இந்தியா வரும் GOAT மெஸ்ஸி… எந்தெந்த ஊருக்குச் செல்கிறார்? சோகத்தில் கேரள ரசிகர்கள்!

Lionel Messi India Tour: கால்பந்து ஜாம்பவானும், அர்ஜென்டினா வீரருமான லியோனல் மெஸ்ஸியின் இந்திய சுற்றுப்பயணம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அது உறுதியாகி உள்ளது. டிசம்பர் மாதத்தில் மெஸ்ஸியின் இந்த இந்திய சுற்றுப்பயணத்திற்கு ‘GOAT Tour of India 2025’ என பெயரிடப்பட்டுள்ளது. Messi India Tour: தென்னிந்திய ரசிகர்கள் சோகம் இந்தியாவில் முதல் நகரமாக கொல்கத்தாவுக்கு அவர் வருகை தர உள்ளார். அதைத் தொடர்ந்து அகமதாபாத், மும்பை மற்றும் புது டெல்லிக்கு அவர் … Read more

Asia Cup 2025: சுப்மன் கில்லை தொடர்ந்து.. இந்த வீரருக்கும் ஆசிய கோப்பையில் இடமில்லை?

இந்திய அணி சமீபத்தில் இங்கிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வந்தது. தற்போது ஆசிய கோப்பையை நோக்கிதான் அவர்களது பயணம் உள்ளது. அத்தொடருக்கான இந்திய அணியை தேர்வ்ய் செய்யும் முணைப்பில்தான் பிசிசிஐ உள்ளது. அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளதால், ஆசிய கோப்பை டி20 வடிவில் நடைபெற இருக்கிறது. உலகக் கோப்பைக்கு இது ஒரு முன்னோட்டமாக பார்க்கப்படுவதால், இந்திய அணியை பலமாக தேர்வு செய்ய வேண்டும் என டி20 அணியின் … Read more

சூர்யகுமார் யாதவ் தான் கேப்டன்… ஆனால் இந்த 3 வீரர்களுக்கு வாய்ப்பில்லை!

Asia Cup 2025, Team India: செப்டம்பர் 9ஆம் தேதி நடக்கும் ஆசிய கோப்பை 2025 தொடர், வரும் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி மற்றும் துபாயில் தொடங்குகிறது. இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் ஆகிய அணிகள் ஏ பிரிவிலும்; இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.  வரும் செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்கும் ஆசிய கோப்பை தொடர் இறுதிப்போட்டி வரும் செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறுகிறது. பெரிதும் … Read more

CSK கேப்டன் ருதுராஜ் செய்க்வாட்டின் கீழ் விளையாடபோகும் ப்ரித்வி ஷா.. என்ன மேட்டர்?

திறமைவாய்ந்த கிரிக்கெட் வீரர் ப்ரித்வி ஷா, சமீபத்தில் அவரது பயணத்தில் பெரும் சரிவை சந்தித்தார். கிட்டத்தட்ட அவரது கிரிக்கெட் வாழ்க்கையே முடிந்துவிட்டதாக பலரும் நினைத்தனர். அவர் மேல் பல குற்றச்சாட்டுகளும் இருந்தன. ஆனால் தற்போது தனது தவறுகளை உணர்ந்து ஒரு தீர்க்கமான முடிவை அவர் எடுத்ததாக கூறப்படுகிறது.  ப்ரித்வி ஷா உள்ளூர் அணியான மும்பை அணிக்காக விளையாடி வந்த நிலையில், திடீரென அந்த அணியை விட்டு விலகினார். 17 வருடங்களாக மும்பை அணியுடனான பந்தத்தை ப்ரித்வி ஷா … Read more

2008லேயே ஓய்வு பெற வேண்டியது.. தோனிதான் காரணம் – சேவாக் பரபரப்பு!

