டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல் வீரர்…சாதனை படைத்த ஷகிப் அல் ஹசன்

டாக்கா, வங்கதேச அணியின் ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் ஒரு மிகப்பெரிய சாதனையைப் படைத்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை அவர் எட்டியுள்ளார். வெஸ்ட் இண்டீசில் நடந்து வரும் கரீபியன் பிரீமியர் லீக்கில் (சிபிஎல்) ஆன்டிகுவா மற்றும் பார்புடா பால்கன்ஸ் அணியில் விளையாடும் ஷகிப், கடந்த 24-ம் தேதி நடந்த ஆட்டத்தில் செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணி பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வானை அவுட்டாக்கினார். இதன் மூலம் டி20 போட்டிகளில் 500 விக்கெட்டுகள் … Read more

இவர்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையா? சிங்கிள் ஆக சுற்றும் வீரர்கள்!

இந்திய கிரிக்கெட் அணியில், பல வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தால் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களைகவர்ந்துள்ளனர். இவர்களில் பலர் தங்களது வாழ்க்கை துணையைத் தேர்ந்தெடுத்து, திருமண பந்தத்தில் இணைந்துள்ள நிலையில், இன்னும் சில வீரர்கள் மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர்களாக வலம் வருகின்றனர். இந்திய அணியின் அதிரடி வீரர் ரிங்கு சிங், எம்.பி. பிரியா சரோஜ் என்பவரை இந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்ய உள்ள நிலையில், சில காரணங்களால் அந்த திருமணம் தள்ளி போயுள்ளது. ரிங்கு சிங்கின் … Read more

நேஷன்ஸ் கோப்பை கால்பந்து: இந்திய அணி அறிவிப்பு

பெங்களூரு, மத்திய ஆசிய கால்பந்து சங்கம் சார்பில் நேஷன்ஸ் கோப்பை கால்பந்து போட்டி தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தானில் வருகிற 29-ந் தேதி முதல் செப்டம்பர் 8-ந் தேதி வரை நடக்கிறது. இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஈரான், ஆப்கானிஸ்தான் உள்பட 8 அணிகள் களம் இறங்குகின்றன. இந்த போட்டிக்கான இந்திய கால்பந்து அணியை புதிய தலைமை பயிற்சியாளர் காலித் ஜமில் நேற்று அறிவித்தார். அவர் பொறுப்பேற்ற பிறகு இந்திய அணி பங்கேற்கும் முதல் போட்டி இதுவாகும். மூத்த … Read more

தோனி 2013லேயே வி.கீ., பயிற்சியை நிறுத்தியும்.. மின்னல் வேகத்தில் ஸ்டேம்பிங் செய்ய இதுதான் காரணம்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவரான எம்.எஸ். தோனி, சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் விக்கெட் கீப்பிங் பயிற்சியில் முழுமையாக இருந்து விடுத்துள்ளார் என்று இந்திய அணியின் முன்னாள் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதர் சமீபத்தில் வெளிப்படுத்தியுள்ளார். தோனி தனது மின்னல் வேக ஸ்டம்பிங்கும், அசாதாரணமான கேட்ச்களும், அசத்திய கேப்பிங் தொழில்நுட்பத்தினாலும் cricket உலகின் பிரபலமான ஹீரோவாக உள்ளார். வழக்கமான பயிற்சியில் ஈடுபடாமல் கூட அவரின் திறமை … Read more

டைட்டில் ஸ்பான்சரில் இருந்து விலகிய டிரீம் 11.. புதிய ஸ்பான்சரை தேடும் பி.சி.சி.ஐ.

புதுடெல்லி, இளைஞர்கள், ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி லட்சக்கணக்கில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் அவ்வப்போது நடந்தன. இதற்கு முடிவு கட்டும் வகையில் மத்திய அரசு சமீபத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை மக்களவையில் நிறைவேற்றியது. இதையும் மீறி யாராவது ஆன்லைன் சூதாட்டம் நடத்தினால் 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 கோடி வரை அபராதமும் விதிக்கப்படும் என மசோதாவில் கூறப்பட்டுள்ளது. ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும், அதனால் பி.சி.சி.ஐ.யின் … Read more

டெஸ்ட்டில் இருந்து ஓய்வு.. இதுதான் காரணம்.. மனம் திறந்த ரோகித் சர்மா!

