முதலில் ஒரு பேட்ஸ்மேனாக விராட் கோலியிடம்.. ரவி சாஸ்திரி புகழாரம்

மும்பை, இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி கடந்த மே மாதம் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து விடைபெற்றார். இந்திய அணிக்காக கடந்த 2011-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆன அவர் 123 போட்டிகளில் விளையாடி அதில் 30 சதம் உட்பட 9,230 ரன்கள் குவித்துள்ளார். மேலும் 68 போட்டிகளில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ள விராட் அதில் 40 போட்டிகளை வென்று கொடுத்து இந்திய அணிக்காக அதிக வெற்றிகளை பெற்றுக்கொடுத்த … Read more

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ்: ஒரு சுற்று மீதம்.. சாம்பியன் பட்டத்தை உறுதி செய்த ஜெர்மனி வீரர்

சென்னை, 3-வது சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி சென்னை தேனாம்பேட்டையில் நடந்து வருகிறது. 9 சுற்றுகள் கொண்ட இந்த போட்டி மாஸ்டர்ஸ், சேலஞ்சர்ஸ் என இரு பிரிவாக நடத்தப்பட்டு வருகிறது. இதில் நேற்று 8-வது சுற்று ஆட்டங்கள் நடந்தன. அதன்படி மாஸ்டர்ஸ் பிரிவில் நடந்த ஜெர்மனியின் வின்சென்ட் கீமர்- ஜோர்டான் வான் பாரஸ்ட் (நெதர்லாந்து) இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது. அதேபோல் இந்திய வீரர்களான அர்ஜூன் எரிகைசி – விதித் குஜராத்தி இடையிலான ஆட்டமும் சமனில் … Read more

2025 ஆசிய கோப்பை தொடர்.. ஜஸ்ப்ரீத் பும்ரா விளையாடுவாரா? மாட்டாரா?

Jasprit Bumrah: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா தற்போது 2025-ஆம் ஆண்டு நடைபெறும் ஆசிய கோப்பை டி20 தொடரில் விளையாடுவாரா என்பதே பெரும் கேள்வி ஆகி இருக்கிறது. இவர் கடந்த காலங்களில் பலவீனங்கள் மற்றும் பணிச்சுமை காரணமாக அதிக போட்டிகளில் விளையாடாமல் ஓய்வெடுக்கவும் செய்தவர். எனினும், புதுப்பிக்கப்பட்ட தகவல்கள் படி அவர் அடுத்த மாதம் செப்டம்பர் 9-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் … Read more

இந்திய டி20 அணியில் இருந்து சுப்மன் கில் நீக்கம் – கவுதம் கம்பீர் அதிரடி!

2026ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் டி20 உலகக்கோப்பைக்கு முன்னால் நடைபெறும் 2025 ஆசியக் கோப்பைக்கு செப்டம்பர் மாதம் இந்தியா போட்டியாகும். அந்த அணியின் தேர்வில் பிசிசிஐ, தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர், பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் கலந்து ஆலோசித்து வருகின்றனர்.  சுப்மன் கில் தற்போது டி20 போட்டியில் தொடக்க வீரராக விளையாடினாலும், அவரது பவர் பிளே பரபரப்பில் விரக்தி காணப்படுகிறதை கவுதம் கம்பீர் கவனித்து வருகிறார். … Read more

ஒருநாள் போட்டியில் இருந்தும் ஓய்வு.. விராட் கோலி சூசக பதில்!

Virat Kohli ODI Retirement: விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா கடந்த மே மாதம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தனர். இவர்கள் ஏற்கனவே சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்திருந்ததால், இனி ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடுவார்கள். இந்த சூழலில் கடந்த சில நாட்களாகவே விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் ஒருநாள் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து கிரிக்கெட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. விரைவில் அவர்களது ஒருநாள் கிரிக்கெட்டும் முடிவுக்கு வரலாம் என்றும் … Read more

டெவால்ட் பிரெவிஸை CSK வாங்கியது எப்படி? 2, 3 அணிகள் போட்டியாம்!

