சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி, இந்த நட்சத்திர வீரர் அமெரிக்க லீக்கில் விளையாடமாட்டார்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு தனிப்பட்ட காரணங்களுக்காக அமெரிக்காவின் மேஜர் லீக் கிரிக்கெட்டில் (எம்எல்சி) இருந்து விலகியுள்ளார். ஜூன் மாதம் இந்தியன் பிரீமியர் லீக்கில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸின் உரிமையாளரான டெக்சாஸ் சூப்பர் கிங்ஸுடன் ஒப்பந்தம் செய்தார் அம்பதி ராயுடு. இது பலருக்கும் வியப்பாக இருந்த நிலையில், திடீரென அந்த முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளார் அவர்.  அம்பதி ராயுடு வாபஸ் இந்தியாவில் உள்நாடு மற்றும் பிசிசிஐ ஒப்பந்தங்களில் இருக்கும் … Read more

ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அபார பந்து வீச்சு – 2வது இன்னிங்சில் ஆஸி. 224 ரன்களுக்கு ஆல்-அவுட்

லீட்ஸ், உலகின் மிகவும் பிரபலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து இடையேயான ஆஷஸ் தொடராகும். ஆஸ்திரேலியா – இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 2 போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 263 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 237 ரன்களுக்கு … Read more

தெற்காசிய ஆணழகன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு வீரர்.!

சென்னை, மாலத்தீவில் தெற்காசிய ஆணழகன் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த சரவணன் கலந்துகொண்டார். அவர் இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். தெற்காசிய ஆணழகன் போட்டியில் வென்ற தமிழ்நாடு வீரர் சரவணனுக்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. தினத்தந்தி Related Tags : தெற்காசிய ஆணழகன் போட்டி  South Asian Man Contest 

கடைசி வரை பரபரப்பு… மதுரையை கடைசி பந்தில் வீழ்த்தி குவாலிபையர் சுற்றுக்குள் நுழைந்த நெல்லை…!

சேலம், நடப்பு டிஎன்பிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி, இன்று எலிமினேட்டர் சுற்று நடைபெற்றது. இதில் நெல்லை ராயல் கிங்ஸ் – மதுரை பாந்தர்ஸ் மோதின. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி குவாலிபையர் சுற்றில் திண்டுக்கல் அணியை எதிர்கொள்ளும். இதனிடையே, இன்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் முதலில் பேட்டிங் செய்த நெல்லை ராயல் கிங்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ராஜகோபால் 76 ரன்களும், குருசாமி 50 ரன்களும் குவித்தனர். … Read more

டிஎன்பிஎல் எலிமினேட்டர் சுற்று : மதுரைக்கு 212 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நெல்லை

சேலம், 7வது டிஎன்பிஎல் தொடர் இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் இருந்து லைக்கா கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ் உள்ளிட்ட அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின. இதில் நேற்று இரவு நடைபெற்ற முதல் குவாலிபையர் ஆட்டத்தில் திண்டுக்கல் அணியை வீழ்த்தி கோவை கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. டிராகன்ஸ் அணி குவாலிபையர் 2வது ஆட்டத்துக்கு தகுதி பெற்றது. இந்நிலையில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் … Read more

உலக கோப்பை தகுதி சுற்று இறுதிப் போட்டி : இலங்கை-நெதர்லாந்து அணிகள் நாளை மோதல்

ஹராரே, 13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர் 5-ந் தேதி முதல் நவம்பர் 19-ந் தேதி வரை நடக்கிறது. இதில் 10 நாடுகள் பங்கேற்கின்றன. 8 நாடுகள் நேரடியாக தகுதி பெற்றன. 2 அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதி சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. இலங்கை, நெதர்லாந்து அணிகள் முதல் 2 இடங்களை பிடித்து உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றன. 2 முறை உலக கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதல் … Read more

உலகக்கோப்பையில் ரிஷப் பண்ட் என்ட்ரி…? புதிய அப்டேட் சொல்லும் நிர்வாகிகள்!

டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் (DCA) இயக்குநர்கள் ஷியாம் சர்மா மற்றும் ஹரிஷ் சிங்லா தலைமையிலான குழு இந்திய விக்கெட் கீப்பர், பேட்டர் ரிஷப் பண்டை தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) சந்தித்தது. பண்ட் தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் விபத்தில் இருந்து மீண்டு மறுவாழ்வு பெற்று வருகிறார்.  அவர் தனது சமூக ஊடக பதிவுகள் மூலம் தான் குணமடைந்து வருவதை பற்றி தனது ரசிகர்களை அடிக்கடி அப்டேட் செய்து வருகிறார். அவற்றில் … Read more

பிறந்தநாளை தனது 'செல்லங்களுடன்' கொண்டாடிய தோனி… அவரே பகிர்ந்த வீடியோ இதோ!

MS Dhoni Birthday Celebration Video: உலக கிரிக்கெட்டின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவரான எம்எஸ் தோனி தனது 42வது பிறந்தநாளை நேற்று (ஜூலை 7) கொண்டாடினார். அவருக்கு முன்னாள் மற்றும் தற்போதைய கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் அணிகளில் இருந்து வாழ்த்துகள் குவிந்தன.  இருப்பினும், தோனி தரப்பில் இருந்து நேற்று எவ்வித சமூக வலைதள பதிவும் வெளியிடப்படவில்லை. அந்த வகையில், தற்போது, தோனி தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.  அந்த பதிவில்,”உங்கள் … Read more

வெஸ்ட் இண்டீஸூக்கு எதிராக ரோகிச் சர்மாவுடன் ஓப்பனிங் சுப்மான் கில் இல்லை – டிராவிட் பிளான்

இந்திய அணி ஜூலை 12 முதல் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுடன் ஓப்பனிங் யார் இறங்குவார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் ஒரு திட்டம் இருப்பதாகவும், அதனை இந்த டெஸ்ட் போட்டியில் செயல்படுத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது. சுப்மான் கில் இல்லை ரோஹித் சர்மாவுடன், ஷுப்மான் கில் கடந்த பல போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். … Read more

ஐபிஎல் தொடரில் சரவெடியாக ஆடிய ரிங்கு சிங்குக்கு பதிலாக இவரை ஏன் எடுத்தீங்க – பிசிசிஐ மீது முன்னாள் வீரர் காட்டம்

ஐபிஎல் தொடர் முடிவடைந்தவுடன் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்ற நிலையில், அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாட இருக்கிறது. ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் என மூன்று வடிவிலான தொடர்களிலும் இந்திய அணி விளையாட இருக்கும் நிலையில், அதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு சர்ச்சைகளும் கேள்விகளும் எழுந்துள்ளன. 20 ஓவர் தொடரில் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டு, ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு அந்த அணியில் வாய்ப்பளிக்கப்படவில்லை. … Read more