இந்தியாவுக்கு எதிராக என்னுடைய திட்டம் இதுதான் – ஆட்டநாயகன் வெல்லலகே பேட்டி

கொழும்பு, இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடர் முடிவடைந்த நிலையில் அடுத்ததாக ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி கொழும்புவில் நேற்று நடைபெற்றது. அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை 50 ஓவர்களில் 230 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக வெல்லலகே 67, நிசாங்கா 56 ரன்கள் … Read more

இந்தியா vs பாகிஸ்தான் மேட்ச் புது அப்டேட் – சாம்பியன்ஸ் டிராபியில் 2 முறை மோதல்..!

India vs Pakistan Cricket News Tamil : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் இருக்கும் டாப் 8 அணிகள் இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் நிலையில், இந்தியாவைத் தவிர மற்ற அணிகள் அனைத்தும் பாகிஸ்தான் சென்று விளையாட ஒப்புக்கொண்டுள்ளன. இந்தியா மட்டும் மவுனம் காத்து வருகிறது. ஏற்கனவே, இந்தியாவின் நிலைப்பாட்டை சீக்கிரம் தெரிவிக்குமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் கேட்டுக் கொண்டிருந்தது. அத்துடன் … Read more

தோனி, விராட் வாய்ப்பு கொடுக்காததால் ஓய்வு பெற்ற 4 இந்திய கிரிக்கெட் வீரர்கள்

இந்திய கிரிக்கெட் அணி எம்எஸ் தோனி தலைமையில் சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு கோப்பைகளை வென்று அசத்தியது. அவருக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பு விராட் கோலிக்கு சென்றது. ஐசிசி கோப்பைகளை இவரது தலைமையில் இந்திய அணி வெல்லவில்லை என்றாலும் டெஸ்ட் மற்றும் ஒருநாள், டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகளை படைத்தது. அதேநேரத்தில் இவர்களது கேப்டன்சியில் இளம் வீரர்கள் பலரும் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றனர். அதனால் சில பிளேயர்களுக்கு போதுமான வாய்ப்பு கிடைக்காததால் … Read more

ஐபிஎல் 2025ல் தோனி இல்லை என்றால் சிஎஸ்கே குறிவைக்கும் விக்கெட் கீப்பர் இவர் தான்!

இந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. கடந்த ஆண்டு கோப்பையை வென்றிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப்க்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ளது, இதற்காக ஒவ்வொரு அணிகளும் தயார் நிலையில் உள்ளனர். சமீபத்தில் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் உரிமையாளர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது, அதில் ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை … Read more

Ind vs SL: முதல் ஒருநாள் போட்டியில் ஏன் சூப்பர் ஓவர் இல்லை என்று தெரியுமா?

India vs Sri Lanka 1st ODI highlights: இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. சூரியகுமார் தலைமையில் டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா வென்று இருந்தது. இந்நிலையில் நேற்று ஒருநாள் போட்டி தொடங்கியது. கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற போட்டி டையில் முடிந்தது. இரண்டு அணிகளும் 230 ரன்கள் அடித்திருந்த நிலையில் சூப்பர் ஓவர் கொண்டுவரப்படவில்லை. கடந்த ஜூலை 30ம் … Read more

பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன்: இந்திய வீரர் லக்சயா சென் அரையிறுதிக்கு முன்னேற்றம்

பாரீஸ், 33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் பேட்மிண்டனில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் இந்திய வீரர் லக்சயா சென், சீன தைபே வீரர் சோ டைன் சென் உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் லக்சயா சென் 19-21, 21-15, 21-12 என்ற செட் கணக்கில் சோ டைன்-ஐ வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். இதன் … Read more

இலங்கை அபார பந்துவீச்சு… சமனில் முடிந்த இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டி

கொழும்பு, இந்தியா – இலங்கை இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் இலங்கை 8 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்கள் அடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக வெல்லலகே 67 ரன்களும், நிசாங்கா 56 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் மற்றும் அக்சர் படேல் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதனையடுத்து 231 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற … Read more

டி.என்.பி.எல். 2-வது தகுதி சுற்று: திருப்பூர் அணியை வீழ்த்தி திண்டுக்கல் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

சென்னை, நடப்பு டி.என்.பி.எல். தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் மற்றொரு அணியை தீர்மானிக்கும் 2-வது தகுதி சுற்று ஆட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், சாய் கிஷோர் தலைமையிலான ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணியின் கேப்டன் அஸ்வின் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய திருப்பூர் அணியின் பேட்ஸ்மேன்கள் திண்டுக்கல் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். … Read more

இப்போதுள்ள வீரர்கள் 270 பந்துகளை எதிர்கொண்டால்… – சேவாக் பேட்டி

புதுடெல்லி, இங்கிலாந்து கிரிக்கெட் அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல அதிரடியாக விளையாடும் அணுகுமுறையை பின்பற்றி ரன்களை குவித்து வருகின்றனர். இருப்பினும் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் விளையாடாமல் அனைத்து நேரமும் அதிரடியாகவே விளையாடுவோம் என்று இங்கிலாந்து அடம்பிடித்து சில தோல்விகளையும் சந்தித்துள்ளது. இதனால் எல்லா நேரமும் அதிரடியாக விளையாடாமல் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் விளையாடுங்கள் என்ற விமர்சனங்களை இங்கிலாந்து அணி சந்தித்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் அதிரடியாக விளையாடுவதாக சேவாக் பாராட்டியுள்ளார். … Read more

டி.என்.பி.எல். 2-வது தகுதி சுற்று: திண்டுக்கல் அபார பந்துவீச்சு… திருப்பூர் 108 ரன்களில் ஆல் அவுட்

சென்னை, நடப்பு டி.என்.பி.எல். தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் மற்றொரு அணியை தீர்மானிக்கும் 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், சாய் கிஷோர் தலைமையிலான ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணியின் கேப்டன் அஸ்வின் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய திருப்பூர் அணியின் பேட்ஸ்மேன்கள் திண்டுக்கல் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். திருப்பூர் அணியின் பேட்ஸ்மேன்கள் சொற்ப … Read more