தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: மத்திய அரசுக்கு பழனிசாமி வலியுறுத்தல்
சென்னை: ‘தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர்கதையாக உள்ளது. தங்களின் வாழ்வாதாரத்துக்காக உயிரையும் பணயம் வைத்து மீன்பிடிக்கும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 31 பேரையும், அவர்களது 3 படகுகளையும் நவ.3-ம் தேதி இலங்கை கடற்படையினர் … Read more