பிரபல பாப் பாடகர் உஷா உதுப் கணவர் காலமானார்

புதுடெல்லி: பிரபல பாப் பாடகர் உஷா உதுப்பின் கணவர் ஜானி ஜாக்கோ மாரடைப்பு காரணமாக நேற்று (திங்கள்கிழமை) காலமானார். அவருக்கு வயது 78. ஜானியின் இறுதிச்சடங்கு கொல்கத்தாவில் ஜெய்ரோடாலாவில் இன்று (செவ்வாய்க் கிழமை) நடைபெறுகிறது. உஷா உதுப் கொல்கத்தாவில் பாலிகஞ்ச் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று (திங்கள் கிழமை) காலை வழக்கம்போல் அவர் வீட்டில் தன் கணவர் ஜானியுடன் உணவருந்தியுள்ளார். பிறகு வேலை நிமித்தமாக உஷா உதுப் மட்டும் வெளியில் கிளம்பிச் சென்றுள்ளார். சிறிது … Read more

கர்நாடக பாஜக எம்.பி. விருந்தில் மது விநியோகம்: சமூக வலைதளங்களில் வீடியோ வெளியாகி சர்ச்சை

பெங்களூரு: அண்மையில் முடிந்த மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் உள்ள சிக்கபள்ளாப்பூர் தொகுதியில் பாஜக முன்னாள் அமைச்சர் சுதாகர் வெற்றி பெற்றார். இதனால் உற்சாகம் அடைந்த அவர் தனது ஆதரவாளர்களுக்கு நேற்று முன்தினம் நெலமங்களாவில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் கறி விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். பாஜக எம்.பி. சுதாகரின் குடும்பத் தின‌ருடன் எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோகா உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் இந்த விருந்தில் கலந்து கொண்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாஜக, மஜத பிரமுகர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள், தொண்டர்கள் … Read more

2 மாத கோடை விடுமுறையில் 1,170 வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்வு

புதுடெல்லி: இந்த ஆண்டு கோடை விடுமுறையில் ​​உச்ச நீதிமன்றம் 1,170 வழக்குகளை தீர்த்து வைத்து சாதனை படைத்துள்ளது. கோடை விடுமுறைக்குப் பிறகு உச்ச நீதிமன்றம் நேற்று முதல் வழக்கம்போல் செயல்படத் தொடங்கியது. அடுத்த சிலவாரங்களில் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வுகள் தீர்ப்புகளை அறிவிக்க உள்ளன. நிர்வாகப் பணிகளைக் கையாளுவது, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் மாநாடுகளில் பங்கேற்பது ஆகிய பணிகளுக்கு மத்தியிலும் தலைமை நீதிபதி சந்திரசூட், தனது தலைமையிலான அமர்வுகளில் ஒத்திவைக்கப்பட்ட 18 வழக்குகளுக்கு தீர்ப்புகளுக்கான பணியில் ஈடுபட்டு வருகிறார். … Read more

நாடு முழுவதும் கட்டிட ஒப்பந்ததாரர் – வீடு வாங்குவோர் இடையே ஒரே சீரான ஒப்பந்தம் கொண்டுவர நீதிமன்றம் பரிந்துரை

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அஷ்வினி உபாத்யாய் 2020-ல் தாக்கல்செய்த பொதுநல வழக்கு நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு நேற்று கூறியதாவது: வீடு வாங்குவோர் மீது கட்டிட ஒப்பந்ததாரர்கள் என்னென்ன விதிகளை சுமத்துகிறார்கள் என்பதில் தெளிவான வரையறை இருக்க வேண்டும். அவர்களுக்கு இடையிலான ஒப்பந்தம் நாடு முழுவதும் ஒரே சீரான வகையில் அமைவது அவசியம். … Read more

‘நீட்’ மறுதேர்வு நடத்த உச்ச நீதிமன்றம் பரிசீலனை? – சிறப்பு குழு தீவிரமாக விசாரிக்க அறிவுறுத்தல்

புதுடெல்லி: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு பரவலாக நடந்திருந்தாலோ, தவறு செய்தவர்களை கண்டறிய முடியாவிட்டாலோ மறுதேர்வுக்கு உத்தரவிடலாம். எனினும், மறு தேர்வு எங்களது கடைசி முடிவாகவே இருக்கும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது. இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடைபெற்றது. இத்தேர்வில் 1,563 பேருக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், வினாத்தாள் கசிவு, ஆள் மாறாட்டம், 67 மாணவர்கள் முழு மதிப்பெண் … Read more