இந்திய அணியின் அதிரடி வீரராக கருதப்பட்டவர் வீரேந்திர சேவாக். இவர் பந்துகளை பவுண்டரிகளுக்கு அனுப்ப அதிகம் விரும்பக்கூடியவர். குறிப்பாக முதல் பந்திலேயே பவுண்டரி அடிப்பவர் என்ற பெயர் பெற்றவர். இவர் 104 டெஸ்ட் மற்றும் 251 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். இதில் சேவாக் சுமார் 17000 ரன்களை குவித்திருக்கிறார். மொத்தமாக 38 சர்வதேச சதங்கள் மற்றும் 70 அரைசதங்களும் அடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 ரன்களை அடித்த முதல் வீரர் என்ற பெயர் பெற்றவர். அதே … Read more

ஆஸி.க்கு எதிரான 2-வது டி20: தென் ஆப்பிரிக்க ஆல் ரவுண்டருக்கு தண்டனை.. காரணம் என்ன..?

டார்வின், ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவும், 2-வது போட்டியில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்ற நிலையில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இதனையடுத்து இந்த தொடரின் முடிவை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி வரும் 16-ம் தேதி நடைபெற உள்ளது. டி20 போட்டிகள் நிறைவடைந்தவுடன் ஒருநாள் தொடர் வரும் 19-ம் … Read more

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்த பாகிஸ்தான்.. விளாசிய முன்னாள் வீரர்

லாகூர், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்ற நிலையில், 2 மற்றும் 3-வது போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதன் மூலம் 34 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் வென்று அசத்தியது. 1991-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் வெல்வது … Read more

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய முன்னாள் ஆக்கி வீரர் வெஸ் பெயஸ் மரணம்

கொல்கத்தா, பிரபல டென்னிஸ் வீரர் லியாண்டரின் தந்தையும், முன்னாள் ஆக்கி வீரருமான வெஸ் பெயஸ் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 80. 1972-ம் ஆண்டு முனிச்சில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய ஆக்கி அணியில் வெஸ் பெயஸ் இடம் பெற்றிருந்தார். இவர் கடுமையான பார்கின்சன் நோயின் தாக்குதலுக்கு ஆளானதுடன் வயது மூப்பு பிரச்சினைகளாலும் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் அவரது உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து கொல்கத்தாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டார். … Read more

முதலில் ஒரு பேட்ஸ்மேனாக விராட் கோலியிடம்.. ரவி சாஸ்திரி புகழாரம்

மும்பை, இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி கடந்த மே மாதம் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து விடைபெற்றார். இந்திய அணிக்காக கடந்த 2011-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆன அவர் 123 போட்டிகளில் விளையாடி அதில் 30 சதம் உட்பட 9,230 ரன்கள் குவித்துள்ளார். மேலும் 68 போட்டிகளில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ள விராட் அதில் 40 போட்டிகளை வென்று கொடுத்து இந்திய அணிக்காக அதிக வெற்றிகளை பெற்றுக்கொடுத்த … Read more

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ்: ஒரு சுற்று மீதம்.. சாம்பியன் பட்டத்தை உறுதி செய்த ஜெர்மனி வீரர்

சென்னை, 3-வது சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி சென்னை தேனாம்பேட்டையில் நடந்து வருகிறது. 9 சுற்றுகள் கொண்ட இந்த போட்டி மாஸ்டர்ஸ், சேலஞ்சர்ஸ் என இரு பிரிவாக நடத்தப்பட்டு வருகிறது. இதில் நேற்று 8-வது சுற்று ஆட்டங்கள் நடந்தன. அதன்படி மாஸ்டர்ஸ் பிரிவில் நடந்த ஜெர்மனியின் வின்சென்ட் கீமர்- ஜோர்டான் வான் பாரஸ்ட் (நெதர்லாந்து) இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது. அதேபோல் இந்திய வீரர்களான அர்ஜூன் எரிகைசி – விதித் குஜராத்தி இடையிலான ஆட்டமும் சமனில் … Read more