பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம்; விராட் கோலிக்கு எதிராக போலீசில் புகார்

பெங்களூரு, ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்று, முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. அந்த அணிக்கு கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா பாராட்டுகளை தெரிவித்து கொண்டார். இந்நிலையில், பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியம் அருகே நடந்த வெற்றி கொண்டாட்டத்தின்போது, கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 11 பேர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனால் வெற்றி பேரணி சோகத்தில் முடிந்தது. இதுபற்றி சித்தராமையா, மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டு … Read more

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: அல்காரஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

பாரீஸ், ஆண்டின் 2-வது ‘கிராண்ட்ஸ்லாம்’ தொடரான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பாரீசில் நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவி அரையிறுதி ஆட்டத்தில் இத்தாலி வீரர் லோரென்சோ முசெட்டி – ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் ஆகியோர் மோதினர். பரபரப்பான இந்த ஆட்டத்தில் முதல் செட்டை லோரென்சோ முசெட்டி கைப்பற்றினார். 2வது மற்றும் 3வது செட்டை அல்காரஸ் கைப்பற்றினார் . 4வது செட்டில் 2-0 என அல்காரஸ் முன்னிலையில் இருந்தபோது … Read more

பெங்களூரு கோர சம்பவம் – 4 பேருக்கு நீதிமன்றக் காவல்

பெங்களூரு, ஐ.பி.எல். கிரிக்கெட்டில் வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு, பாராட்டு விழா மற்றும் வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சி ஆகியவை பெங்களூருவில் நேற்று முன்தினம் நடந்தது. கர்நாடக அரசு சார்பில் பெங்களூரு விதானசவுதாவிலும் (சட்டசபை), சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் கர்நாடக கிரிக்கெட் சங்கம் சார்பிலும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முதலில் விதானசவுதாவில் விழா நடந்தது. இதை காண லட்சக்கணக்கானோர் கூடியிருந்தனர்.பின்னர் சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பெங்களூரு அணியினருக்கு பாராட்டு விழா நடந்தது. இதை காண ரசிகர்களுக்கு இலவச … Read more

ஜெய்ஸ்வால் உடன் ஓப்பனிங்கில் இவர் தான் இறங்குவார்… சாய் சுதர்சன் கிடையாது!

India National Cricket Team: ஐபிஎல் கிரிக்கெட் தொடர் முடிவடைந்துவிட்டது. கிரிக்கெட் ரசிகர்களக்கு சற்று ஓய்வு கிடைத்திருக்கிறது. இந்தியா ஏ – இங்கிலாந்து லயன்ஸ், இங்கிலாந்து – மேற்கு இந்திய தீவுகள் டி20 தொடர், டிஎன்பிஎல் என பல்வேறு கிரிக்கெட் தொடர்கள் தற்போது நடைபெறுகிறது என்றாலும் கூட பெரிய எதிர்பார்ப்பு என்பது WTC இறுதிப்போட்டி மீதுதான். WTC Final 2025: WTC இறுதிப்போட்டி… 2023-25 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் இறுதிப்போட்டி வரும் ஜூன் 11ஆம் … Read more

இந்தியா A vs இங்கிலாந்து லயன்ஸ் 2வது பயிற்சி டெஸ்ட்: லைவ் ஸ்ட்ரீமிங் விவரங்கள்..!!

India A vs England Lions live streaming : இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்துள்ளது. அந்நாட்டு அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. புதிய கேப்டன் சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்ள உள்ளது. இந்த டெஸ்ட் தொடருக்கு முன்னதாக, இந்தியா A மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையே அங்கீகரிக்கப்படாத பயிற்சி டெஸ்ட் போட்டிகள் நடந்து வருகின்றன. முதல் போட்டி டிராவில் முடிந்த நிலையில், 2வது டெஸ்ட் … Read more

சுப்மன் கில் 4வது இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும்.. ரிக்கி பாண்டிங்!

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாட இருக்கிறது. ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த நிலையில், சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ரிஷப் பண்ட் அறிவிக்கப்பட்டுள்ளார். ரோகித் சர்மா, விராட் கோலி என சீனியர் வீரர்கள் இல்லாததால் இந்த டெஸ்ட் தொடரின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் உள்ளன. இந்த நிலையில், சுப்மன் கில் பேட்டிங் … Read more

ஓய்வை அறிவித்த இந்தியாவின் 'சுட்டிக் குழந்தை' – விராட் கோலியை விட இளையவர்!

Piyush Chawla Retirement: இந்திய கிரிக்கெட்டில் சுமார் கடந்த 20 ஆண்டுகளாக விளையாடி வந்தவர் பியூஷ் சாவ்லா. கடந்தாண்டு வரை இவர் ஐபிஎல் தொடரிலும் விளையாடி வந்தார். 36 வயதான இவர் இந்திய அணிக்காக 3 டெஸ்ட் போட்டிகள், 25 ஒருநாள் போட்டிகள் மற்றும் 7 டி20ஐ போட்டிகளில் விளையாடி உள்ளார். இவர் கடைசியாக இந்திய அணிக்கு 2014ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடியிருந்தார். உள்நாட்டு கிரிக்கெட்டில் கடைசியாக இவர் … Read more

விராட் கோலி கைதா? 11 பேர் உயிரிழந்த விவகாரம்.. ட்ரெண்டாகும் ஹேஷ் டேக்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல்லின் 18 வருட வரலாற்றில் முதல் முறையாக கோப்பையை வென்றது. இதனை கொண்டாட நினைத்து ஏற்பாடு செய்யப்பட நிகழ்சியில் லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததால், 11 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இந்த விஷயம் தற்போது பூதாகரமாகி உள்ளது. காவல்துறையை மீறி பேரணி அறிவிப்பை வெளியிட்ட ஆர்சிபி நிர்வாகத்தின் மீது நேற்று (ஜூன் 05) விசாரணை நடத்தப்பட்டது.  இச்சூழலில் இன்று (ஜூன் 06) ஆர்சிபி வெற்றி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த நிறுவனத்தை … Read more

அவர் இல்லை என்றால் எதுவும் இல்லை.. ரோகித் சர்மா உருக்கம்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். இவர அறிவித்த சில தினங்களில் விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். இவர்களின் அறிவிப்பு ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியையும் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியது.  கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா ஏன் திடீரென ஒய்வை அறிவித்தார். இதற்கு என்ன காரணம். கடைசியாக விளையாடிய ஆஸ்திரேலியா தொடர் தான் காரணமா? உள்ளிட்ட பல கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி … Read more

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் : பும்ரா அனைத்து போட்டிகளிலும் விளையாடுவாரா ? கம்பீர் விளக்கம்

மும்பை, இந்திய கிரிக்கெட் அணி இந்த மாதம் (ஜூன்) முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 20-ந் தேதி லீட்சில் தொடங்குகிறது. இந்த தொடரில் இந்திய அணி புதிய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில் தலைமையில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்நிலையில் இந்த தொடரின் 5 போட்டிகளிலும் பும்ரா விளையாட … Read more