சண்டிகர் மேயர் தேர்தலில் நடந்தது ஜனநாயகக் கேலிக்கூத்து: உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

புதுடெல்லி: சண்டிகர் மேயர் தேர்தலில் நடந்தது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் சம்பவம் என உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அதோடு, ஜனநாயகத்தை படுகொலை செய்யும் செயலாகப் பார்ப்பதாக உச்சநீதிமன்றம் கருத்து கூறியுள்ளது. சண்டிகர் மேயர் தேர்தல் ஜனவரி 30-ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில், அதில் சில குளறுபடிகள் நடந்திருப்பதாக ஆம் ஆத்மி கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கை இன்று விசாரித்த இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் மனோஜ் … Read more

தாமதமின்றி ஓய்வூதியம் வழங்காவிடில் கோட்டை நோக்கி போராட்டம்: காமராசர் பல்கலை. ஓய்வூதியர் சங்கம் எச்சரிக்கை

மதுரை: மாதம்தோறும் தாமதமின்றி ஓய்வூதியம் வழங்கவில்லை என்றால், கோட்டை நோக்கி போராட்டம் தொடரும் என காமராசர் பல்கலைக்கழக ஓய்வூதியர்கள் சங்க நிர்வாகிகள் எச்சரித்துள்ளனர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வூதியம் பெறும் 1202 பேரில், 484 பேர் குடும்ப ஓய்வூதியமும், 240 பேர் நிர்வாக ஓய்வூதியமும் பெறுகின்றனர். இந்தப் பல்கலையில் மாதந்தோறும் சம்பளம், ஓய்வூதியம் வழங்குவதில் தொடர்ந்து நிதி நெருக்கடி உள்ளது. கடந்த 2 மாதமாகவே ஓய்வூதியம் வழங்கவில்லை. இதை கண்டித்தும், ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தியும் பல்கலை … Read more

தேர்தல் பிரச்சாரத்திற்கு எந்த வகையிலும் குழந்தைகளைப் பயன்படுத்த கூடாது: தேர்தல் ஆணையம்

Loksabha election 2024: மக்களவைத் தேர்தல் தேதிகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு முன்னதாக தேர்தல் ஆணையம் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

‘டார்கெட் தென்னிந்தியா' – பாஜகவின் மிஷன் எடுபடுமா? – ஒரு பார்வை

டார்கெட் தென்னிந்தியா… பாஜகவின் புதிய பிளான் என்ன? மக்களவைத் தேர்தலில் தென்னிந்தியாவில் பாஜக நிலை என்ன? வாக்கு வங்கி அதிகரிக்க பாஜக வைத்திருக்கும் திட்டங்கள் என்னென்ன? இம்முறை தென் மாநிலங்களில் வெற்றியைப் பதிவு செய்யுமா பாஜக? – இதோ ஒரு விரைவுப் பார்வை. இந்திய அளவில் பல மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. ஆனால், தென்னிந்தியாவில் கர்நாடக, ஆந்திரா, தெலங்கானா, கேரளா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் பாஜகவால் தடம் பதிக்க முடியவில்லை. குறிப்பாக, கர்நாடக மாநிலத்தில் கடந்த … Read more

அசாமில் மத பிரச்சாரம் செய்த 2 அமெரிக்கர்களுக்கு தலா 500 டாலர் அபராதம்

குவாஹாட்டி: அசாமில் கிறிஸ்தவ மதத்தை அனுமதியின்றி பரப்ப முயன்றதாக 2 அமெரிக்கர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு 500 டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. அசாம் மாநிலம் சோனிட்பூர் மாவட்டம் திஸ்பூர் பகுதியில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதாக அப்பகுதி மக்கள் போலீஸில் புகார் செய்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் காலையில் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் 2 அமெரிக்கர்களை கைது செய்தனர். இதுகுறித்து சோனிட்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுசந்த பிஸ்வா சர்மா கூறும்போது, “சுற்றுலா விசா … Read more

ஜார்கண்ட் | நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு வெற்றி – பெரும்பான்மையை நிரூபித்தார் சம்பய் சோரன்

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் சம்பய் சோரன் அரசு வெற்றி பெற்றுள்ளது. 47 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் சம்பய் சோரன் பெரும்பான்மை பலத்தை நிரூபித்தார். ஜார்க்கண்ட் மாநில முதல்வராக சம்பய் சோரன் பதவியேற்றதை அடுத்து, அம்மாநில சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அரசுக்கு ஆதரவாக மற்றும் எதிராக உள்ளவர்கள் எழுந்து நிற்க சொல்லி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. முதலில் அரசுக்கு ஆதரவாக உள்ளவர்கள் எழுந்து நிற்குமாறு சபாநாயகர் கோரினார். பின்னர் அரசுக்கு எதிராக … Read more

கொலைப்பசி… பூனையை பச்சையாக சாப்பிட்ட நபர்… மருத்துவமனையில் அனுமதி

Cat Raw Meat Eater In Kerala: கேரளாவில் சில நாள்களாக உணவு இல்லாமல் கடும் பசியில் இருந்ததால் அவர் பூனை கறியை பச்சையாக சாப்பிட்ட பகீர் சம்பவம் நடந்துள்ளது.

“ஆதாரம் கொடுத்தால் அரசியலில் இருந்து விலகுகிறேன்” – பாஜகவுக்கு ஹேமந்த் சோரன் சவால்

ராஞ்சி: “என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் கொடுத்தால் அரசியலில் இருந்தே விலகத் தயார்.” என்று ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார். நீண்ட இழுபறிக்குப் பிறகு ஜார்க்கண்ட் முதல்வராக சம்பய் சோரன் பதவியேற்றுக் கொண்டுள்ளதை அடுத்து ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. சம்பய் சோரனுக்கு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்), காங்கிரஸ், ஆர்ஜேடி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 46 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. 81 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் பெரும்பான்மை … Read more

பாஜகவில் இணைய அழைப்பு வந்தது: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மீண்டும் குற்றச்சாட்டு

புதுடெல்லி: பாஜகவில் இணைய தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது என்றும் ஆனால், ஒரு போதும் செல்ல மாட்டேன்’’ என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறினார். டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்க்க தனது எம்எல்ஏக்கள் 7 பேருக்கு தலா ரூ.25 கோடி கொடுக்க பாஜக முன்வந்தது என முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சமீபத்தில் கூறினார். இந்த குற்றச்சாட்டை மறுத்த பாஜக,டெல்லி போலீஸில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் கல்வி அமைச்சர் ஆதிஷி ஆகியோர்மீது புகார் அளித்தது. மேலும், … Read more

இன்று நாடாளுமன்ற மக்களவையில் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

Narendra Modi Speech in Parliament: குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பதில் அளிக்கும் உரையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் கடந்த 10 ஆண்டு கால சாதனைகளை குறித்து, மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.