இளநிலை நீட் தேர்வு மீண்டும் நடத்தப்பட வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தல்

புதுடெல்லி: இளநிலை நீட் தேர்வு மீண்டும் நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “NEET-UG தேர்வில் வினாத்தாள்கள் எதுவும் கசியவில்லை என்று மோடி அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. லட்சக்கணக்கான இளைஞர்களை நம்ப வைக்கும் நோக்கில், அப்பட்டமான இந்த பொய் சொல்லப்படுகிறது. அரசின் இந்த முயற்சியால் அவர்களின் எதிர்காலம் பாழாகி வருகிறது. “ஒரு சில இடங்களில் மட்டுமே முறைகேடுகள் / மோசடிகள் நடந்துள்ளன” என்று … Read more

யுபிஎஸ்சி வினாத்தாள் கசிவு: பணிநீக்கம் செய்யப்பட்ட பள்ளி முதல்வரை இருக்கையில் இருந்து அகற்றிய ஊழியர்கள்

பிரயாக்ராஜ்: உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் பிஷப் ஜான்சன் பெண்கள் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப் பள்ளியின் பெண் முதல்வராக பாருல் சாலமன் இருந்துவந்தார். இந்நிலையில், பள்ளியின் தலைவர் மற்றும் ஆசிரியர்கள் சிலர் அவரது அறைக்குள் நுழைந்து, அவரை இருக்கையிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றி, புதிய முதல்வரை நியமித்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் யுபிஎஸ்சி தேர்வு அம்மாநிலத்தில் நடைபெற்றது. இப்பள்ளியும் தேர்வு மையமாக இருந்தது. இந்நிலையில் தேர்வு … Read more

காங்கிரஸில் இணைந்த பிஆர்எஸ் எம்எல்ஏ

ஹைதராபாத்: தெலங்கானாவில் கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. ரேவந்த் ரெட்டி முதல்வராக உள்ளார். தொடர்ந்து 2 முறை ஆட்சியில் இருந்த பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சி தோல்வி அடைந்தது. இந்நிலையில், பிஆர்எஸ் கட்சியின் 6 எம்எல்ஏக்கள் ஏற்கெனவே காங்கிரஸில் இணைந்தனர். இந்நிலையில், கத்வாலா பிஆர் எஸ் கட்சி எம்எல்ஏவான கிருஷ்ண மோகன் ரெட்டி நேற்று ஹைதராபாத்தில் முதல்வர் ரேவந்த் ரெட்டியின் முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தார். Source … Read more

ஹத்ராஸ் நெரிசல் சம்பவம்: டெல்லியில் கைதான முக்கிய குற்றவாளிக்கு 14 நாள் நீதிமன்ற காவல்

புதுடெல்லி: ஹாத்ரஸ் நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த விவகாரத்தில் டெல்லியில் கைதான முக்கிய குற்றவாளியை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ராஸ் மாவட்டம் புல்ராய் கிராமத்தில் கடந்த 2-ம் தேதி சாமியார் போலே பாபாவின் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக சிக்கந்திரா ராவ் போலீஸார், பாரதிய நியாயசன்ஹிதா சட்டத்தின் பிரிவான மரணம் விளைவித்தல் உள்ளிட்ட … Read more

குல்காம் துப்பாக்கிச் சூடு: 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; 2 வீரர்கள் வீரமரணம்

குல்காம்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் நடந்த இருவேறு துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதுகாப்பு படையினர் ஞாயிற்றுக்கிழமை இரண்டு தீவிரவாதிகளின் உடல்களை மீட்டுள்ளனர். இதன்மூலம் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. இதில் 6 பேர் தீவிரவாதிகள். குல்காம் தாக்குதல் குறித்து அதிகாரிகள் தரப்பில், “மோடர்காமில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்த இடத்தில் இருந்து நான்கு தீவிரவாதிகளின் உடல்களும், சின்னிகாம் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இரண்டு தீவிரவாதிகளின் உடல்களும் … Read more

“ஹாத்ரஸ் நெரிசல் சம்பவம் விபத்து இல்லை; சதி” – போலே பாபா வழக்கறிஞர் பேட்டி

புதுடெல்லி: சூரஜ்பால் என்கிற நாராயண சங்கர் ஹரி என்கிற போலே பாபா என்பவரின் சத்சங்கில் ஏற்பட்ட நெரிசல் சம்பவம் விபத்து இல்லை அது ஒரு சதிச் செயல் என்று போலே பாபாவின் வழக்கறிஞர் ஏ.பி.சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய ஏ.பி.சிங், “ஜூலை 2-ம் தேதி 121 பேர் இறப்புக் காரணமாக இருந்த நெரிசல் சம்பவம் நடைபெற்ற போது சுமார் 15 -16 பேர் முகத்தை மூடிய படி கூட்டத்தில் இருந்தனர். அவர்கள் நச்சு வாயுவை … Read more

மும்பையில் பயங்கரம்: அதிவேகமாக சென்ற பிஎம்டபிள்யூ கார் மோதி பெண் பலி

ஓர்லி: மும்பையின் ஓர்லி பகுதியில் அதிவேகமாகச் சென்ற பிஎம்டபிள்யூ சொகுசு கார் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானதில் அதில் சென்ற பெண் பலியானார், அவரது கணவர் படுகாயமடைந்தார். மும்பை போலீஸாரின் கூற்றுப்படி, ஓர்லியில் உள்ள கோலிவாடா பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் சசூன் துறைமுகப்பகுதியில் இருந்து மீன் வாங்கிக்கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அதிகாலை 5.30 மணிக்கு அட்ரியா மால் அருகே வந்த போது, வேகமாக வந்த பிஎம்டபிள்யூ சொகுசு கார் ஒன்று பின்னால் வந்து பைக் மீது … Read more

அசாம் வெள்ளம் குறித்த அமித் ஷா கருத்து: கவுரவ் கோகாய் விமர்சனம்

புதுடெல்லி: அசாம் வெள்ளம் குறித்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்து அவரின் அறிவின்மை மற்றும் நேர்மையின்மையைக் காட்டுகிறது என்று அசாம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கவுரவ் கோகாய் விமர்சித்துள்ளார். அசாம் வெள்ளம் குறித்து வெள்ளம் போன்ற சூழ்நிலை என்று அமித் ஷா கூறியதற்காக கோகாய் இவ்வாறு சாடியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் கவுரவ் கோகாய் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள பதிவில், “அசாம் வெள்ளச் சோகம் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருக்கும் கருத்து … Read more

காங்கிரஸ் முதலமைச்சரோடு தெலங்கானா பாஜக எம்பி சந்திப்பு – செம டிவிஸ்டு..!

தெலங்கானாவில் காங்கிரஸ் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை அம்மாநில பாஜக எம்பி அரவிந்த் தர்மபுரி திடீரென சந்தித்து பேசியிருப்பது அம்மாநில அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

‘ஹாத்ரஸ் சம்பவத்தில் பாரபட்சமற்ற விசாரணை வேண்டும்’ – யோகி ஆதித்யநாத்துக்கு ராகுல் காந்தி கடிதம்

லக்னோ: ஹாத்ரஸ் நெரிசல் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். பாரபட்சமற்ற விசாரணை வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். ஜூலை 6-ம் தேதியிடப்பட்ட அந்த கடிதத்தை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பகிர்ந்துள்ளார். அதில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் துயரங்களை விளக்கியுள்ள ராகுல் காந்தி, இழப்பீட்டுத் தொகையை உயர்ந்தி விரைவாக … Read more