லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு: அண்ணா பல்கலை. அதிகாரிகள் 10 பேரை இடைநீக்கம் செய்ய நடவடிக்கை
சென்னை: தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு முறைகேடாக அங்கீகாரம் வழங்கப்பட்டது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் உள்ளிட்ட 10 அதிகாரிகள் விரைவில் இடைநீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநில அரசின் தொழில்நுட்ப பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்று தமிழகத்தில் 470-க்கும் மேற்பட்ட தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. Source link