்பட்ட நெரிசலில் கிக்கி 121 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்த விசாரணைக்கு ஆக்ரா ஏடிஜிபி அனுபம் … Read more

7 மாநிலங்களில் 13 பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

புதுடெல்லி: பிஹார், மேற்கு வங்கம், தமிழகம், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் ஆகிய ஏழு மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்றத் தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு புதன்கிழமை தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. மாலை 6 மணிக்கு முடிவடைய உள்ள நிலையில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்து வருகிறது மேற்கு வங்க மாநிலத்தில் ராய்கஞ்ச், ரணகாட் தக்ஷின், பாக்தா மற்றும் மணிக்தலா ஆகிய 4 தொகுதிகளிலும், இமாச்சலப் … Read more

அசாம் வெள்ள பாதிப்பு: காசிரங்கா பூங்காவில் 137 விலங்குகள் உயிரிழப்பு

நாகோன்: அசாம் மாநிலத்தில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கில் சிக்கி காசிரங்கா பூங்காவைச் சேர்ந்த 6 காண்டாமிருகங்கள் உட்பட 137 வனவிலங்குகள் உயிரிழந்தன. இதுகுறித்து காசிரங்கா தேசிய பூங்காவின் இயக்குநர் சோனாலி கோஷ் கூறியுள்ளதாவது: வெள்ள நீரில் மூழ்கி 108 மான்கள், 6 காண்டாமிருகம், ஒரு நீர்நாய் உள்ளிட்ட 137 வனவிலங்குகள் உயிரிழந்தன. அதேநேரம், 2 காண்டாமிருகம், 2 யானை, 89 மான்கள் உள் ளிட்ட 99 விலங்குகளை வெள்ளபாதிப்பிலிருந்து மீட்டுள்ளோம். பூங்காவில் உள்ள 233 முகாம்களில் 70 … Read more

ஹேமந்த் சோரன் ஜாமீனை எதிர்த்து மேல்முறையீடு: அமலாக்கத் துறை மனு தாக்கல்

புதுடெல்லி: ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் செயல் தலைவர் ஹேமந்த் சோரன் நிலமோசடி வழக்கில் கடந்த ஜனவரி 31-ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கைதாவதற்கு முன்னதாகவே, அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அவரது அரசில் அமைச்சராக பதவி வகித்து வந்த சம்பாய் சோரன், புதிய முதல்வராகத் தேர்வானார். இதனிடையே, சுமார் 5 மாதங்கள் சிறையில் இருந்த சோரனுக்குகடந்த மாதம் 28-ம் தேதி ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் ஜாமீன் … Read more

7 மாநிலங்களில் 13 தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல்: என்டிஏ – இண்டியா கூட்டணி மீண்டும் மோதல்

புதுடெல்லி: பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கும், எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணிக்கும் இடையே மீண்டுமொரு பலப்பரீட்சை இன்றுநடைபெறுகிறது. தமிழகம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அவ்விரு கூட்டணிகளும் போட்டியிட்டு தங்களது பலத்தை நிரூபிப்பதற்கு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டன. இதற்கு எந்த கூட்டணிக்கு அதிக பலன் கிடைத்து என்பது ஜூலை 13-ம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின் போது தெளிவாக தெரிந்துவிடும். மேற்கு வங்கத்தில் ராய்கஞ்ச், ரணகாட் … Read more

எமர்ஜென்சி காலத்தை நினைவுபடுத்திய ஜெகன் ஆட்சி: பாஜக எம்பி புரந்தேஸ்வரி குற்றச்சாட்டு

ராஜமுந்திரி: ஆந்திராவில் ஜெகன் ஆட்சி செய்தது எமர்ஜென்சி காலத்தை நினைவு படுத்தியது என ஆந்திர மாநில பாஜக தலைவரும், எம்.பி.யுமான புரந்தேஸ்வரி குற்றம் சாட்டியுள்ளார். ஆந்திராவில் உள்ள ராஜமுந்திரியில் நேற்று பாஜகவின் மாநில செயற்குழு கூட்டம் எம்பி புரந்தேஸ்வரி தலைமையில் நடந்தது. இதில் எம்பி புரந்தேஸ்வரி பேசியதாவது: ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியில் ஆந்திராவில் பல இந்து கோயில்கள் இடிக்கப்பட்டன. மக்கள் மேலும் பல இன்னல்களுக்கு ஆளாயினர். இதனால் அவரது ஆட்சி எமர்ஜென்சி காலத்தை நினைவுபடுத்தியது. தற்போது தெலுங்கு … Read more

முதிர்ச்சி இல்லாமல் செயல்படுகிறார் ராகுல்காந்தி: மத்திய அமைச்சர் சிவராஜ் சவுகான் குற்றச்சாட்டு

புதுடெல்லி: குழப்பம் மற்றும் பொய்களை மட்டுமே ராகுல் காந்தி பரப்புகிறார் என்று மத்திய அமைச்சர் சிவராஜ் சவுகான் கூறினார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி கடந்த சனிக்கிழமை அகமதாபாத்தில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “அயோத்தியில் பாஜகவை தோற்கடித்ததன் மூலம், பாஜக மூத்த தலைவர் அத்வானியால் தொடங்கப்பட்ட ராமர் கோயில் இயக்கத்தை இண்டியா கூட்டணி தோற்கடித் துள்ளது” என்றார். சமீபத்திய மக்களவைத் தேர்தலில் அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் தொகுதியில் பாஜக வேட்பாளரை இண்டியா கூட்டணியில் உள்ள … Read more

கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: கர்நாடக விவசாயிகள் மகிழ்ச்சி

பெங்களூரு: கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கிருஷ்ணராஜசாகர், கபினி உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கர்நாடக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கர்நாடகாவில் காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளான குடகு, மைசூரு, ஹாசன் ஆகிய மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்துவருகிறது. குடகு மாவட்டத்தில் தலக்காவிரி, பாகமண்டலா, மடிக்கேரி உள்ளிட்ட இடங்களில் இரவில் விடிய விடியகனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் காவிரிஆற்றிலும் கன்னிகா ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள‌து. குடகில் தொடரும் மழையால், … Read more

மும்பைக்கு ரெட் அலர்ட் | ரயில், விமான சேவைகள் பாதிப்பு; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை நகரில் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (செவ்வாய்க்கிழமை) மும்பை மற்றும் அதன் அருகில் அமைந்துள்ள மற்ற பகுதிகளில் கனமழை பொழியும் என ரெட் அலர்ட் கொடுத்துள்ளது. அதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பை, தானே, நவி மும்பை மற்றும் ஊரக பகுதிகளான ரத்னகிரி உள்ளிட்ட இடங்களில் இன்று (செவ்வாய்க் கிழமை) கனமழை பொழியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

கத்துவா தாக்குதலுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும்: இந்திய அரசு

புதுடெல்லி: கத்துவா மாவட்டத்தில் தீவிரவாதிகள் தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும். இதற்குப் பின்னால் உள்ள தீய சக்தியை இந்தியா நிச்சயம் முறியடிக்கும் என்று பாதுகாப்பு செயலாளர் கிரிதர் அரமானே செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலை அடுத்து, திங்கள்கிழமை பகலில் ராணுவத்தினர் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டபோது, ராணுவ வீரர்கள் சென்ற கான்வாய் வாகனங்களின் மீது தீவிரவாதிகள் கையெறி குண்டு தாக்குதல் நடத்தியதில் … Read more