ஏப்.26 இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தல் நாளில் பெரிய அளவில் வெப்ப அலை நிலவாது: ஐஎம்டி

புது டெல்லி: மக்களவைத் தேர்தலில் இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி நடைபெறவுள்ள வாக்குப்பதிவின் போது பெரிய அளவில் வெப்ப அலை நிலவாது என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைமை இயக்குநர் தெரிவித்துள்ளார். 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வானிலை நிலவரம் இயல்பாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நாட்டின் சில பகுதிகளில் இயல்பான வெப்பநிலை மற்றும் வெப்ப … Read more

“இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் முழு ஆதரவு” – மம்தா பானர்ஜி

கொல்கத்தா: “இண்டியா கூட்டணி வென்று மத்தியில் ஆட்சிக்கு வந்தால் முழு ஆதரவு தருவோம்” என மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கூறியுள்ளார். மேற்கு வங்க மாநிலம் ராய்கஞ்ச் என்ற இடத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பேரணி நடந்தது. இதில் பங்கேற்று பேசிய திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, “இண்டியா கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சிக்கு வந்தால் திரிணமூல் காங்கிரஸ் முழு ஆதரவு … Read more

கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் கோரிய சட்ட மாணவருக்கு ரூ.75,000 அபராதம்

புதுடெல்லி: டெல்லி மதுப்பான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைபட்டுள்ள முதல்வர் கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் கோரிய பொதுநல வழக்கை தள்ளுபடி செய்ததோடு, அதைத் தாக்கல் செய்த சட்ட மாணவருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது டெல்லி உயர் நீதிமன்றம். டெல்லி யூனியன் பிரதேசத்தில் மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் ரூ.2,800 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அமலாக்கத் துறைவழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. … Read more

பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் புகார்

சென்னை: தேர்தல் விதிமுறைகளை மீறி வெறுப்பு பேச்சுக்களை பேசியதாக பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் புகார் அளித்துள்ளது. ராஜஸ்தானில் பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மக்களிடம் உள்ள தங்கம் மற்றும் சொத்துகள் எல்லாவற்றையும் பறித்து ஊடுருவல்காரர்களுக்கு கொடுத்துவிடும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொருவரின் சொத்துகள் கணக்கிடப்படும் என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் என்ன சொன்னார்… … Read more

கர்நாடக பல்கலைக்கழக மாணவி கொலை சம்பவம்: கண்ணீருடன் கை கூப்பி மன்னிப்பு கோரிய குற்றவாளியின் தந்தை

பெங்களூரு: கர்நாடக பல்கலைக்கழகத்தில் படித்து வந்த நேஹா என்ற மாணவியை சக மாணவர் ஃபயாஸ் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், கொலையாளி ஃபயஸின் தந்தை பாபா சாஹேப் சுபானி தனது மகனின் செயலுக்காக இருகரம் கூப்பி மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹுப்ளியைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி நிரஞ்சன் ஹிரேமத். தார்வாட் மாநகராட்சியில் காங்கிரஸ் கவுன்சிலராக உள்ளார். இவரது மகள் நேஹா ஹிரேமத், ஹுப்பள்ளியில் … Read more

“காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்…” – மோடியின் பேச்சும், ராகுல் காந்தி எதிர்வினையும்!

ஜெய்ப்பூர்: “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாட்டின் செல்வம் ஊடுருவல்காரர்களுக்குப் பகிர்ந்து கொடுக்கப்படும்” என்று ராஜஸ்தான் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு இடையே வார்த்தைப் போருக்கு வித்திட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடந்த கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மக்களிடம் உள்ள தங்கம் மற்றும் சொத்துகள் எல்லாவற்றையும் பறித்து ஊடுருவல்காரர்களுக்கு கொடுத்துவிடும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொருவரின் சொத்துகள் கணக்கிடப்படும் என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி … Read more

நாடு முழுவதும் நடந்து வரும் மக்களவை தேர்தலில் இருந்து எதிர்காலத்துக்கான புதிய பயணம் தொடக்கம்: பிரதமர் மோடி

புதுடெல்லி: ‘‘உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான மக்களவை தேர்தல் நடந்து வருகிறது. இதில் இருந்து எதிர்காலத்துக்கான புதிய பயணம் தொடங்கும் என நம்புகிறேன்’’ என்று பிரதமர் மோடி தெரிவித்தார். பகவான் மகாவீர் 2,550-வது ஜெயந்தி விழா டெல்லியில் உள்ளபாரத மண்டபத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது: நமது நாடு விரக்தியில் இருந்த கால கட்டத்தில் கடந்த 2014-ம் ஆண்டு பாஜக தலைமையிலான அரசு பொறுப்பேற்றது. அப்போது முதல் நமது தேசத்தின் … Read more

வானிலை அறிக்கை… இந்தியாவில் ‘இந்த’ மாநிலங்களில் கடும் வெப்ப அலை வீசும்…!

India Weather Forecast: இந்தியாவில் தற்போது வெப்பம் நிலவி வருவதாகவும், அடுத்த 4-5 நாட்களில் இது மேலும் அதிகரிக்கலாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மூத்த விஞ்ஞானி டாக்டர் நரேஷ் குமார் தெரிவித்தார்.

பலத்த பாதுகாப்பு | மணிப்பூரில் 11 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது

இம்பால்: மணிப்பூரில் பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் இரண்டு மாவட்டங்களில் உள்ள 11 வாக்குச்சாவடிகளில் இன்று (ஏப்.22) காலை 7 மணிக்கு மறுவாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மணிப்பூரில் சமவெளி பகுதியில் பெரும்பான்மையாக வசிக்கும் மைதேயி சமூகத்தினருக்கும் மலைப் பகுதிகளில் வசிக்கும் குகி-சோ பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் மோதல் ஏற்பட்டு, இனக்கலவரமாக வெடித்தது. இந்தக் கலவரத்தில் 210-க்கும்மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் இடம் பெயர்ந்துள்ளனர். மாநிலத்தில் அமைதி இன்னும் முழுமையாக திரும்பவில்லை. இந்நிலையில், மணிப்பூரில் உள் … Read more

இலவச திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும்: ஆர்பிஐ முன்னாள் கவர்னர் வலியுறுத்தல்

புதுடெல்லி: இலவச திட்டங்கள் குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் சுப்பாராவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சுப்பாராவ் கூறியிருப்பதாவது: இந்தியா போன்ற நாடுகள், நலிந்த நிலையில் உள்ள மக்களை பாதுகாக்கும் நோக்கில் இலவசத் திட்டங்களைக் கொண்டு வருகின்றன. ஆனால், அந்தத் திட்டங்களின் செலவினங்கள் குறித்து மக்களிடம் புரிதல் ஏற்படுத்துவது அரசின் கடமை. அதேபோல், இலவச திட்ட அறிவிப்பு தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு சில கட்டுப்பாடுகளையும் விதிக்க வேண்டும். சில … Read more