IPL Suspended: பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல்! கோப்பை யாருக்கு வழங்கப்படும்?

இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் கடந்த மார்ச் மாதம் தொடங்கி நடைபெற்று வந்தது. இன்னும் இந்த சீசனில் 16 போட்டிகள் மீதம் உள்ள நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தின் காரணமாக தற்காலிகமாக ஐபிஎல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இது குறித்து பிசிசிஐ மத்திய அரசிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. தரம்சாலாவில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு … Read more

பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டிகள் யு.ஏ.இ-க்கு மாற்றம்

கராச்சி, 6 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது பாகிஸ்தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல் 11-ந் தேதி தொடங்கி ராவல்பிண்டி, கராச்சி, முல்தான், லாகூர் ஆகிய 4 நகரங்களில் நடந்து வருகிறது. வருகிற 18-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இதில் ராவல்பிண்டி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடக்க இருந்த 27-வது லீக் ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ்-பெஷாவர் ஜால்மி அணிகள் மோத இருந்தன. … Read more

பஞ்சாப் – டெல்லி போட்டி நிறுத்தப்பட உண்மை காரணம் என்ன? – விளக்கம் அளித்த பி.சி.சி.ஐ

தர்மசாலா, இமாசலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் நேற்று இரவு 7.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. தர்மசாலாவில் மழை பெய்ததால் போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. மழை நின்றதும் போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார் . அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. பஞ்சாப் அணி 10.1 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் … Read more

IPL 2025 : தரம்சாலாவில் பயத்தில் தவிக்கும் கிரிக்கெட் வீரர்கள், மிகப்பெரிய குட்நியூஸ் கொடுத்த மத்திய அரசு

இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏறத்தாழ ஆரம்பக்கட்ட போர் மூண்டுவிட்டது. பாகிஸ்தான் தொடர்ச்சியாக அத்துமீறி தாக்குதல்களை தொடர்ந்து வருவதால் இந்தியா தக்க பதலடி கொடுத்து வருகிறது. வியாழக்கிழமை மாலை திடீரென பாகிஸ்தான் எல்லையில் பல்வேறு இடங்களில் வரிசையாக தாக்குதல்களை நடத்தியது. இதனால், தரம்சாலாவில் நடைபெற்றுக் கொண்டிருந்த பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி திடீரென பாதியிலேயே நிறுத்தப்பட்டது. எல்லையோர பகுதிகளில் பிளாக்அவுட் திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியதால் இப்போட்டியை கட்டாயம் நிறுத்த வேண்டியதாக … Read more

ஐபிஎல் 2025 போட்டிகள் அதிரடியாக நிறுத்தம்! மீண்டும் தொடங்கும் தேதி என்ன?

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவில் பொது மக்களின் மீது தாக்குதல் நடத்திய நிலையில் இந்தியா நேற்று பதில் தாக்குதல் நடத்தியது. அதில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்த தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இதனை தொடர்ந்து பாகிஸ்தான் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்த தொடங்கியது, அதனை இந்திய ராணுவம் தொழில்நுட்பத்தின் உதவியுடன் தடுத்து நிறுத்தி உள்ளது. தற்போது இந்தியாவின் … Read more

பாதியில் நின்ற ஐபிஎல் போட்டி… வெளியேறும் பார்வையாளர்கள்… போர் பதற்றம் காரணமா?

IPL 2025: ஐபிஎல் தொடரில் ஹிமாச்சல் மாநிலம் தரம்சாலா மைதானத்தில் தற்போது நடைபெற்ற பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், போட்டி நிறுத்தப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் எதிரொலி.. ஐபிஎல் போட்டியில் மாற்றம் செய்த பிசிசிஐ!

ஐம்மு காஷ்மீரின் பகல்காமில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இதில் அப்பாவி பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து இந்தியா பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. குறிப்பாக சிந்து நதி நீருக்கு தடை, வர்த்தக நிறுத்தம் உள்ளிட்டவைகளை நிறுத்தியது.  இச்சூழலில் நேற்று (மே 07) இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அதிரடியாக தாக்குதல் நடத்தி ஏராளமான தீவிரவாதிகளை கொன்று குவித்தது. இந்த ராணுவ … Read more

ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் அவசர அவசரமாக ஓய்வை அறிவித்தது ஏன்? பின்னணி

Rohit Sharma Test retirement :இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா புதன்கிழமை (மே 7) மாலை திடீரென டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அவரது முடிவு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. ஐபிஎல் 2025 தொடர் நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ரோகித் சர்மா வெளியிட்ட ஓய்வு முடிவை யாரும் எதிர்பார்க்கவில்லை. தான் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதை ரோகித் சர்மா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார். இதன் பிறகு கிரிக்கெட் வட்டாரத்தில் … Read more

விக்கெட் கீப்பிங்கில் புதிய சாதனை படைத்த தோனி

கொல்கத்தா, கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்றிரவு நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை – கொல்கத்தால் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக, இந்த ஆட்டத்தில் சென்னை அணியின் விக்கெட் கீப்பர் தோனி, சுனில் நரினை ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழக்கச் செய்தார். இதே போல் ரகுவன்ஷி (1 ரன்) அடித்த பந்தையும் கேட்ச் செய்தார். இதையும் சேர்த்து விக்கெட் கீப்பிங்கில் 153 கேட்ச், 47 … Read more

CSK: மாற்றத்தால் கிடைத்த வெற்றி.. இத முன்னாடியே பண்ணிருக்கலாம்?

2025 ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுமோசமாக விளையாடி எலிமினேட் ஆகி உள்ளது. 12 போட்டிகளில் 9 தோல்விகளை பெற்றுள்ளது. இதுவரையில் எந்த ஒரு சீசனிலும் இவ்வளவு மோசமாக சென்னை அணி செயல்பட்டது இல்லை.  தொடரின் தொடக்கத்தில் தோல்விகளை பெற்றபோதே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால் எதற்கு செவி … Read more