பிணைக் கைதிகள் ‘கூகுள் லொகேஷன்’ பகிர நிபந்தனை விதிக்கக் கூடாது: உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: பிணைக் கைதிகள் ‘கூகுள் லொகேஷன்’ பகிர நிபந்தனை விதிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. “பிணை கைதிகளின் இருப்பிடங்களை கண்காணிக்கும் வகையில் கூகுள் லொகேஷனை கோரவோ, பகிரவோ போலீஸாரும், நீதிமன்றங்களும் நிபந்தனை விதிக்கக் கூடாது. இது அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயல். ஜாமீனின் நோக்கத்தை முறியடிக்கும் வகையில் ஜாமீன் நிபந்தனைகள் இருக்க முடியாது. குற்றம் சாட்டப்பட்டவர்களின் நடமாட்டத்தை காவல்துறை தொடர்ந்து கண்காணிக்கலாம். ஆனால், அதற்காக குற்றம் சாட்டப்பட்டவரின் தனியுரிமையைப் பாதிக்கும் வகையில் ஜாமீன் … Read more

கனமழையால் தத்தளிக்கும் மும்பை: மக்கள் வெளியே வரவேண்டாம் என மகாராஷ்டிர முதல்வர் அறிவுரை

புதுடெல்லி: மும்பையில் கனமழை – வெள்ளத்தால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று மக்களுக்கு மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவுறுத்தியுள்ளார். மகாராஷ்டிராவின் பிற பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், மும்பையில் 6 மணி நேரத்தில் 300 மி.மீ. மழை பெய்துள்ளதால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. பேருந்து, ரயில் … Read more

“உங்கள் சகோதரனாக வந்துள்ளேன்” – மணிப்பூர் மக்களுக்கு ராகுல் காந்தி நேரில் ஆறுதல்

இம்பாலா: “நான் மணிப்பூர் விவகாரத்தை அரசியலாக்க விரும்பவில்லை. இங்கே இப்போது தேவை அமைதி மட்டுமே. வன்முறை அனைவரையும் பாதித்துள்ளது. மணிப்பூர் மக்களிடம் நான் ஒன்றை தெரிவிக்க விரும்புகிறேன். நான் இங்கே உங்கள் சகோதரனாக வந்துள்ளேன்” என்று மணிப்பூரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தார். அசாமில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அங்கிருந்து விமானம் மூலம் மணிப்பூர் தலைநகர் இம்பாலா சென்றடைந்தார். பின்னர் அங்கிருந்து சாலை … Read more

ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: 4 வீரர்கள் வீரமரணம்

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் சென்ற கான்வாய் வாகனங்களின் மீது தீவிரவாதிகள் கையெறி குண்டு தாக்குதல் நடத்தியதில் பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் வீரமரணம் அடைந்தனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலை அடுத்து, திங்கள்கிழமை பகலில் ராணுவத்தினர் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டபோது, இந்தத் தாக்குதல் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ராணுவ வீரர்களின் கான்வாய் வாகனங்களின் மீது தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி நடத்திய … Read more

‘இளநிலை நீட் தேர்வு நேர்மையாக நடக்கவில்லை’ – உச்ச நீதிமன்றம் கொந்தளிப்பு

புதுடெல்லி: இளநிலை நீட் தேர்வு நேர்மையாக நடக்கவில்லை என்று கொந்தளிப்புடன் கூறியுள்ள உச்ச நீதிமன்றம், இந்த முறைகேடு தொடர்பான விசாரணை அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. இளநிலை நீட் (NEET-UG 2024) தேர்வு கடந்த மே 5-ம் தேதி நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான மையங்களில் நடைபெற்றது. இதன் முடிவுகள் அறிவிக்கப்பட்ட தேதிக்கு 10 நாட்கள் முன்னதாக ஜூன் 4 அன்று வெளியிடப்பட்டது. இதில், 67 மாணவர்கள் முதலிடம் பெற்றிருந்தனர். இவர்களில், 10-க்கும் மேற்பட்டோர் முழு மதிப்பெண்களை … Read more