இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியை தவறவிடும் முன்னணி வீரர்..? – வெளியான தகவல்

மும்பை, இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றி உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 7ம் தேதி தர்மசாலாவில் தொடங்குகிறது. இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணியின் முன்னணி வீரரான கே.எல்.ராகுல் இடம் பெறுவது சந்தேகம் என தகவல் வெளியாகி உள்ளது. … Read more

'இந்த உலகத்தில் அழகான பெண்ணை வரவேற்கிறோம்' – கேன் வில்லியம்சன்

வெல்லிங்டன், நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர பேட்ஸ்மேனுமான கேன் வில்லியம்சன் மூன்றாவது முறையாக தந்தையானார். வில்லியம்சன் – சாரா ரஹீம் தம்பதிக்கு மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. வில்லியம்சன் தனது மனைவி சாரா ரஹீம் மற்றும் புதிதாக பிறந்த மகளுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டு இந்த மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அந்த பதிவின் தலைப்பில் ” இந்த உலகத்தில் அழகான பெண்ணை வரவேற்கிறோம்” என தெரிவித்தார். கேன் வில்லியம்சன் … Read more

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்; விளையாடும் வீரர்களை அறிவித்த ஆஸ்திரேலியா

வெல்லிங்டன், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி நாளை வெல்லிங்டனில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடும் 11 பேர் கொண்ட அணியை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. இந்த அணியில் ஸ்டீவ் சுமித் … Read more

ரஞ்சி டிராபி கிரிக்கெட்; மும்பை அணியில் ஸ்ரேயாஸ் ஐயர்

மும்பை, இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர். இவருக்கும் பி.சி.சி.ஐ-க்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. கிரிக்கெட்டில் சிறுசிறு காயம் ஏற்பட்டு இந்திய அணியில் இருந்து விலகி மீண்டும் அணிக்கு திரும்ப தயாராகும்போது ரஞ்சி டிராபியில் விளையாடி திறமையை நிரூபிக்க வேண்டும் என பி.சி.சி.ஐ வலியுறுத்துவது உண்டு. அதேபோல் சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து ரன்கள் அடிக்க முடியாமல் பார்ம் இன்றி தவிக்கும்போதும் உள்ளூர் போட்டிகளில் விளையாட வலியுறுத்துவது உண்டு. ஆனால் பிரபல … Read more

ஜாம்பவான்களாக இருந்தும் கேப்டன் பதவி கிடைக்காத 5 இந்திய வீரர்கள்!

இந்திய கிரிக்கெட்டில் பல ஜாம்பவான்கள் இருந்துள்ளனர். ஆனாலும் கபில் தேவ், கங்குலி, தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற ஒரு சிலருக்கே கேப்டன்சி கொடுக்கப்பட்டது.  அதில் இவர்கள் பல சாதனைகளை புரிந்துள்ளனர். ஆனாலும் பல வீரர்களுக்கு அவர்களது வாழ்நாள் முழுவதும் இந்திய அணியின் முழு நேரம் கேப்டன் ஆவதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை.  கிட்டத்தட்ட 300 க்கும் மேற்பட்ட சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடிய போதிலும், இந்திய அணியின் கேப்டனாக இல்லாத வீரர் யுவராஜ் சிங். இவரை … Read more

BCCI: சம்பளத்தை உயர்த்திய பிசிசிஐ! விராட், ரோஹித்க்கு எவ்வளவு கிடைக்கும்?

ஐபிஎல் 2024 முடிந்த பிறகு இந்திய அணியின் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வீரர்களின் சம்பளம் உயரும் என்று தகவல் வெளியாகி உள்ளது.  மேலும் ஒரு தொடரில் அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடும் வீரர்களுக்கு கூடுதல் போனஸ் சம்பளமும் வழங்க பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்காக சில இந்திய அணியின் வீரர்கள் தங்களை காயம் ஏற்படாமல் பார்த்து கொள்ள ரஞ்சி கோப்பையை புறக்கணித்ததாக புகார்கள் பிசிசிஐக்கு வந்தது. இதன் காரணமாக இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த … Read more

33 பந்துகளில் சதமடித்து மிரள விட்ட நமீபியா வீரர் – தம்பி யாருப்பா நீ? ரோகித் ரெக்கார்டு ஓவர்

நேபாளத்தில் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடர் தொடங்கியுள்ளது. இதில் நமீபியா, அயர்லாந்து மற்றும் நேபாளம் அணிகள் மோதுகின்றன. முதல் போட்டியில் நேபாளம் மற்றும் நம்பீயா அணிகளுக்கு இடையே கிர்திபூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற நமீபியா இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய மாலன் கருகர் மற்றும் ஜான் நிகோல் லோப்டி ஈட்டன் ஆகியோர் அதிரடியாக விளையாடினர். இருவரும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியதால் நமீபிய அணியின் ரன் ஜெட் வேகத்தில் … Read more

ஐபிஎல் கோப்பையை இந்த முறை சிஎஸ்கே வேண்டாம், இந்த அணி வெல்லட்டும் – சுரேஷ் ரெய்னா

ஐபிஎல் 2024 தொடர் மார்ச் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்க இருக்கிறது. முதல் போட்டியில்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மல்லுக்கட்ட  இருக்கின்றன. எம்எஸ் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக வழிநடத்தப்போகும் கடைசி ஐபிஎல் தொடராக இது இருக்க வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால் அவருக்கு கடந்த ஆண்டே முழங்கால் வலியால் அவதிப்பட்டார். ஐபிஎல் 2023 சாம்பியன் பட்டத்தை வென்றதும் நேரடியாக மும்பைக்கு சென்று முழங்கால் வலிக்கு சிகிச்சை … Read more

INDvsENG: ஒழுங்கா ஆடல தம்பி நீ வெளியே போ.. ! இளம் வீரருக்கு பதிலாக ஆடும் படிக்கல்

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 7 ஆம் தேதி தர்மசாலாவில் நடக்கிறது. இப்போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் தொடர்ந்து சொதப்பிக் கொண்டிருக்கும் ரஜத் படிதார் நீக்கப்பட இருக்கிறார். இந்த டெஸ்ட்  தொடரில் அறிமுகமான அவர் மொத்தம் 6 இன்னிங்ஸில் பேட்டிங் விளையாடி வெறும் 63 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். இதனால் அவர் மீது அதிருப்தி கொண்ட கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் … Read more

5 உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் இல்லை…ஆனாலும் வெற்றி – இந்திய அணியை பாராட்டிய இங்கிலாந்து முன்னாள் வீரர்

ராஞ்சி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இந்தியா-இங்கிலாந்து இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 104.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 353 ரன்கள் எடுத்தது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 103.2 ஓவர்களில் அனைத்து … Read more