இங்கிலாந்து தொடரில் இந்த 3 வீரர்கள் தான் மிகவும் முக்கியம்! யார் யார் தெரியுமா?

ஐபிஎல் தொடர் முடிவடைந்துள்ள நிலையில் அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்கள் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டிகளுக்காக காத்துக் கொண்டுள்ளனர். இங்கிலாந்தில் நடைபெற உள்ள ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டி வரும் ஜூன் 20ஆம் தேதி முதல் தொடங்குகிறது. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா போன்ற சீனியர் வீரர்கள் இல்லாமல் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. காரணம் இவர்கள் இருவரும் சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து … Read more

கோப்பையை வென்று இருந்தாலும் ஆர்சிபி அணி கழட்டிவிடும் 5 வீரர்கள்!

கிட்டத்தட்ட 17 வருட போராட்டங்களுக்குப் பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தங்களது முதல் ஐபிஎல் கோப்பையை இந்த ஆண்டு வென்றுள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற பரபரப்பான இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ஆர்சிபி அணி கோப்பையை வென்றுள்ளது. இதன் மூலம் தங்களது நீண்ட நாள் கனவை நிறைவேற்றி உள்ளது ஆர்சிபி. இந்த ஆண்டு ஆர்சிபி அணி கோப்பையை வெல்வதற்கு பலரும் உறுதுணையாக இருந்தனர், குறிப்பாக பௌலிங் மிகவும் சிறப்பாக அமைந்தது. புவனேஸ்வர் குமார், க்ருனால் … Read more

தைவான் தடகள ஓபன் 2025: தங்க பதக்கம் வென்றார் ஜோதி யர்ராஜி

புதுடெல்லி, சீன தைபேவில், தைவான் தடகள ஓபன் 2025-ம் ஆண்டுக்கான போட்டிகள் நேற்று (சனிக்கிழமை) தொடங்கின. இதில், இந்தியாவின் நடப்பு ஆசிய சாம்பியனான ஜோதி யர்ராஜி பங்கேற்று சாதனை படைத்துள்ளார். அவர் 100 மீட்டர் மகளிர் தடை ஓட்ட போட்டியில், 12.99 விநாடிகளில் பந்தய இலக்கை கடந்து உள்ளார். அவருக்கு தொடக்கம் சரியாக அமையாத நிலையில், 2-வது இடத்திற்கு பின்னுக்கு தள்ளப்பட்டார். எனினும், விடாமல் தொடர்ந்து முன்னேறி, கடைசி 20 மீட்டர் இருக்கும்போது, முதல் இடம் பிடித்துள்ளார். … Read more

பெங்களூரு கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகை ரூ.25 லட்சமாக அதிகரிப்பு

பெங்களூரு , குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டி கடந்த 3-ந்தேதி நடந்தது. இதில் பஞ்சாப் கிங்சை தோற்கடித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி.) அணி முதல் முறையாக கோப்பை வென்று மகுடம் சூடியது. அதற்கு மறுநாள் (4-ந்தேதி) பெங்களூரு விதானசவுதாவில் விராட் கோலி உள்ளிட்ட வீரர்களுக்கு கர்நாடக அரசு சார்பில் பாராட்டு விழாவும், சின்னசாமி ஸ்டேடியத்தில் வெற்றிக் கொண்டாட்டமும் நடைபெற்றது. இதில், லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் … Read more

டி.என்.பி.எல்.: திருச்சியை வீழ்த்தி நெல்லை ராயல் கிங்ஸ் வெற்றி

கோவை, 9-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் கோவையில் உள்ள எஸ்.என்.ஆர் கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெற்ற 3வது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் – திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற நெல்லை அணியின் கேப்டன் அருண் கார்த்திக் பந்துவீச்சை தேர்வு செய்தார் . அதன்படி முதலில் பேட்டிங் செய்த திருச்சி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் அடித்தது. நெல்லை தரப்பில் கடைசி … Read more

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: பரபரப்பான ஆட்டத்தில் சபலென்காவை வீழ்த்தி கோகோ காப் சாம்பியன்

பாரீஸ், ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் நம்பர் 1 வீராங்கனையான அரினா சபலென்கா (பெலாரஸ்), கோகோ காப் (அமெரிக்கா) உடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் 2 செட்டுகளை ஆளுக்கொன்றாக கைப்பற்றினர். இதனால் 3-வது செட் பரபரப்புக்குள்ளானது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற 3-வது செட்டை கோகோ காப் கைப்பற்றினார். பரபரப்பான … Read more

டி.என்.பி.எல்.: சோனு யாதவ் ஹாட்ரிக்.. திருச்சி அணி 157 ரன்கள் சேர்ப்பு

கோவை, 9-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் கோவையில் உள்ள எஸ்.என்.ஆர் கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் 3வது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் – திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற நெல்லை அணியின் கேப்டன் அருண் கார்த்திக் பந்துவீச்சை தேர்வு செய்தார் . அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய திருச்சி அணிக்கு ஆரம்பம் சரியாக அமையவில்லை. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன சுஜய் 12 ரன்களிலும், ஜெயராமன் … Read more

ஐபிஎல் 2025 தொடரில்… பதிவான 5 தனித்துவமான சாதனைகள்

IPL 2025 Five Records: 18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி முதல் ஜூன் 3ஆம் தேதிவரை நடைபெற்றது. 10 அணிகள் மோதிய இந்த தொடரில் பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டனஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் பிளே ஆப் தொடருக்கு தகுதிபெற்றன.  IPL 2025: 18 ஆண்டுகளுக்கு பின் ஆர்சிபிக்கு கோப்பை… இந்த ஐபிஎல் 2025 தொடர் பல்வேறு விஷயங்களில் சிறப்பானதாகும். குறிப்பாக, 18 ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு … Read more

ரோஹித் சர்மா ஓய்வு பெற்றால்… இந்திய ஓடிஐ அணியின் அடுத்த கேப்டன் யார்…?

Shreyas Iyer: இந்திய அணியில் தற்போது சுக்கிரன் யாருக்கு உச்சத்தில் இருக்கிறது என கேட்டால் கோடிக்கணக்கானவர்கள் ஒரே விதமாக சொல்வது ஒருவரின் பெயரைதான்… அது ஷ்ரேயாஸ் ஐயர்தான். இவர் தனது கிரிக்கெட் வாழ்வின் 2வது உச்சத்தை அனுபவித்து வருகிறார் எனலாம். Shreyas Iyer: உச்சத்தில் இருந்த ஷ்ரேயாஸ் ஐயர் ஷ்ரேயாஸ் ஐயர் 2014ஆம் ஆண்டிலேயே முதல்தர போட்டிகளில் விளையாடத் தொடங்கிவிட்டார். 2015ஆம் ஆண்டில் இருந்து டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். 2017ஆம் ஆண்டில் … Read more

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் போட்டி விளையாடுவார் – ஆஸி பிளேயர் சொன்ன முக்கிய தகவல்

Virat Kohli retirement Update : இந்தியாவின் ஜாம்பவான் பேட்ஸ்மேன் விராட் கோலி சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். டெஸ்ட் போட்டியில் இருந்து விராட் கோலி ஓய்வு பெற்றதாக அவர் அறிவித்ததில் இருந்து ரசிகர்கள் இன்னும் அதிர்ச்சியில் உள்ளனர். ஏனென்றால், விராட் கோலி 10,000 டெஸ்ட் ரன்களுக்கு மிக அருகாமையில் இருக்கிறார். அப்படி இருக்கும் சமயத்தில் அவர் திடீரென்று டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். விராட் கோலி இந்தியாவுக்காக … Read more