IPL 2024: கேகேஆர் அணிக்கு எதிராக சிஎஸ்கே எதிர்கொள்ளப்போகும் சவால்கள் இவைதான்!

Chennai Super Kings vs Kolkata Knight Riders: ஐபிஎல் 2024 சீசன் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளன. நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மொத உள்ளனர்.  சென்னை அணிக்கு இது ஒரு முக்கியமான போட்டியாக உள்ளது.  ஏனெனில் கடைசியாக விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து உள்ளது சென்னை அணி. மேலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதுவரை விளையாடியுள்ள மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. … Read more

சூர்யகுமார் யாதவ் வந்ததால் மும்பை அணியில் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள்!

ஞாயிற்றுக்கிழமை இன்று நடைபெறும் ஐபிஎல் 2024 போட்டியில் மதிய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகிறது.  ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணி இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது.  இந்நிலையில் இன்று தனது நான்காவது போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் விளையாடுகிறது.  இன்றைய போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் மும்பை வீரர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் விதமாக … Read more

விராட் கோலி அடித்த மிக மோசமான சதம்! ஆர்சிபி அணியின் தோல்விக்கு காரணமா?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி சதமடித்திருந்தாலும், அது அவரின் மோசமான சதமாக அமைந்தது. இதுவரை அவர் அடித்த சதங்களிலேயே மிகவும் மெதுவாக அடிக்கப்பட்ட, கூடுதல் பந்துகளில் அடிக்கப்பட்ட சதமாக அது அமைந்தது என்பதால், இந்த சதத்தை விராட் கோலி மீண்டும் நினைத்துக்கூட பார்க்க மாட்டார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை 8 சதங்கள் அடித்திருக்கும் விராட், 67 பந்துகளில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக சதத்தை பூர்த்தி செய்தார். விராட் கோலியே விரும்பமாட்டார் இது … Read more

சர்வதேச பேட்மிண்டன் போட்டி: அனுபமா, தருண் சாம்பியன்

அஸ்டானா, கஜகஸ்தான் சர்வதேச சேலஞ்ச் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள உரால்ஸ்க் நகரில் நடந்தது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை அனுபமா உபாத்யாயா 21-15, 21-16 என்ற நேர்செட்டில் சக நாட்டு வீராங்கனை இஷாராணி பரூவாவை 41 நிமிடங்களில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார். உத்தரகாண்டை சேர்ந்த 19 வயதான அனுபமா இந்த ஆண்டில் வென்ற 2-வது சர்வதேச பட்டம் இதுவாகும். இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் தருண் மன்னிபாலி 21-10, … Read more

ஐ.பி.எல் 2024 – மும்பை உடனான போட்டி குறித்து டெல்லி அணி வீரர் டேவிட் வார்னர் பதிவு… இணையத்தில் வைரல்

17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் நாளை (ஏப்ரல் 7) மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ள 20-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. நடப்பு ஐ.பி.எல் தொடரில் விளையாடிய 3 ஆட்டங்களிலும் தோல்வி கண்டு புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் மும்பை அணி உள்ளது. இழந்த இடத்தை மீண்டும் பிடிக்க மும்பை அணிக்கு கட்டாயம் ஒரு வெற்றி பெற்றாக வேண்டும். காயம் காரணமாக கடந்த … Read more

பாண்டியா இல்லாத நேரம் பார்த்து மும்பை அணியுடன் இணைந்த சூர்யகுமார்! ரோகித் ரியாக்ஷன்

ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வியை தழுவியது. ஏப்ரல் 7 ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் டெல்லி கேப்பிட்டலஸ் அணிக்கு எதிராக நான்காவது போட்டியில் விளையாட இருக்கிறது. இப்போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது மும்பை அணி. குட்நியூஸாக காயத்தில் இருந்து மீண்ட சூர்யகுமார் யாதவ் மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்துள்ளார். அவர் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்க இருக்கிறார். இதில் கவனிக்க … Read more

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது ஆக்கி போட்டி இன்று நடக்கிறது

பெர்த், பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் பொருட்டு இந்திய ஆக்கி அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது போட்டி பெர்த்தில் நேற்று நடந்தது. இதில் தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலிய அணிக்கு ஈடுகொடுக்க முடியாமல் இந்திய அணி திணறியது. முடிவில் இந்திய அணி 1-5 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வி அடைந்தது. ஆஸ்திரேலிய … Read more

சோம்நாத் கோயிலில் பாண்டியா வைத்த வேண்டுதல்! மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெறுமா?

மும்பை இந்தியன்ஸ் அடுத்த போட்டி ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17ஆவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், மும்பை இந்தியன்ஸ் விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் 10ஆவது இடத்தில் உள்ளது. கடந்த 1 ஆம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மோசமான தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியைத் தொடர்ந்து வரும் 7 ஆம் தேதி மும்பையில் டெல்லி அணியை எதிர்கொள்கிறது. பாண்டியா சிறப்பு பூஜை இந்தப் போட்டிக்கு முன்னதாக … Read more

சதம் அடித்து அசத்திய ஜோஸ் பட்லர்: பெங்களூருவை வீழ்த்திய ராஜஸ்தான் அணி

ஜெய்ப்பூர், 10 அணிகள் இடையிலான 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு ஜெய்ப்பூரில் நடந்த 19-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொண்டது. ராஜஸ்தான் அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. பெங்களூரு அணியில் அனுஜ் ராவத்துக்கு பதிலாக அறிமுக வீரராக சவுரவ் சவுகான் இடம் பிடித்தார். ‘டாஸ்’ ஜெயித்த ராஜஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த … Read more

டி20 உலகக் கோப்பையில் இந்த சிஎஸ்கே வீரர் நிச்சயம் இருப்பார்… இந்திய அணிக்கு கவலையே இருக்காது!

ICC T20 World Cup 2024 Team India Selection: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணிகளும் குறைந்தபட்சம் 3 போட்டிகளையும், அதிகபட்சமாக சில அணிகள் 4 போட்டிகளையும் விளையாடிவிட்டன. 10 அணிகளும் தலா 14 போட்டிகள் வரை விளையாடும். லீக் சுற்று முடிவில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும். மார்ச் 22ஆம் தேதி … Read more