ஒய்.எஸ்.ஆர் வாரிசு யார்? – தொண்டர்களின் கொதிப்பும், ஷர்மிளாவின் பதிலடியும் @ ஆந்திர அரசியல்

கடப்பா: சமீபத்தில் ஆந்திர மாநிலம் கடப்பாவில் நடந்த காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் அக்கட்சியின் புதிய மாநிலத் தலைவர் ஷர்மிளா பேசுகையில், “நான் ஒய்.எஸ்.ஷர்மிளா ரெட்டி, என் மகன் ஒய்.எஸ்.ராஜா ரெட்டி. நான் ஒய்.எஸ்.ஆரின் ரத்தம். கடப்பா மாவட்டத்தில் உள்ள ஜம்மலமடுகுவில் முதல்வர் ஜெகன் பிறந்த அதே மருத்துவமனையில்தான் நானும் பிறந்தேன். ஜெகன் உடம்பில் பாயும் அதே ரத்தம் என்னுடைய உடம்பிலும் பாய்கிறது. ஜெகன் முதல்வரான பிறகு, தனக்கு ஆதரவாக நின்ற 18 காங்கிரஸ் எம்எல்ஏக்களை ஓரங்கட்டி விட்டார். … Read more

பட்ஜெட்டில் ஜனரஞ்சக அறிவிப்புகள் இல்லாதது ஏன்? – நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்

புதுடெல்லி: பட்ஜெட்டில் ஜனரஞ்சக அறிவிப்புகள் இல்லாதது ஏன் என்ற கேள்விக்கு, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது, நாடாளுமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில், தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட்டில் வருமான வரி உச்சி வரம்பை உயர்த்துவது போன்ற ஜனரஞ்சக அறிவிப்புகள் இடம்பெறாதது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த … Read more

கியான்வாபி மசூதி பாதாள அறையில் இந்துக்கள் வழிபட இடைக்கால தடை விதிக்க அலகாபாத் ஐகோர்ட் மறுப்பு

புதுடெல்லி: வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதியின் தரைத்தளத்தின் கீழ் உள்ள பாதாள அறையில் இந்துக்கள் வழிபாடு நடத்த வாரணாசி நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க அலகாபாத் உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தை ஒட்டி உள்ள கியான்வாபி மசூதி, கோயிலை இடித்து கட்டப்பட்டது என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த மசூதிக்குள் உள்ள கோயிலின் அர்ச்சகருடைய வாரிசுதாரர் சைலேந்திர குமார் பதக் என்பவர் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். … Read more

பட்ஜெட் உரையில் மிடிள் கிளாசுக்கு சூசகமாக குட் நியூஸ் சொன்ன நிதி அமைச்சர்: நோட் பண்ணீங்களா?

Budget 2024: மக்களின் முழு ஆதரவுடன் வரும் தேர்தலிலும் தங்கள் கட்சியே பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என நம்பிக்கை தெரிவித்த நிதி அமைச்சர், ஆட்சிக்கு வந்தால் தாங்கள் திட்டமிட்டுள்ள பல நலத்திட்டங்கள் பற்றியும் குறிப்பு காட்டியுள்ளார்.

ஹேமந்த் சோரனை 5 நாள் காவலில் விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதி

ராஞ்சி: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு ராஞ்சி நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. நிலமோசடி தொடர்பான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்த புதன் கிழமை அமலாக்கத் துறை ஹேமந்த் சோரனிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்தியது. 7 மணி நேர விசாரணைக்கு பிறகு, புதன்கிழமை இரவு 8.30 மணி அளவில் அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்து, தங்கள் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். … Read more

“பாஜக ஆதரவு மத்திய அமைப்புகளின் பழிவாங்கும் செயல்” – ஹேமந்த் சோரன் கைதுக்கு மம்தா கண்டனம்

கொல்கத்தா: ஜார்க்கண்ட மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டிருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “இது பாஜக ஆதரவு மத்திய அமைப்புகளின் பழிவாங்கும் செயல்” என்று விமர்சித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெள்ளிக்கிழமை மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள பதிவில், “சக்திவாய்ந்த ஒரு பழங்குடியினத் தலைவரான ஹேமந்த் சோரன் அநியாயமாக கைது செய்யப்பட்டிருப்பதற்கு எனது கடுமையான கண்டனங்களைத் தெரிவிக்கிறேன். இது பாஜக ஆதரவு மத்திய அமைப்புகளின் பழிவாங்கும் செயல், … Read more

மத்திய அரசின் சோலார் திட்டம்… 300 இலவச மின்சாரம்… முழு விவரம் இதோ!

Rooftop Solar Scheme: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நேற்று தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில், மத்திய அரசின் சோலார் மின்சார திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ஜார்க்கண்ட் முதல்வராக பதவியேற்றார் சம்பாய் சோரன்

ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வராக சம்பாய் சோரன் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா துணைத் தலைவரும் ஹேமந்த் சோரன் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவருமான சம்பாய் சோரன் முதல்வராக இன்று பதவியேற்றுக்கொண்டார். ராஞ்சியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன், சம்பாய் சோரனுக்கு பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வராக செயல்பட்டு … Read more

“வட இந்திய மாநிலங்கள் பின்தங்கியதற்கு காங்கிரஸே காரணம்” – டி.கே.சுரேஷுக்கு மத்திய அமைச்சர் பதிலடி

புதுடெல்லி: வட இந்திய மாநிலங்கள் பின் தங்கியதற்கு காங்கிரஸ் கட்சியே காரணம் என்று மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கர்நாடகாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பி டி.கே. சுரேஷ், வட இந்தியாவில் இருந்து தென் இந்தியாவை தனி நாடாக பிரிக்க வேண்டி வரும் எனக் கூறி இருக்கிறார். ஒரு பக்கம் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை என்ற பெயரில் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அதேநேரத்தில், … Read more

கொரியர்களின் பாட்டி இராமருக்கு பேத்தி! கொரிய சாம்ராஜ்ஜியத்தை ஆண்ட அயோத்தி இளவரசி!

Indian Princess Suriratna Alias Korean Empress: அயோத்தி ராமர் கோவில் பிராணபிரதிஷ்டை நிகழ்ச்சியை லட்சக்கணக்கான தென்கொரியர்கள் பார்த்ததற்குக் காரணம் என்ன தெரியுமா?