இனி இந்திய அணியின் சரவெடி ஓப்பனர் இவர் தான்… ரகசியத்தை உடைத்தார் சுப்மான் கில்!

IND vs ZIM Match Updates: கடந்த வாரம் சனிக்கிழமை இந்திய அணி ஐசிசி டி20 உலகக் கோப்பையை 17 ஆண்டுகளுக்கு பின்னர் கைப்பற்றியது. தொடர்ந்து நாடு இந்திய அணியை கொண்டாடி வரும் இந்த சூழலில், இந்திய இளம் அணி ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இன்று விளையாட உள்ளது. ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா உள்ளிட்டோர் சர்வதேச டி20 அரங்கில் இருந்து ஓய்வை அறிவித்திருந்தனர். சீனியர்களுக்கும் இந்த தொடரில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளதால் … Read more

விம்பிள்டன் டென்னிஸ்: ஸ்வியாடெக் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

லண்டன், டென்னிஸ் போட்டியில் ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மிகவும் கவுரவமிக்கதாக கருதப்படும் நூற்றாண்டு காலம் பழமையான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் குரோஷியா வீராங்கனை பெட்ரா மார்டிக் – போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் ஆகியோர் மோதினர். பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்வியாடெக் … Read more

ஐ.சி.சி. ஜூன் மாத சிறந்த வீரர் விருது: பரிந்துரை பெயர் பட்டியலில் 2 இந்திய நட்சத்திரங்கள்

துபாய், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அதன்படி ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐ.சி.சி அறிவித்துள்ளது. அதன்படி ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் டி20 உலகக்கோப்பை தொடரில் அசத்திய இந்திய நட்சத்திரங்களான கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தொடர் நாயகன் விருது வென்ற … Read more

அதற்காக ரோகித் சர்மாவுக்கு நன்றி – ராகுல் டிராவிட் பேட்டி

மும்பை, ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வீரர்கள் மும்பையில் திறந்த பஸ்சில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர். பிரமாண்டமான பேரணி முடிந்ததும் இந்திய வீரர்களுக்கு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் பாராட்டு விழா நடந்தது. இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் ரோஜர் பின்னி, செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் உலகக்கோப்பையை வென்றதற்காக ரூ.125 கோடியை ஊக்கத்தொகையாக வழங்கினர். இந்த நிகழ்வில் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட வீரர்கள் பேசினார்கள். … Read more

அப்போதைய ஸ்ரீசாந்த் தான் இப்போதைய பும்ரா – முதல் டி20 நாயகனை மறந்து விடாதீர்கள்

இந்திய அணி டி20 உலகக்கோப்பையை இரண்டாவது முறையாக வென்றிருக்கிறது. பும்ராவின் சிறப்பான பந்துவீச்சில் இறுதிப் போட்டியில் தோல்வியின் விளிம்பில் இருந்த இந்திய அணி, அசத்தலான கம்பேக் கொடுத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தியது. இதற்கு மிக முக்கிய காரணம் பும்ராவின் அட்டகாசமான பந்துவீச்சு தான். நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை சிறப்பாக பந்துவீசிய அவர், தொடர் நாயகன் விருதையும் பெற்றார். டி20 உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு பந்துவீச்சாளர் தொடர் நாயகன் வெல்வது இதுவே முதல்முறையாகும். … Read more

அந்த 2 வீரர்களின் ஜெர்சி எண்ணிற்கும் ஓய்வளியுங்கள் – பி.சி.சி.ஐ.க்கு ரெய்னா கோரிக்கை

மும்பை, அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வந்த 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையை வென்று அசத்தியது. வெற்றி வாகை சூடியதும் அடுத்த தலைமுறை வீரர்களுக்கு வழிவிடும் நோக்கில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நட்சத்திர வீரர் விராட் கோலி அறிவித்தார். அவரை தொடர்ந்து இந்திய கேப்டன் ரோகித் சர்மாவும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து விடை பெறுவதாக அறிவித்தார். இவர்கள் … Read more

’உலகின் 8வது அதிசயமே’ ஜஸ்பிரித் பும்ராவுக்கு விராட் கோலி கொடுத்த மிகப்பெரிய புகழாரம்

இந்திய அணி டி20 உலகக்கோப்பை வென்றதையொட்டி மும்பை வான்கடே மைதானத்தில் வீரர்களுக்கான வரவேற்பும் பாராட்டு விழாவும் நடந்தது. இதில் இந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்றனர். அப்போது டி20 உலகக்கோப்பையில் வெற்றி பெற்றது குறித்து பேசிய விராட் கோலி, இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா உலகின் எட்டாவது அதிசயம் என தெரிவித்தார். பும்ராவை இந்தியாவின் பொக்கிஷம் என அறிவிப்பீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், அந்த பேப்பரை உடனே கொடுங்கள் முதல் … Read more

மீண்டும் லண்டன் புறப்பட்ட விராட் கோலி…காரணம் என்ன தெரியுமா..?

மும்பை, 17 ஆண்டுகள் கழித்து டி20 உலகக்கோப்பையை இந்தியா வென்று வரலாறு படைத்துள்ளது. இந்தியாவின் இந்த வெற்றிக்கு இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார். இதன் காரணமாக ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், இந்த போட்டியுடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனையடுத்து டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய வீரர்களுக்கான பாராட்டு விழா பி.சி.சி.ஐ. சார்பில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி வீரர்கள் திறந்தவெளி பேருந்தில் … Read more

இந்தியா ஜிம்பாப்வே டி20 தொடரை பார்ப்பது எப்படி? – ஹாட்ஸ்டாரும் இல்லை, ஜியோ சினிமாவும் இல்லை

IND vs ZIM Live Telecast Streaming Indian Timing Details: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் நிறைவடைந்துவிட்டது. இனி அடுத்தாண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என இரண்டு முக்கிய ஐசிசி கோப்பைக்கான போட்டிகள் நடைபெற இருக்கின்றன என்பதால் அனைத்து அணிகளும் இனி ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில்தான் அதிகம் கவனம் செலுத்தும் எனலாம்.  வரும் பிப்ரவரி மாதம் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற இருப்பதால் இந்திய … Read more

'15 வருடத்தில் ரோஹித்தை இப்படி பார்த்ததே இல்லை…' கண்ணீர் கதையை பகிர்ந்த விராட் கோலி

Team India Felicitation Ceremony: நடந்து முடிந்து 9ஆவது ஐசிசி டி20 உலகக் கோப்பையை (ICC T20 World Cup 2024) வென்று ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி நேற்று காலை நாடு திரும்பியது. டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்ற பார்படாஸ் நகரில் திடீரென ஏற்பட்ட புயல் பாதிப்பால் விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. இதனால், இந்திய அணி நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. ஞாயிற்றுக்கிழமை புறப்பட வேண்டிய இந்திய அணி அங்கிருந்து … Read more