கத்தார் ஓபன் டென்னிஸ்; சாம்பியன் பட்டம் வென்ற அமெரிக்க வீராங்கனை

தோகா, கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோகாவில் உள்ள கலீபாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவா, லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டாபென்கோவுடன் மோதினார். இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அமண்டா அனிசிமோவா 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஜெலினா ஆஸ்டாபென்கோவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார். தினத்தந்தி Related Tags : கத்தார் ஓபன் டென்னிஸ்  Qatar  … Read more

இந்தியா சாம்பியன்ஸ் டிராபியை வெல்லுமா? துபாயில் மாஸ் ரெக்கார்டு இருக்கே..!

Champions Trophy, India | சாம்பியன்ஸ் டிராபி இந்தியாவின் ரெக்கார்ட் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபிக்காக துபாய் சென்றுள்ளது. இந்திய அணியை பொறுத்தவரை இந்த டோர்மென்ட்டில் அனைத்து மேட்ச்களையும் துபாய் இன்டர்நேஷனல் ஸ்டேடியத்தில் விளையாட உள்ளது. சாம்பியன்ஸ் டிராபியின் ஹோஸ்டாக பாகிஸ்தான் இருந்தாலும், பாதுகாப்பு காரணங்களால் இந்திய அணியை பாகிஸ்தான் அனுப்ப பிசிசிஐ மறுத்துவிட்டது. இதன் பிறகு, ஐசிசி இந்தியாவின் மேட்ச்களை துபாயில் நடத்த முடிவு செய்தது. துபாயில் இந்திய அணியின் ரெக்கார்டு ஐசிசி … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; கேரளாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற மோகன் பகான்

கொச்சி, 13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கொச்சியில் நேற்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. – மோகன் பகான் அணிகள் மோதின. இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய மோகன் பகான் அணி முதல் பாதியில் இரு கோல்கள் அடித்து அசத்தியது. தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்திலும் மோகன் பகான் அணி தனது ஆதிக்கத்தை … Read more

மார்ச் 22ம் தேதி தொடங்கும் ஐபிஎல் 2025! முதல் போட்டி யாருக்கு தெரியுமா?

இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல் 2025) 18வது பதிப்பு எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் உள்ளனர். இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. முதல் போட்டி வரும் மார்ச் 22ம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிகளுக்கு இடையே நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு ஐபிஎல் பட்டத்தை வென்றதால் கொல்கத்தாவில் முதல் … Read more

கத்தார் ஓபன் டென்னிஸ்; அரையிறுதியில் அதிர்ச்சி தோல்வி கண்ட இகா ஸ்வியாடெக்

தோகா, கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வருகிறது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் முதலாவது அரையிறுதியில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் இகா ஸ்வியாடெக் (போலந்து), லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டாபென்கோவுடன் மோதினார். இந்த ஆட்டத்தில் எளிதில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட இகா ஸ்வியாடெக் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் 3-6, 1-6 என்ற நேர் செட்டில் ஜெலினா ஆஸ்டாபென்கோவிடம் அதிர்ச்சிகரமாக … Read more

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025: நேரடி ஒளிபரப்பு மற்றும் லைவ் ஸ்ட்ரீமிங் விவரங்கள்!

Champions Trophy live streaming | பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐசிசி ஆண்களின் சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் நேரடி ஒளிபரப்பு மற்றும் ரேடியோ ஒளிபரப்பு விவரங்களை ஐசிசி அறிவித்துள்ளது. இந்த போட்டிகள் பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை நடைபெறும். இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும்ழ 15 போட்டிகள் நடக்க உள்ளன. இதில் ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுகிறது. இலங்கை அணி  விளையாடவில்லை. … Read more

முத்தரப்பு ஒருநாள் தொடர்; பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற நியூசிலாந்து

கராச்சி, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்றது. இந்த தொடரின் லீக் சுற்று முடிவில் நியூசிலாந்து (4 புள்ளி), பாகிஸ்தான் (2 புள்ளி) அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. தென் ஆப்பிரிக்கா(2 ஆட்டத்திலும் தோல்வி) வெளியேறியது. இதனையடுத்து கராச்சி தேசிய ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; ஐதராபாத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற ஒடிசா எப்.சி

புவனேஸ்வர், 13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் புவனேஸ்வரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஒடிசா எப்.சி. – ஐதராபாத் எப்.சி. அணிகள் மோதின. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் ஐதராபாத் அணி ஒரு கோல் அடித்து 1-0 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஒடிசா அணி … Read more

மகளிர் பிரீமியர் லீக்; மும்பை – டெல்லி அணிகள் இன்று மோதல்

வதோதரா, மகளிர் ஐ.பி.எல். என்று அழைக்கப்படும் மகளிர் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் (டபிள்யூ.பி.எல்.) போட்டியை கடந்த 2023-ம் ஆண்டு பி.சி.சி.ஐ அறிமுகம் செய்தது. இந்த தொடரின் முதல் சீசனில் மும்பை அணியும், 2வது சீசனில் பெங்களூரு அணியும் கோப்பையை வென்றன. இந்த நிலையில் டபிள்யூ.பி.எல். தொடரின் 3வது சீசன் நேற்று தொடங்கியது. நேற்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தியது. இந்நிலையில், இந்த தொடரில் … Read more

பெண்கள் பிரிமீயர் லீக் கிரிக்கெட்; வெற்றியோடு தொடங்கியது பெங்களூரு

வதோதரா, மகளிர் ஐ.பி.எல். என்று அழைக்கப்படும் மகளிர் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் (டபிள்யூ.பி.எல்.) போட்டியை கடந்த 2023-ம் ஆண்டு பி.சி.சி.ஐ அறிமுகம் செய்தது. இந்த தொடரின் முதல் சீசனில் மும்பை அணியும், 2வது சீசனில் பெங்களூரு அணியும் கோப்பையை வென்றன.இந்த நிலையில் டபிள்யூ.பி.எல். தொடரின் 3வது சீசன் இன்று தொடங்கியது. வதோதராவில் உள்ள கோதம்பி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வரும் தொடக்க ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் – நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் … Read more