இஸ்ரோ – நாசா இணைந்து உருவாக்கிய நிசார் செயற்கைக்கோள் இன்று ஏவப்படுகிறது!

சென்னை: புவி கண்காணிப்புக்காக நாசாவுடன் இணைந்து உருவாக்கிய நிசார் செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலமாக இஸ்ரோ இன்று மாலை (ஜூலை 30) விண்ணில் செலுத்துகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் (நாசா) சேர்ந்து பூமியின் மேற்பரப்பு மாற்றங்களை கண்காணிப்பதற்காக நிசார் (NASA-ISRO Synthetic Aperture Radar) என்ற செயற்கைக்கோளை ரூ.12,000 கோடியில் வடிவமைத்துள்ளன. பல்வேறுகட்ட சோதனைகள் முடிந்த நிலையில் நிசார் செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி எப்-16 ராக்கெட் மூலமாக ஸ்ரீஹரிகோட்டாவில் … Read more

குடியரசு தலைவருக்கு கால நிர்ணயம் செய்த தீர்ப்பை எதிர்த்த வழக்கு: ஆக.19 முதல் விசாரணை தொடக்கம்

சென்னை: மசோதா மீது முடிவெடுக்க கால நிர்ணயம் செய்த தீர்ப்பை எதிர்த்து குடியரசுத் தலைவர் எழுப்பிய கேள்விகள் மீதான வழக்கு ஆக.19-ம் தேதி முதல் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா. ஆர். மகாதேவன் அமர்வு, “மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்க ஆளுநர், குடியரசு தலைவருக்கு மூன்று மாத காலம் என்ற … Read more

உலகின் எந்த தலைவரும் போரை நிறுத்தவில்லை: மக்களவையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான விவாதத்தில் பிரதமர் மோடி உறுதி

புதுடெல்லி: உலகின் எந்த தலைவரும் போரை நிறுத்தவில்லை என்று ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான சிறப்பு விவாதத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி உறுதிபடத் தெரிவித்தார். மக்களவையில் நேற்று முன்தினம் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதம் தொடங்கியது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் பல்வேறு எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் பேசினர். அவர்களுக்கு பதில் அளித்து பிரதமர் மோடி நேற்று பேசியதாவது: ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை 140 கோடி இந்தியர்களும் கொண்டாடுகின்றனர். இது இந்திய ராணுவத்தின் மிகப்பெரிய வெற்றியாகும். ஆபரேஷன் சிந்தூரின்போது … Read more

“ஆபரேஷன் சிந்தூரின்போது படைகளின் கைகளை அரசே கட்டிப்போட்டது” – மக்களவையில் ராகுல் காந்தி சாடல்

புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, நமது படைகளின் கைகளை அரசே கட்டிப்போட்டுள்ளது என்று மக்களவையில் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்ற மக்களவையில் பேசியது: “ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்படுவதற்கு முன்பே, நமது பாதுகாப்புப் படைகளுடனும் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அரசுடனும் பாறையைப் போல் உறுதியாக நிற்போம் என்று அனைத்து எதிர்க்கட்சிகளும் உறுதி அளித்தன. நான் எந்த ராணுவ வீரருடன் கைகுலுக்கும்போதும் அவரை நாட்டுக்காக போராட … Read more

“அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா அடிபணியாது என்பதை நிரூபித்தோம்!” – மக்களவையில் பிரதமர் மோடி பதிலுரை

புதுடெல்லி: “ஆபரேஷன் சிந்தூர் மூலம் அணு ஆயுத மிரட்டல் இனி வேலை செய்யாது என்பதை இந்தியா நிரூபித்துள்ளது. அதோடு, பாகிஸ்தானின் பல விமானப் படைத் தளங்கள் இப்போது வரை ஐசியுவில் உள்ளன” என மக்களவையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், எதிர்க்கட்சிகள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக நாடாளுமன்ற மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியது: “ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காமில் நடந்தது கொடுமையின் உச்சம். … Read more

மகளிர் உதவித்தொகை: பெண்கள் போல நாடகமாடி பணம் பெற்ற 14,000 ஆண்கள்! விவரம் என்ன?

Maharashtra Ladki Bahin Yojana Scam : மகாராஷ்டிராவில் பெண்கள் பெயரில் பல ஆயிரம் ஆண்கள் அரசின் உதவித்தாெகையை பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்த முழு விவரம், இதோ.  

“இந்தியாவை ஒரு கோழை நாடாக நிறுத்தி இருக்கிறீர்கள்!” – மக்களவையில் சு.வெங்கடேசன் எம்.பி காட்டம்

புதுடெல்லி: “சோழர்களுடைய போர் திறனையும் ஆபரேஷன் சிந்தூரையும் இணைத்துப் பேசியிருக்கிறார் பிரதமர் மோடி. ராஜ ராஜனோ, ராஜேந்திர சோழனோ அவன் தொடங்கிய போரை அவன்தானே முடித்து வைத்தானே தவிர பக்கத்து நாட்டு மன்னன் வந்து முடித்து வைக்கவில்லை. மோடி தொடங்கிய ஆபரேஷன் சிந்தூரை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முடித்து வைத்ததாக 25 முறை சொன்னார். ராஜராஜன் போரை பக்கத்து நாட்டு மன்னன் முடித்ததாக சொல்லியிருந்தால், முதலில் அவன் கதையை முடித்திருப்பான் ராஜ ராஜ சோழன்” என்று மக்களவையில் … Read more

'உலகின் எந்த தலைவரும் இந்தியாவின் தாக்குதலை நிறுத்த சொல்லவில்லை…' பிரதமர் மோடி பேச்சு

PM Narendra Modi: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்த நாடாளுமன்ற விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி தற்போது பதிலுரை ஆற்றி வருகிறார். 

Bihar SIR | பெருமளவில் வாக்காளர்களை நீக்கினால் உடனடியாக தலையிடுவோம்: உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: பிஹார் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் பெருமளவில் நீக்கப்பட்டால் நாங்கள் உடனடியாக அதில் தலையிடுவோம் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில் பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி (SIR) நடைபெற்று வருகிறது. இந்த திருத்தப் பட்டியல் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் … Read more

'தமிழன் ஒருநாள் கங்கையை வெல்வான்…' மக்களவையில் கனிமொழி அனல் பறக்க பேச்சு!

Kanimozhi: கங்கைகொண்ட சோழன் கங்கையை வென்றான், தமிழன் ஒருநாள் கங்கையை வெல்வான் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என நாடாளுமன்றத்தில் கனிமொழி பேசி உள்ளார்.