விராட் கோலி அதை செய்திருக்க கூடாது – இந்திய முன்னாள் பயிற்சியாளர் ஏமாற்றம்

மும்பை, இந்திய வீரர் விராட் கோலி தற்சமயத்தில் உலகின் சிறந்த கிரிக்கெட் வீரராக கருதப்படுகிறார். இந்தியாவுக்காக கடந்த 2008 அண்டர்-19 உலகக் கோப்பையை கேப்டனாக வென்ற அவர் சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அப்போதிலிருந்து 3 வகையான கிரிக்கெட்டிலும் பெரும்பாலான போட்டிகளில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் அவர் 26,000க்கும் மேற்பட்ட ரன்களையும் 80 சதங்களையும் அடித்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். முன்னதாக கேப்டனாகவும் விராட் கோலி இந்தியாவுக்காக வெற்றிகரமாக செயல்பட்டார் . குறிப்பாக 2014-ம் ஆண்டு … Read more

மான்டெர்ரி ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் நோஸ்கோவா

மெக்சிகோ, மான்டெர்ரி ஓபன் டென்னிஸ் தொடர் மெக்சிகோவில் நடைபெற்றது.இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா, நியூசிலாந்தின் லுலு சன் உடன் மோதினார். பரபரப்பான இந்த இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் சிறப்பாகின ஆட்டத்தை வெளிப்படுத்திய லிண்டா நோஸ்கோவா 7(8)-6(6), 6-4 என்ற நேர் செட் கணக்கில் லுலு சன்னை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தினார். தினத்தந்தி Related Tags : டென்னிஸ்  Tennis  லிண்டா … Read more

வங்காளதேசத்திற்கு எதிரான தோல்விக்கு அந்த 2 விஷயங்கள்தான் காரணம் – பாக்.கேப்டன் வருத்தம்

ராவல்பிண்டி, பாகிஸ்தான் – வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது. இந்த போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் ராவில்பிண்டி பிட்ச் வேகத்துக்கு சாதகமாக என்று நினைத்து இப்போட்டியில் முழுநேர ஸ்பின்னர்களை தேர்ந்தெடுக்கவில்லை என பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூத் தெரிவித்துள்ளார். மேலும் 8 – 9 நாட்கள் முன்பாகவே மழை பெய்ததால் பிட்ச் தாங்கள் நினைத்ததுபோல் அமையாததே தோல்விக்கு காரணம் என்று அவர் கூறியுள்ளார். இது … Read more

ஆட்ட நாயகன் விருது வென்ற வங்காளதேச வீரரின் நெஞ்சை தொடும் செயல்… ரசிகர்கள் நெகிழ்ச்சி

ராவல்பிண்டி, பாகிஸ்தான் – வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுக்கு 448 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. சாத் ஷகீல் (141 ரன்), முகமது ரிஸ்வான் (171 ரன்) சதம் அடித்தனர். இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணி 167.3 ஓவர்களில் 565 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹிம் 191 ரன்கள் … Read more

கொல்கத்தா அணிக்கு கேப்டனாகும் சூர்யகுமார் யாதவ்? வெளியான லேட்டஸ்ட் தகவல்!

ஐபிஎல்லில் இதுவரை 3 முறை கோப்பையை வென்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பல சிறந்த வீரர்களை இந்திய அணிக்கு அளித்துள்ளது. கேகேஆர் அணியில் இருந்து தான் ரின்கு சிங், ஷுப்மான் கில் போன்ற பேட்ஸ்மேன்கள் வந்தனர். இந்த ஆண்டு சிறப்பாக விளையாடிய ஹர்ஷித் ராணா மற்றும் வைபவ் அரோரா போன்ற வேகப்பந்து வீச்சாளர்களையும் உருவாக்கி உள்ளது. மேலும் ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன் போன்ற சீனியர் வீரர்களையும் ஒவ்வொரு ஆண்டும் தக்க வைத்து அவர்களுக்கு வாய்ப்பு … Read more

முதல் டெஸ்ட்: இலங்கை அணியை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி

மான்செஸ்டர், இங்கிலாந்து – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் கடந்த 21ம் தேதி தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை 236 ரன்னில் சுருண்டது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 85.3 ஓவர்களில் 358 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது.இதனையடுத்து 122 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 54 ஓவர் முடிந்திருந்தபோது 5 விக்கெட்டுகளை இழந்து 187 … Read more

ஐ.பி.எல்.2025: கொல்கத்தா அணியின் கேப்டனாகும் சூர்யகுமார் யாதவ்..? வெளியான தகவல்

மும்பை, அடுத்த ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் நடந்து வருகின்றன. ஏற்கனவே கொல்கத்தா அணியின் பயிற்சியாளர்கள் குழுவில் இருந்த கவுதம் கம்பீர், அபிஷேக் நாயர், ரியான் டென் டஸ்காட்டே உள்ளிட்டோர் இந்திய அணிக்கு சென்றுள்ளனர். அதேபோல் குஜராத் அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ராவும் அதிலிருந்து வெளியேற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ரிக்கி பாண்டிங் … Read more

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை விமர்சிக்கும் இந்திய நடுவர்… நடந்தது என்ன..?

புதுடெல்லி, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான். கடந்த 2015 முதல் சர்வதேச அரங்கில் விளையாடி வருகிறார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடும் அவர் பாகிஸ்தானுக்கு சில வெற்றிகளில் முக்கிய பங்காற்றி வருகிறார். முன்னதாக களத்தில் முகமது ரிஸ்வான் செய்யக்கூடிய சில சேட்டையான வேலைகள் ரசிகர்களால் கிண்டல் அடிக்கப்பட்டன. குறிப்பாக கடந்த ஒருநாள் உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இறங்கி சென்று அடிக்க முயற்சித்த அவர் கிளீன் போல்டானார். ஆனால் தம்முடைய … Read more

இன்னும் உயர பறக்க வேண்டும் என்பதே என் ஆசை – அடுத்த இலக்கு குறித்து பேசிய தவான்

புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ஷிகர் தவான் சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். இதுவரை இந்திய அணிக்காக 34 டெஸ்ட், 167 ஒருநாள் மற்றும் 68 டி20 போட்டிகளில் விளையாடி 10 ஆயிரத்திற்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளார். இருப்பினும் 2019 ஒருநாள் உலகக்கோப்பை தொடரின்போது காயமடைந்த அவர், குணமடைந்த பின் அதிரடியாக விளையாடத் தடுமாறினார். அதன் காரணமாக இந்திய அணியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக கழற்றி விடப்பட்ட அவருக்கு போட்டியாக … Read more

என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த இன்னிங்ஸ் இவைதான் – ஷிகர் தவான் பேட்டி

புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர இடது கை பேட்ஸ்மேனான ஷிகர் தவான் சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இன்று ஓய்வை அறிவித்துள்ளார். டெல்லியைச் சேர்ந்த அவர் 2010-ம் ஆண்டு இந்தியாவுக்காக அறிமுகமாகி ஆரம்பக் காலங்களில் தடுமாறிக் கொண்டிருந்தார். அப்போது அவரை 2013 சாம்பியன்ஸ் டிராபியில் ரோகித் சர்மாவுடன் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி தொடக்க வீரராக களமிறக்கினார். அந்த வாய்ப்பை பிடித்துக்கொண்ட ஷிகர் தவான் தங்க பேட் விருது வென்று 2013 சாம்பியன்ஸ் … Read more