எம்.பி. சீட்டுக்காக கொள்கையை மாற்றியவர் கமல்: நயினார் நாகேந்திரன் விமர்சனம்

கோவை: ராஜ்யசபா எம்.பி. சீட்டுக்காக கமல் கொள்கையை மாற்றிவிட்டார் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: முதல்வர் ஸ்டாலின் மதுரை சென்றபோது தூர்வாரப்படாத கால்வாயை துணியால் மறைத்துள்ளனர். மாநிலத்தில் என்ன நடக்கிறது என்று முதல்வருக்கே தெரியவில்லை. இதுதான் திராவிட மாடல் அரசு. கட்சி தொடங்கும்போது வாரிசு அரசியல் கூடாது என்ற கமல், ராஜ்யசபா சீட் கொடுத்தவுடன் வாரிசு அரசியல் இருக்கலாம் என்கிறார். எம்.பி. சீட்டுக்காக … Read more

ஆபரேஷன் சிந்தூர் இந்திய வரலாற்றில் திருப்புமுனையாக அடையாளம் காணப்படும்: ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்

சென்னை: பாகிஸ்தான் தீவிரவாதத்தின் பக்கம் நிற்பது என்பது நீண்டகாலமாக தொடர்வதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியுள்ளார். சென்னை சிட்டிசன் கூட்டமைப்பு சார்பில் ‘போர்க்களம் முதல் சாதூர்யம் வரை – ஆப்பரேஷன் சிந்தூர்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கி கருத்தரங்கை தொடங்கி வைத்தார். இதில் துணிச்சல், தேசிய பாதுகாப்பு, தூதரக ரீதியிலான நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: சுதந்திர போராட்டத்துக்கு பிறகு படைகளை அனுப்பி காஷ்மீரை ஆக்கிரமித்தது, அதைத்தொடர்ந்து … Read more

மரபணு திருத்தப்பட்ட விதைகளை டெல்டாவில் அனுமதிப்பது அதிர்ச்சி அளிக்கிறது: பி.ஆர்.பாண்டியன்

மரபணு திருத்தப்பட்ட விதைகளுக்கு, காவிரி டெல்டா பகுதியில் அனுமதி அளிப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தி உள்ளார். தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: மரபணு மாற்று தொழில்நுட்பத்தை அனுமதிக்கக் கூடாது என்று இந்தியா முழுவதும் விவசாயிகள் போராடி வருகின்றனர். இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்தில் மரபணு மாற்ற தொழில்நுட்பத்துக்கு நிரந்தர தடை … Read more

பள்ளி திறப்பை முன்னிட்டு பேருந்து இயக்கத்தின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்: ஓட்டுநர், நடத்துநர்களுக்கு அறிவுறுத்தல்

இன்று கோடைவிடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி பேருந்து இயக்கத்தின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன் விவரம்: பேருந்து இயக்கத்தின்போது கதவை பேருந்து நிறுத்தம் வந்த பிறகு திறக்க வேண்டும். கதவை மூடிய பின் பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும். பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் பேருந்தில் பயணம் செய்தால் பேருந்தை சாலையின் ஓரம் நிறுத்தி மாணவர்களை பேருந்தின் உள்ளே வர கூறி மாணவர்கள் பேருந்தின் உள்ளே வந்த பின் … Read more

இலங்கைக்கு அனுப்பப்படும் தமிழ் அகதிகளின் பாதுகாப்பை உறுதி செய்க: திருமாவளவன் கோரிக்கை

புதுச்சேரி: இலங்கைக்கு அனுப்பப்படும் தமிழ் அகதிகள் பாதுகாப்பாக அவர்களது இல்லத்துக்கு போய்ச்சேர உரிய நடவடிக்கைகளை இந்திய அரசும், தமிழக அரசும் மேற்கொள்ள வேண்டும் என்று திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்பியின் சகோதரர் நடேசன் (92) புதுச்சேரி லாஸ்பேட்டை அவ்வைநகரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலமானார். அவரது உடலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று மாலை அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் திருமாவளவன் … Read more

