இளம் கிரிக்கெட் வீரரிடம் பணம் கேட்டு கொலை மிரட்டல்: உத்தரகாண்ட் கிரிக்கெட் சங்க செயலாளர் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு

டேராடூன், உத்தரகாண்ட் மாநிலத்தில் இளம் கிரிக்கெட் வீரரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த உத்தரகாண்ட் கிரிக்கெட் சங்கத்தின் உறுப்பினர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த 21 வயது பேட்ஸ்மேனான ஆர்யா சேத்தி கடந்த ஆண்டு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது, மாநில கிரிக்கெட் வீரரான ஆர்யா அந்த அணியின் பயிற்சியாளரால் தாக்கப்பட்டார். அதனை தொடர்ந்து இந்த சம்பவத்தை கிரிக்கெட் சங்கத்திடம் தெரிவித்தபோது, பயிற்சியாளருக்கு ஆதரவாக பேசிய நிர்வாகிகள், இது வெளியே தெரியவந்தால் … Read more

இந்திய கால்பந்து அணிக்கு ரூ 16. லட்சம் சம்பளத்தில் ஜோதிடர் நியமனம்…!

புதுடெல்லி சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஏஎஃப்சி ஆசியக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றில் இந்தியா சிறப்பாக ஆடி பிரதான ஆசியக் கோப்பைக்குத் தகுதி பெற்றது. ஜோதிடர்களின் ஊக்குவித்ததுதான் இதற்குக் காரணம் என்று கூறப்பட்டது. இதுதொடர்பாக கால்பந்து அணியின் நிர்வாகி ஒருவர் பிடிஐ-செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ஆசியக் கோப்பை கால்பந்து அணிக்கு மோட்டிவேட்டர் நியமிக்கப்பட்டுள்ளார். பின்னர்தான் தெரிந்தது அது ஜோதிட நிறுவனம் என்று” என்றார். அகில இந்திய கால்பந்து சம்மேளனம் இந்த மாத ஏஎஃப்சி ஆசிய கோப்பை தகுதிச் … Read more

இந்திய அணியின் 3-வது வேகப்பந்து வீச்சாளராக புவனேஸ்வர் குமார் இருப்பார் – முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான 5 போட்டிகள் கொண்ட தொடரில் புவனேஸ்வர் குமார் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் டி20 உலகக்கோப்பைக்கான பந்துவீச்சு வரிசை தொடர்பாக எழும் விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாபர் கருத்து தெரிவித்துள்ளார். பும்ராவுடன் இணைந்து விளையாடும் ஆடும் லெவனில் இடம் பெறுவதற்கு புவனேஷ்வர் குமார் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார் என்று அவர் கூறினார். இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் … Read more

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டம்: மும்பை-மத்திய பிரதேச அணிகள் இன்று பலப்பரீட்சை

பெங்களூரு, 38 அணிகள் பங்கேற்ற 87-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்று முடிவில் மும்பையும், மத்தியபிரதேசமும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்த நிலையில் இவ்விரு அணிகளில் சாம்பியன் கோப்பை யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் (5 நாள்) பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. பிரித்வி ஷா தலைமையிலான மும்பை அணி கால்இறுதியில் 725 ரன்கள் வித்தியாசத்தில் உத்தரகாண்டை ஊதித்தள்ளியது. உத்தரபிரதேசத்துக்கு எதிரான அரைஇறுதியிலும் ரன்மழை பொழிந்த மும்பை … Read more

அயர்லாந்து சுற்றுப்பயணத்திற்கு இந்திய அணியில் அவரை சேர்த்திருக்க வேண்டும் – சுனில் கவாஸ்கர்

புதுடெல்லி, அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி அந்த அணிக்கு எதிராக இரண்டு 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி கடந்த 15-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக புவனேஸ்வர் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதல் போட்டி 26-ந் தேதியும், 2-வது ஆட்டம் 28-ந் தேதியும் நடைபெறுகிறது. இந்திய அணியில் இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், வெங்கடேஷ் ஐயர், தீபக் … Read more

விம்பிள்டன் தகுதிச்சுற்றுப் போட்டி : இந்திய வீரர்கள் தோல்வி

கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி வருகிற 27-ந் தேதி முதல் ஜூலை 10-ந் தேதி வரை நடக்கிறது.விம்பிள்டன் போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் நடந்து வருகிறது இன்று நடைபெற்ற தகுதி சுற்று முதல் சுற்றில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், செக் குடியரசின் கோப்ரிவாவிடம் 7-5,6-4 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார் . மற்றோரு இந்திய வீரரான யுகி பாம்ப்ரி,தகுதி சுற்று ஆட்டத்தில் ஸ்பெயினின் மிரால்லஸிடம் 7-5, 6-1 என நேர் செட்களில் தோல்வி அடைந்தார் … Read more

105 வயதில் 100 மீட்டர் தடகள போட்டியில் கலந்து கொண்டு அசத்திய மூதாட்டி..!!

வதோதரா, குஜராத் மாநிலம் வதோதராவில் தேசிய ஓபன் மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது, இதில் 100 மீட்டர் ஓட்டபந்தயத்தில் 105 வயது மூதாட்டி ராம்பாய் என்பவர் கலந்து கொண்டார். 85 வயதுக்கு மேற்பட்டோருக்கான போட்டியில் தனிநபராக கலந்து கொண்டு ராம்பாய் அசத்தியுள்ளார். 45.40 வினாடிகளில் 100 மீட்டர் இலக்கை 105 வயதில் எட்டி அவர் புதிய சாதனை படைத்துள்ளார். மேலும் அவர் 200 மீட்டர் ஓட்டத்தில் 1 நிமிடம் 52.17 வினாடிகளில் இலக்கை கடந்து அசத்தினார். … Read more

4வது ஒருநாள் போட்டி : டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சு தேர்வு

கொழும்பு, இலங்கை – ஆஸ்திரேலியா இடையேயான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 3 போட்டிகளில் இலங்கை அணி 2 போட்டிகளிலும் .ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் இரு அணிகளும் மோதும் 4வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்கிறது..இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் … Read more

விபத்தில் சிக்கியது கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சொகுசு கார்

போர்சுகலை சேர்ந்த உலகின் மிகவும் பிரபல கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கால்பந்தாட்ட உலகில் இவரை அறியாதவர்கள் இருக்க முடியாது. கால்பந்தாட்டத்தை தாண்டி ரொனால்டோ ஒரு கார் பிரியர் ஆவார். இவரின் கேரேஜில் பல விலையுயர்ந்த கார்கள் வரிசைகட்டி நிற்கின்றன.இவர் தற்போது தனது குடும்பத்தினருடன் ஸ்பெயினில் விடுமுறையில் இருக்கிறார் இந்த நிலையில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ரூ .16 கோடி மதிப்பிலான புகாட்டி வேய்ரான் கார் இன்று விபத்தில் சிக்கியுள்ளது. ஸ்பெய்னின் .மஜோர்காவில் உள்ள ஒரு வீட்டின் மீது … Read more

காமன்வெல்த் போட்டிகள் 2022 : மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய ஆக்கி அணி அறிவிப்பு

புதுடெல்லி, 2022ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகள் பிரிட்டனின் பர்மிங்காம் நகரில் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்டு 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த காமன்வெல்த் போட்டிகள் நடைபெறும். இந்த ஆண்டு காமன்வெல்த் போட்டிகளில் பெண்கள் கிரிக்கெட் முதல் முறையாக இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய ஆண்கள் ஆக்கி அணியின் பெயர் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. மன்பிரீத் சிங் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ஹர்மன்ப்ரீத் … Read more