தூய்மை மிஷனில் இணைந்து செயல்படுவோம்: மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

சென்னை: “யாரோ சுத்தம் செய்கிறார்கள், யாரோ அள்ளுகிறார்கள், யாரோ தரம் பிரிக்கிறார்கள் என்று மானாவாரியாகக் குப்பையை, பிளாஸ்டிக்கை வீசினால், அது மீண்டும் நம்மையே ஏதோ ஒரு வழியில் வந்தடையும். வளர்ந்த நாடுகளுக்கு இணையாக நாமும் தூய்மையான சுற்றுப்புறங்களைப் பெறவேண்டுமென்றால், குப்பைகளைத் தரம் பிரித்து அதற்குரிய இடத்தில் போடும் குறைந்தபட்ச நாகரிகப் பண்பு இன்றியமையாதது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஒரு நகரின் தூய்மை என்பதில் … Read more

மழைக்கு குட் பாய்.. இனி வெயில் கொளுத்த போகுது.. வானிலை மையம் எச்சரிக்கை!

TN weather update: தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வந்த நிலையில், இன்று (ஜூன் 02) முதல் அடுத்த 2 நாட்களுக்கு வெயில் தீவிரமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

‘ஸ்டாலின் சாரே நினைத்தாலும் அந்த சாரை காப்பாற்ற முடியாது’ – எடப்பாடி பழனிசாமி

சென்னை: “ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என்று அவசர, அவசரமாக இந்த வழக்கை முடிக்க திமுக அரசு முனைந்தது ஏன்? SIRஐ காப்பாற்றியது யார் ? இந்த கேள்விகள் கேள்விகளாகவே நீண்ட நாட்கள் இருக்காது. ஸ்டாலின் சாரே நினைத்தாலும், அந்த SIR-ஐ எந்த சாராலும் காப்பாற்ற முடியாது.” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் இன்று காலை தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. அதில் குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை … Read more

‘துணி மறைப்பால் உண்மையை மறைக்க இது பாஜக மாடல் அல்ல’ – பந்தல்குடி சம்பவம் பற்றி ஸ்டாலின் விளக்கம்

சென்னை: “பந்தல்குடி எனுமிடத்தில் என் பார்வைக்குப் படாதபடி கால்வாயைத் துணியைக் கட்டி மறைத்திருக்கிறார்கள் என்று ஊடகங்களில் செய்தி வெளியாக, அது குறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சனக் கருத்துகளும் பதிவான நிலையில், உடனே அதனை அகற்றச் சொன்னேன். அதுமட்டுமல்ல, அந்த இடத்துக்குச் சென்று ஆய்வு செய்தேன். துணி மறைப்பு கட்டி, உண்மை நிலையை உலகத் தலைவர்களின் கண்களிலிருந்து மறைக்கும் பாஜக மாடல் இதுவல்ல, இது திராவிட மாடல்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக கட்சித் தொண்டர்களுக்கு … Read more

“இல்லாத சார்களை உருவாக்கி இழிவான அரசியல் செய்யும் ஒரே சார் பழனிசாமி” – அமைச்சர் ரகுபதி பதிலடி

சென்னை: “இல்லாத சார்களை உருவாக்கி இழிவான அரசியல் செய்யும் ஒரே சார் பழனிசாமி சார்தான்” என்று அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் தொடர்ந்து சந்தேகம் எழுப்பும் அதிமுகவுக்கு பதிலடி கொடுத்துள்ளார் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அண்ணா பல்கலைக்கழகப் பாலியல் வழக்கில் திராவிட மாடல் அரசு எடுத்த உறுதியான நடவடிகைகளால் 5 மாதங்களில் வழக்கு விசாரணை முடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் தீர்ப்பு பெறப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக வழக்கில் 60 நாட்களுக்குள் … Read more

ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை: அண்ணா பல்கலை. வழக்கில் அதிரடி தீர்ப்பு

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.90 ஆயிரம் அபராதமும் விதித்து சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி உத்தரவிட்டுள்ளார். மேலும், ஞானசேகரன் 30 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எவ்வித தண்டனைக் குறைப்புமின்றி ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டுமென்றும், அபராதத் தொகையை பாதிக்கப்பட்ட மாணவிக்கு வழங்கும்படியும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். முன்னதாக, மே 28-ம் தேதியன்று சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைதான … Read more

இந்தியாவில் சமூகநீதி போராளி என்றால் அது அய்யா தான் – அன்புமணி பேச்சு!

கடந்த இரண்டு நாட்களாக சோழிங்கநல்லூரில் நடைபெற்ற கூட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் சந்தித்து அன்புமணி ராமதாஸ் ஆலோசனைகளை வழங்கினார்.

ஏஜி டிஎம்எஸ் உட்பட 3 மெட்ரோ நிலைய நுழைவு வாயிலில் தானியங்கி டிக்கெட் பரிசோதிக்கும் இயந்திரத்தை மாற்ற முடிவு

சென்னை: சென்னையில் இரு வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், மெட்ரோ ரயில் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கிறது. இதன் ஒரு பகுதியாக, நெரிசல் மிகுந்த நேரங்களில் பயணிகள் எளிதாகச் செல்லும் வகையில், மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவு வாயில்களில் தானியங்கி டிக்கெட் பரிசோதிக்கும் இயந்திரங்களை, திறந்த முறையில் செயல்படும் வகையில் மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாத இறுதியில் ஆயிரம் விளக்கு மெட்ரோ ரயில் … Read more

ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 5,000 கனஅடியாக அதிகரிப்பு

தரு​மபுரி / மேட்​டூர்: தரு​மபுரி மாவட்​டம் ஒகேனக்​கல் காவிரி ஆற்​றில் நேற்று முன்​தினம் விநாடிக்கு 3,000 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று மாலை 5,000 கனஅடி​யாக அதி​கரித்​துள்​ளது. கர்​நாட​கா​வில் காவிரி நீர்ப்​பிடிப்​புப் பகு​தி​களில் மழை பெய்​வ​தா​லும், கபினி அணையி​லிருந்து காவிரி​யில் தண்​ணீர் திறக்க வாய்ப்பு உள்​ள​தா​லும் வரும் நாட்​களில் ஒகேனக்​கல்​லுக்கு நீர்​வரத்து அதி​கரிக்க வாய்ப்பு உள்​ள​தாக நீர்​வளத்​துறை அதி​காரி​கள் தெரி​வித்​தனர். மேட்​டூர் அணைக்கு நேற்று முன்​தினம் விநாடிக்கு 2,913 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று 3,017 கனஅடி​யாக … Read more

சென்னையில் நடைபெற்ற நாய்களுக்கான சிறப்பு Walkathan நிகழ்ச்சி!

சென்னையில் பார்வையாளர்களை பரவசப்படுத்திய DOG WALKATHAN நிகழ்ச்சி. வெளிநாட்டு ரக நாய்கள் முதல் உள்ளூர் நாய்கள் வரை பல இனங்கள் கலந்து கொண்டன.