Dewald Brevis: நடந்த முடிந்த 2025 ஐபிஎல் தொடரின் பாதியில்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேபி ஏபிடி என அழைப்படும் டெவால்ட் பிரெவிஸை வாங்கியது. சிஎஸ்கே அணியின் பந்து வீச்சாளர் சூர்ஜப்னீத் சிங்கிற்கு காயம் ஏற்பட்டதன் காரணத்தால், அவருக்கு மாற்று வீரராக சிஎஸ்கே அணி பிரெவிஸை தேர்வு செய்தது. 6 போட்டிகளில் விளையாடிய இவர் 225 ரன்களை குவித்தார். இவரது பங்களிப்பு சென்னை அணிக்கு ஓரளவு உதவியது என்றே கூறலாம்.  இரண்டு, மூன்று அணிகள் போட்டி … Read more

சஞ்சு சாம்சனை மஞ்சள் சட்டையில் பார்க்க முடியாது, ராஜஸ்தான் அணியின் ரகசிய ஒப்பந்தம்..!!

Sanju Samson ; ஐபிஎல் 2026 ஏலத்துக்கு முன்பாக சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணியில் இருந்து விலகி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வருவார் என கூறப்பட்ட நிலையில், அதுவும் இப்போது கேள்விகுறியாகியுள்ளது. சஞ்சு சாம்சனை டிரேட் செய்ய மூன்று பிளேயர்களை ராஜஸ்தான் கேட்டுள்ளது. ஆனால், அந்த மூன்று பிளேயர்களையும் கொடுக்க சிஎஸ்கே மறுத்துவிட்டதால், சஞ்சு சாம்சனின் டிரேடில் இழுபறி நீடிக்கிறது. ஜடேஜா அல்லது ருதுராஜ் கெய்க்வாட் அல்லது ஷிவம் துபே ஆகியோரில் ஒருவரை ராஜஸ்தான் கேட்டுள்ளது. … Read more

ஒருநாள் தரவரிசை: ரோகித் சர்மா 2வது இடத்துக்கு முன்னேற்றம்

துபாய், ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பேட்டர்கள் தரவரிசையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ்- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரையடுத்து ஐசிசி தரவரிசையை வெளியிட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பாபர் அசாம் 3 போட்டிகளில் 56 ரன்கள் மட்டுமே அடித்தார்.இதனால் 751 புள்ளிகளுடன் 3ஆவது இடத்திற்கு சரிந்துள்ளார். ரோகித் சர்மா 756 புள்ளிகளுடன் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஒருநாள் பேட்டர்கள் தரவரிசையில் 784 புள்ளிகளுடன் இந்திய துணை கேப்டன் சுப்மன் … Read more

2030 காமன்வெல்த் தொடரை இந்தியாவில் நடத்துவதற்கான முயற்சிக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் ஒப்புதல்

புதுடெல்லி, 24-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி 2030-ம் ஆண்டு நடைபெற உள்ளது. 2036-ல் நடைபெற ஒலிம்பிக் தொடரை நடத்தும் வாய்ப்பை பெற இந்தியா முயற்சித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த காமன்வெல்த் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கான முயற்சிக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் போட்டிகளை நடத்தப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பிடம் இந்தியா தனது விண்ணப்பத்தை விரைவில் சமர்ப்பிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா ஏற்கனவே 2010-ம் ஆண்டில் … Read more

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: யூகி பாம்ப்ரி ஜோடி அதிர்ச்சி தோல்வி

சின்சினாட்டி, பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடி, ஆஸ்திரியாவின் லூகாஸ் மெய்ட்லர்- போர்ச்சுகல்லின் பிரான்சிஸ்கோ கேப்ரால் ஜோடி உடன் மோதியது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் யூகி பாம்ப்ரி ஜோடி 6-3 6-7 (1-7), 4-10 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது. இதனால் யூகி பாம்ப்ரி ஜோடி … Read more