கடந்த 12 ஆண்டுகளாக இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரராக திகழ்ந்தவர் ரோகித் சர்மா. சேவாக்கிற்கு பிறகு தொடக்க வீரராக அதிரடியை காட்டி எதிரணியை பயமுறுத்தியவர் என கூறலாம். அவர் கடந்த 2007ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமானார். இதுவரை 273 ஒருநாள் போட்டிகள், 159 டி20 போட்டிகள், 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மொத்தம் 19000 ரன்களுக்கு மேலாக குவித்துள்ளார்.  இந்த சூழலில், ரோகித் சர்மா கடந்த ஆண்டு நடந்து டி20 உலகக் கோப்பையை வென்றதை … Read more

ஆசிய கோப்பையை நம்பி கேப்டன்சி வாய்ப்பை நிராகரித்த ஸ்ரேயாஸ் ஐயர் ..?

மும்பை, அடுத்த மாதம் துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான (20 ஓவர்) இந்திய அணி சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தொடருகிறார். துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் அந்த அணியில் ஸ்ரேயாஸ் ஐயர், ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு இடம் இல்லாதது விமர்சனத்திற்குள்ளானது. குறிப்பாக சமீப காலமாக வெள்ளைப்பந்து போட்டிகளில் அசத்தலான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்படாதது பலரது மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி … Read more

புஜாரா இடத்தில் இந்த வீரரா? பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு!

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் நம்பர் 3 பேட்டிங் வரிசையில் ராகுல் டிராவிட் நீண்ட நாட்கள் நிலைத்து இருந்தார். அவருக்கு பிறகு அந்த இடத்தை சட்டேஸ்வர் புஜாரா சிறப்பாக கையாண்டார். அவரின் பேட்டிங் அணுகுமுறை, இந்திய அணிக்கு உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பல சரித்திர வெற்றிகளை தேடி தந்துள்ளது. 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 19 சதங்கள் உட்பட 7195 ரன்கள் அடித்துள்ளார் புஜாரா. இப்படி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்த புஜாரா,சமீபத்தில் தனது … Read more

ஓய்வு பெற்ற புஜாரா! பிசிசிஐ-யிடம் இருந்து மாதம் எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்?

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் நவீன தடுப்புச் சுவர் என்று அழைக்கப்படும் சட்டேஸ்வர் புஜாரா இந்த வாரம் தனது ஓய்வை அறிவித்தார். 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய கிரிக்கெட் அணியில், குறிப்பாக டெஸ்ட் அணியில் விளையாடி வந்தார் புஜாரா. தனது அசைக்க முடியாத பொறுமையாலும், நுட்பமான பேட்டிங் மூலம் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர் புஜாரா. இந்திய அணியில் இடம் பெற்று ஓய்வு பெரும் அனைத்து வீரர்களுக்கும் பிசிசிஐ மாதாந்திர ஓய்வூதியம் வழங்குகிறது. அந்த வகையில், இந்திய … Read more

ஆசிய கோப்பை 2025: "இந்த அணியில் இந்த 2 வீக்னெஸ் இருக்கு?".. நோட் பண்ணீங்களா?

2025 ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. 8 நாடுகள் பங்கேற்கும் இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், யுஏஇ, ஓமன் ஆகிய அணிகள் ‘A’ குழுவிலும், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் ‘B’ குழுவிலும் இடம்பெற்றுள்ளன. இந்தியா vs பாகிஸ்தான் போட்டி செப்டம்பர் 14ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது. சமீப காலத்தில் பாகிஸ்தான் அணி பல தோல்விகளை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக பாபர் அசாம், … Read more