நோயை குணப்படுத்துவதிலும், தடுப்பதிலும் இந்தியா முன்னிலை: மத்திய அமைச்சர் தகவல்

புதுடெல்லி: நோயை குணப்படுத்துவதில் மட்டுமல்லாது, நோய் வராமல் தடுப்பதிலும் இந்தியா சர்வதேச அளவில் முன்னணியில் இருப்பதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் உள்ள கல்லீரல் மற்றும் பித்தநீர் அறிவியல் கல்வி நிறுவனத்தில் இன்று (05.07.2024) நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்லீரல் தொடர்பான நோய்களைக் கட்டுப்படுத்தவும் குணப்படுத்தவும் மெய்நிகர் முறையிலான இந்தியா – பிரான்ஸ் கல்லீரல், வளர்சிதை மாற்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் வலைப்பின்னலை மத்திய அறிவியல், தொழில்நுட்ப அமைச்சக இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) ஜிதேந்திர சிங் தொடங்கி … Read more

பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் இந்தியா சாதனை வளர்ச்சி: மோடி பாராட்டு

புதுடெல்லி: 2023-24 ஆம் ஆண்டில் பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்த வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதற்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். 2023-24 ஆம் ஆண்டில் இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி இதுவரை இல்லாத வகையில் ரூ.1,26,887 கோடியாக உயர்ந்து, முந்தைய நிதியாண்டின் உற்பத்தி மதிப்பைவிட 16.8% அதிகரித்திருக்கிறது. இதனை தெரிவித்து மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த பதிவை தனது எக்ஸ் பக்கத்தில் … Read more

கேஜ்ரிவால் ஜாமீன் மனு: சிபிஐ பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: மதுபான கொள்கை முறைகேடு பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்க சிபிஐக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுபான கொள்கை முறைகேடு பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், ஏற்கனவே அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கடந்த ஜூன் 26-ம் தேதி, இதே வழக்கில் சிபிஐ அவரை கைது செய்தது. சிபிஐ கைது செய்த வழக்கில் ஜாமீன் கோரி கேஜ்ரிவால் டெல்லி உயர் … Read more

ஹாத்ரஸ் நெரிசல் சம்பவத்தில் 6 பேர் கைது: முக்கிய குற்றவாளி பற்றிய தகவலுக்கு ரூ.1 லட்சம் பரிசு

புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் போலே பாபா சாமியார் நடத்திய பிரசங்க கூட்டத்தில் நெரிசலில் சிக்கி இதுவரை 121 உயிரிழந்தனர். போலே பாபாதலைமறைவாகி விட்டதாக தெரிகிறது. போலே பாபா தனது வழக்கறிஞர் மூலம் வெளியிட்ட அறிக்கையில், “நிகழ்ச்சி முடிந்தவுடன் நான்அங்கிருந்து உடனடியாக வெளியேறி விட்டேன். அங்கு என்ன நடந்தது என எனக்கு தெரியாது. சமூகவிரோதிகள் சிலர் இந்த நெரிசல் சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர்” என்று கூறியுள்ளார். போலே பாபாவின் வழக்கறிஞர்ஏ.பி.சிங் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “உ.பி. … Read more

பிஹாரில் பாலங்களை ஆய்வு செய்ய கோரி வழக்கு

புதுடெல்லி: பிஹாரில் 15 நாட்களில் 10 பாலங்கள் இடிந்து விழுந்துள்ள நிலையில் மாநிலம் முழுவதும் பாலங்களின் உறுதித் தன்மையை ஆராய உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. பிஹாரில் சிவான், சரண், மதுபானி, அராரியா, கிழக்கு சம்பரன்,கிஷன்கஞ்ச் ஆகிய மாவட்டங்களில் கடந்த 15 நாட்களில் 10 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன. பிஹாரில் கடந்த இரு வாரங்களாக பெய்துவரும் கனமழை காரணமாகவே பாலங்கள் பலமிழந்து இடிந்து விழுந்ததாக கூறப்பட்டாலும், பாலங்களை குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை பிஹார் … Read more

எல்பிஜி மானியம் தொடர்பாக முக்கிய முடிவை எடுக்கும் மத்திய அரசு?

2024-25 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மொத்த எரிபொருள் மானியம் ரூ.11,925 கோடியாக இருக்கும் என்று தெரிவித்து இருந்தார்.

ஹாத்ரஸ் கூட்ட நெரிசல் சம்பவம்: ராகுல் காந்தி நேரில் ஆறுதல்

ஹாத்ரஸ்: உத்தரபிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் போலே பாபா சாமியார் நடத்திய பிரசங்க கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 121 உயிரிழந்தனர். இந்தச் சூழலில் இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் குடும்பத்தினரை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று (வெள்ளிக்கிழை) நேரில் சந்தித்து ஆறுதல் கூறிவருகிறார். கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 2) அன்று ஹாத்ரஸ் மாவட்டத்தின் சிக்கந்தரராவ் தாலுகாவின் முகல்கடி கிராமத்தில் போலே பாபா சாமியாரின் பிரசங்க கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு … Read more

மணமகளை விட அதிகம் ஜொலித்த இஷா அம்பானி… அப்படி என்ன அவரின் காஸ்ட்யூமில் ஸ்பெஷல்?

Isha Ambani Piramal Viral Costume: ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வு ஒன்றில், முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி அணிந்த ஆடை தற்போது வைரலாகி வருகிறது. 

5 மாத சிறைவாசத்துக்கு பிறகு மீண்டும் ஜார்க்கண்ட் முதல்வர் ஆனார் ஹேமந்த் சோரன்

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தின் 13-வது முதல்வராக ஹேமந்த் சோரன் நேற்று மீண்டும் பதவியேற்றார். ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நிலம் வாங்கிய விவகாரத்தில், முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் நிதி மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்தது. எந்நேரத்திலும் அவர் கைது செய்யப்படலாம் என்ற சூழலில், முதல்வர் பதவியை அவர் கடந்த ஜனவரி 31-ம் தேதி ராஜினாமா செய்தார். அன்றைய தினமே அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவரது கட்சியை சேர்ந்த சம்பய் சோரன் முதல்வராக … Read more

சேதமான கார்கள்… மயங்கி விழுந்த பெண் – இந்திய அணியின் ரோட் ஷோவால் ஏற்பட்ட பாதிப்புகள்!

Team India Roadshow: இந்திய கிரிக்கெட் அணியின் ரோட் ஷோவுக்கு பின்னர், அது நடைபெற்ற மரைன் டிரைவ் சாலையில் நின்ற பல்வேறு கார்கள் சேதமடைந்திருக்கின்றன. மக்கள் கூட்டத்தால் ஏற்பட்ட சேதங்களை இங்கு காணலாம்.