என்னால் தான் இந்த விஷயம் அணியில் நடந்தது – உண்மையை சொன்ன பும்ரா!

இந்திய அணியின் மூத்த பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா, இந்திய அணியின் கேப்டன்சி பதவி தனக்கு வந்ததாகவும் ஆனால் நான் அதை நிராகரித்தேன் என்றும் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடர் நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன்சி தொடர்பாக பிசிசிஐ தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனால் அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் என்னால் விளையாட முடியாது என்பதால் நான் அதனை நிராகரித்தேன் என்றும் பும்ரா தெரிவித்துள்ளார். இந்திய அணியின் துருப்புச் சீட்டாக பும்ரா இருந்து … Read more

பெர்லின் ஓபன் டென்னிஸ்: நவோமி ஒசாகா அதிர்ச்சி தோல்வி

பெர்லின், மகளிர் மட்டும் பங்கேற்கும் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. தற்போது முதல் சுற்று போட்டிகள் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான நவோமி ஒசாகா (ஜப்பான்), ரஷியாவின் லியுட்மிலா சாம்சோனோவா உடன் மோதினார். இந்த போட்டியின் முதல் செட்டை 6-3 என்ற புள்ளிக்கணக்கில் நவோமி ஒசாகா கைப்பற்றினார். தொடர்ந்து நடைபெற்ற 2வது செட்டை 7-6 (7-3) என்ற புள்ளிக்கணக்கில் … Read more

ED வளையத்தில் நட்சத்திர கிரிக்கெட் வீரர்களான யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன்

Bad News For Indian Cricketers: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களான யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோருக்கு ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து இந்த தொகுப்பில் அறிந்துக்கொள்ளுவோம். யுவராஜ் சிங்கிடம் அமலாக்கத்துறை விசாரிக்கும் ஊடகங்களில் வரும் செய்திகளின்படி, அமலாக்க இயக்குநரகம் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கிடம் விசாரிக்க உள்ளது. இந்தியாவில் தடைசெய்யப்பட்ட பந்தய வலைத்தளங்களுடனான (Betting Websites) விளம்பர தொடர்புகள் காரணமாக யுவராஜ் விசாரிக்கப்படுகிறார்.  முன்னாள் சுழற்பந்து வீச்சாளரிடமும் ED … Read more

கிளப் உலகக் கோப்பை கால்பந்து: செல்சி அணி வெற்றி

அட்லாண்டா, கிளப் அணிகளுக்கான 21-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘நாக்-அவுட்’ சுற்றுக்கு முன்னேறும். நேற்று முன்தினம் 3 லீக் ஆட்டங்கள் நடந்தன. இதில் ‘டி’ பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்தை சேர்ந்த செல்சி அணி 2-0 என்ற கோல் கணக்கில் லாஸ் ஏஞ்சல்ஸ் எப்.சி.யை … Read more

மகளிர் புரோ ஆக்கி லீக்: அர்ஜென்டினாவிடம் வீழ்ந்த இந்தியா

லண்டன், 9 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது பெண்கள் புரோ ஆக்கி லீக் தொடரில் லண்டனில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 1-4 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவிடம் பணிந்தது. இந்த தொடரில் இந்திய அணி தொடர்ச்சியாக சந்தித்த 3-வது தோல்வி இதுவாகும். அர்ஜென்டினா அணியில் அகஸ்டினா கோர்சிலானி 3 கோலும் (40-வது, 54-வது மற்றும் 59-வது நிமிடங்களில்), விக்டோரியா பலாஸ்கோ (29-வது நிமிடம்) ஒரு கோலும் போட்டனர். இந்தியா தரப்பில் தீபிகா (30-வது நிமிடம்) ஆறுதல் … Read more

கோவை அணியை வீழ்த்தி திருச்சி கிராண்ட் சோழாஸ் அசத்தல் வெற்றி

சேலம், டி.என்.பி.எல். தொடரில் சேலத்தில் இன்று நடைபெற்று வரும் 15-வது லீக் ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் – லைகா கோவை கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. மழை காரணமாக தாமதமாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கோவை பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த திருச்சி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வாசீம் அகமது – சுஜய் சிவசங்கரன் களமிறங்கினர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 39 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் … Read more

ராஜ்குமார் அதிரடி.. கோவை அணிக்கு 169 ரன்கள் இலக்கு நிர்ணயித்த திருச்சி

சேலம், டி.என்.பி.எல். தொடரில் சேலத்தில் இன்று நடைபெற்று வரும் 15-வது லீக் ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் – லைகா கோவை கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. மழை காரணமாக தாமதமாக தொடங்கிய் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கோவை பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த திருச்சி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வாசீம் அகமது – சுஜய் சிவசங்கரன் களமிறங்கினர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 39 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் … Read more

சிஎஸ்கே வீரர் வேண்டாம்! கேகேஆர் வீரருக்கு வாய்ப்பு! பாரபட்சம் காட்டும் கவுதம் கம்பீர்?

அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் ஜூன் 20ஆம் தேதி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்காக இந்திய அணி கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த மாதத்தின் தொடக்கம் முதலே அணி வீரர்கள் இங்கிலாந்தில் பயிற்சி பெற்று வருகின்றனர். இங்கிலாந்து A அணிக்கு எதிராக இரண்டு பயிற்சி ஆட்டம் நடைபெற்ற நிலையில்,  இந்திய அணி வீரர்களுக்கு உள்ளேயே ஒரு பயிற்சி ஆட்டமும் நடைபெற்றது. சுப்மான் கில் தலைமையில் … Read more

இனி டெஸ்ட் போட்டிகள் 5 நாள்கள் இல்லை… ஐசிசி எடுத்த அதிரடி முடிவு!

Cricket News In Tamil: 2023-2025 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சி கடந்த ஜூன் 13ஆம் தேதியோடு நிறைவடைந்தது. இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று தென்னாப்பிரிக்கா ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. இன்று முதல் தொடங்கிய 2025-27 WTC சுழற்சி…  அதைத் தொடர்ந்து, தற்போது 2025-27 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியின்ஷிப் சுழற்சி இன்று (ஜூன் 17) முதல் தொடங்கியது. இலங்கையில் நடைபெறும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் … Read more

அவசரமாக லண்டனுக்கு பறந்த சூர்யகுமார் யாதவ்.. என்ன ஆச்சு?

இந்திய அணியின் டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ். இவர் திடீரென அவசர அவசரமாக லண்டனுக்கு சென்றுள்ளார். ஏற்கனவே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இந்திய வீரர்கள் லண்டன் சென்றிருக்கும் நிலையில், தற்போது சூர்யகுமார் யாதவ் லண்டனுக்கு சென்றுள்ளார். இவர் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெறாத நிலையில், லண்டனுக்கு ஏன் சென்றுள்ளார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.  இந்த நிலையில், சூர்யகுமார் யாதவ் லண்டனுக்கு அறுவை சிகிச்சை ஒன்றை மேற்கொள்ள சென்று இருப்பதாக … Read more