“அதிமுக, பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால்…” – மதுரையில் ஸ்டாலின் உரையின் 15 அம்சங்கள்

மதுரை: “தமிழகத்தில் அதிமுக, பாஜக கூட்டணி ஆட்சி வந்தால் தமிழகத்தில் மதக்கலவரங்களை உண்டாக்குவார்கள். சாதிக் கலவரங்களை தூண்டுவார்கள். மக்களை அனைத்து வகையிலும் பிளவுபடுத்துவார்கள். நம்முடைய பிள்ளைகளை படிக்கவிட மாட்டார்கள். பிற்போக்குத்தனங்களில் நம்மை மூழ்கடிப்பார்கள்” என்று திமுக பொதுக்குழுவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். மதுரை உத்தங்குடி கலைஞர் திடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதன் முக்கிய அம்சங்கள் “இந்த மண்ணில் சமத்துவம், சுயமரியாதை, சமூக நீதி ஆகியவற்றின் அடிப்படையில் எல்லோருக்கும் எல்லாம் … Read more

‘டாஸ்மாக்’ முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை உறுதி – வானதி சீனிவாசன் தகவல்

கோவை: தமிழகத்தில் ‘டாஸ்மாக்’ மதுபான முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை உறுதி என, வானதி சீனிவாசன் தெரிவித்தார். கோவை மக்கள் சேவை மையம், பிஎஸ்ஜி மருத்துவமனை, வேர்ல்ட் மலையாளி கவுன்சில் இணைந்து நடத்தும் ‘நலம் இலவச மருத்துவ முகாம்’ கோவை மாநகராட்சி 82-வது வார்டு தனியார் திருமண மண்டபத்தில் இன்று (ஜூன் 1) நடந்தது. இதில் பாஜக தேசிய மகளிரணி தலைவர், கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்பு செய்தியாளர்களிடம் அவர் … Read more

மதுரையில் 2-வது நாளாக ரோடு ஷோவில் மக்களை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

மதுரை: மதுரையில் 2வது நாளாக ரோடு ஷோவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள், கட்சியினரை சந்தித்தார். அப்போது, முதல்வருக்கு மக்கள் கைகெடுத்தும், அவருடன் செல்பி எடுத்துக் கொண்டும் மகிழ்ந்தனர். மதுரை அருகே உத்தங்குடியில் திமுகவின் மாநில பொதுக்கூட்டம் இன்று (ஜூன் 1) நடந்தது. இதில் பங்கேற்க தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் நேற்று மதுரை வந்தார். பொதுக்குழுவில் பங்கேற்பதற்கு முன்னதாக நேற்று மாலை மதுரை பெருங்குடி – மதுரை மதுரா கோட்ஸ் மேம்பாலம் வரையிலும் சுமார் 22 கி.மீ … Read more

மன்னாரில் கரை ஒதுங்கிய தமிழக நாட்டுப் படகு: இலங்கை கடற்படையினர் விசாரணை

ராமேசுவரம்: இலங்கையில் உள்ள மன்னாரில் கரை ஒதுங்கிய தமிழகத்தைச் சார்ந்த நாட்டுப் படகை அந்நாட்டு கடற்படையினர் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடல் மார்க்கமாக கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் இந்திய-இலங்கை எல்லை கடலோரப் பகுதிகளில் இரு நாட்டு கடற்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை இலங்கையிலுள்ள மன்னார் கடற்பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த நாட்டுப் படகு ஒன்று கரை ஒதுங்கியிருப்பதாக அந்நாட்டு கடற்படையினருக்கு தகவல் கிடைத்து. மன்னார் கடற்பகுதிக்குச் சென்ற … Read more

அதிமுக துரோகம் இழைத்ததா? தேமுதிக கூட்டணியில் உள்ளது – எடப்பாடி பழனிசாமி விளக்கம்

Edappadi Palanisamy : கோவை விமான நிலையத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக கூட்டணியில் தேமுதிக இருப்பதாக தெரிவித்துள்ளார்.