கலைஞர் பல்கலைக்கழக மசோதா உட்பட பேரவையில் நிறைவேற்றப்பட்ட 18 மசோதாக்கள் என்னென்ன?

சட்டப்பேரவையில் நேற்று, தாமத வரிக்கான அபராத வட்டி குறைப்பு, கலைஞர் பல்கலைக்கழகம் உருவாக்கம் உள்ளி்ட்ட 18 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாடு கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனம் மற்றும் நீக்குவதற்கான அதிகாரத்தை அரசுக்கு வழங்கும் சட்டத்திருத்த மசோதாவை சட்டப்பேரவையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து, தமிழகத்தில் மின்தூக்கிகள், நகரும் மின் படிக்கட்டுகளுக்கு உரிமம் வழங்கும் முறையை எளிதாக்கி, ஆன்லைனில் வழங்குவதற்கான சட்ட மசோதாவை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிமுகம் செய்தார். அதன்பிறகு, … Read more

“திமுகவினரின் மனங்களில் இருந்து ‘காலனி’ எப்போது அகலும்?” – எல்.முருகன் கேள்வி

சென்னை: “ஆவணங்களில் இருந்து காலனியை நீக்கினால் போதுமா? திமுகவினரின் மனங்களில் இருந்து ‘காலனி’ எப்போது அகலும்?” என்று மத்திய இணை அமைச்சரும், தமிழக பாஜக மூத்த தலைவருமான எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆவணங்களில் இருந்து காலனியை நீக்கினால் போதுமா? திமுகவினரின் மனங்களில் இருந்து ‘காலனி’ எப்போது அகலும்? ஆதிக்கத்தின் அடையாளமாகவும், தீண்டாமையின் குறியீடாகவும், வசை சொல்லாகவும் இருப்பதால் ‘காலனி’ என்ற சொல் இனிமேல் அரசு ஆவணங்களில் இருந்து நீக்கப்படும் என்று … Read more

பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாக கேரள அரசு பிரமாண பத்திரம் தாக்கல்: தமிழக விவசாயிகள் கண்டனம்

குமுளி: முல்லை பெரியாறு அணை பலவீனமாகவும், அச்சுறுத்தலாகவும் உள்ளது, புதிய அணை கட்ட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்த கேரள அரசுக்கு தமிழக விவசாயிகள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது என உச்ச நீதிமன்றம் இரண்டு முறை தீர்ப்பு வழங்கி உள்ளது. ஆனால் இந்த அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரள அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் கேரள … Read more

காவல்துறையின் நீண்டகால கோரிக்கை: மறுக்கும் அரசுக்கு சீமான் கண்டனம்!

காவல்துறையினர் தங்கள் அடிப்படை உரிமைகளைக் கேட்டுப்பெற ஊழியர் சங்கம் அமைப்பதற்கு அனுமதி மறுக்கும் தமிழ்நாடு அரசுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.  

சென்னையில் ஏசி மின்சார ரயில் கால அட்டவணை மே 2 முதல் மாற்றம்!

சென்னை: பயணிகளின் கோரிக்கைகள் அடிப்படையில், சென்னையில் ஏசி மின்சார ரயில் கால அட்டவணை மே 2-ம் தேதி முதல் மாற்றப்பட உள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்: சென்னையில் கடந்த 19-ம் தேதி முதல் , 12 பெட்டிகளுடன் கூடிய ‘ஏசி’மின்சார ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில், சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே இருமார்க்கமாக தலா இரண்டு சேவையும், சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே தலா ஒரு சேவையும் … Read more

தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து குழந்தை உயிரிழப்பு: மதுரை மழலையர் பள்ளிக்கு சீல் வைப்பு

மதுரை: மதுரையில் மழலையர் பள்ளி வளாகத்தில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து 4 வயது குழந்தை உயிரிழந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக பள்ளியின் தாளாளர் உட்பட 7 பேரை போலீஸார் விசாரித்து வருகின்றனர். மதுரை கேகே.நகர் விநாயகா நகர் பகுதியிலுள்ள வீடு ஒன்றில் ஸ்ரீ இளம் மழலையர் பள்ளி (சீடு கிண்டர் கார்டன்) கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பிரிகேஜி, யூகேஜி, எல்கேஜி வகுப்புகளுடன் குழந்தைகளை பகல் நேரங்களில் பராமரிக்கும் மையமும் … Read more

‘நம்பவைத்து ஏமாற்றப்பட்டோம்’ – பகுதிநேர ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் அரசு மீது குற்றச்சாட்டு

விழுப்புரம்: திமுக ஆட்சியின் இந்த கூட்டத்தொடரை உறுதியாக நம்பி இருந்த பகுதிநேர ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர் என தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் தெரிவித்துள்ளது. பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி 2023-ம் ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதி முதல் தொடர்ந்து 10 நாட்கள் போராட்டம் நடத்திய பின்னர் ரூ.2,500 சம்பள உயர்வு மற்றும் மருத்துவ காப்பீடு 10 லட்சம் வழங்கப்படும் என அரசால் அறிவிக்கப்பட்டது. ஆனால் 2024-ம் ஆண்டு சம்பள உயர்வு 2,500 … Read more

“2026-ல் திராவிட மாடல் 2.0” – பேரவையில் முதல்வர் ஸ்டாலின் உறுதி

சென்னை: “இதுவரை பார்த்தது திராவிட மாடல் அரசின் Part-1 தான். 2026-ல் Version 2.0 Loading அதில் இன்னும் சாதனைகளை படைப்போம். தமிழ்நாடு வரலாறு படைக்கும்,” என்று பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சட்டப்பேரவையில் இன்று (ஏப்.29) காவல் மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்து பேசியதாவது: குற்றங்களை குறைக்கும் துறையாக மட்டும் இல்லாமல், குற்றங்களைத் தடுக்கும் துறையாக காவல்துறை செயல்படவேண்டும் என்று நான் தொடர்ந்து சொல்லிக்கொண்டு வருகிறேன். … Read more

திமுக ஆட்சியில்தான் பள்ளிகளில் ஜாதிய வேற்றுமை வந்துள்ளது – தமிழிசை தாக்கு

Tamil Nadu News: திமுக ஆட்சியில் பள்ளி குழந்தைகளிடம் ஜாதிய வேற்றுமை விதைக்கப்பட்டுள்ளது என்றும் தமிழிசை சௌந்தர்ராஜன் பேசி உள்ளார்.

‘குறுவை சாகுபடி குறித்து விவாதிக்க விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூட்டத்தை  நடத்துக’ – ராமதாஸ்

சென்னை: குறுவை பருவ நெல் சாகுபடி குறித்து விவாதிக்க விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூட்டத்தை அரசு நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை பருவ நெல் சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் வழக்கம் போல ஜூன் 12-ஆம் நாள் தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. காவிரி பாசன மாவட்டங்களின் விவசாயிகளிடையே இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள … Read more