சென்னையில் தொடரும் போதை ஊசி மரணங்கள்! தடுமாறும் சென்னை! முழு விவரம்!

சென்னையில் போதை பவுடரை ஊசி மூலமாக செலுத்திக்கொண்ட கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு தான் இதேபோல இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில், தற்போது அடுத்த மரணமும் நிகழ்ந்துள்ளது. சென்னையில் என்ன தான் நடக்கிறது என்பதை விரிவாக காணலாம்.  

மணல் குவாரி விவகாரத்தில் தொடர்புடையோரை பாதுகாக்க தமிழக அரசு முயற்சி: உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை வாதம்

சென்னை: மணல் குவாரி விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களை பாதுகாக்க தமிழக அரசு முயற்சிக்கிறது என்று அமலாக்கத் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது. இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வழக்கை தீர்ப்புக்காக செவ்வாய்க்கிழமைக்கு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் வந்த வருமானத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து சட்டவிரோத பண … Read more

வீட்டுக்குள் புகுந்து 3 வயது குழந்தையை கடித்து குதறிய 3 வெறிநாய்கள்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் வீட்டில் இருந்த மூன்றரை வயது குழந்தையை 3 வெறி நாய்கள் கடித்துக் குதறி உள்ளன. 

“சாக்கடை பிரச்சினையை தாங்க முடியவில்லை” – மதுரை மேயரிடம் குற்றம்சாட்டிய கவுன்சிலர்கள் வாக்குவாதம்

மதுரை: ‘‘சாக்கடை பிரச்சினையை தாங்க முடியவில்லை’’ என்று மதுரை மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் மேயரிடம் நேருக்கு நேராக குற்றம்சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாநகராட்சி கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் திங்கள்கிழமை நடந்தது. ஆணையாளர் லி.மதுபாலன், துணை மேயர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். தீர்மானங்களை மேயர் இந்திராணி வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது 11-வது தீர்மானமாக புதிய குடிநீர் குழாய், பாதாளசாக்கடை இணைப்புக்காக சாலைகளை தோண்டுவதால் சாலை சீரமைப்பு கட்டணம் 5 சதவீதம் உயர்த்தப்படுகிறது என … Read more

2 லட்சம் வட்டிக்கு கொடுத்துவிட்டு 2 கோடி ரூபாய் நிலத்தை அபகரித்த போலீஸ் – கோவை விவசாயி புகார்

கோவையில் பணியாற்றும் காவலர் ஒருவர் வட்டிக்கு 2 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்துவிட்டு 2 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை அபகரித்து விட்டதாக விவசாயி ஒருவர், மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.  

‘நடப்போம் நலம் பெறுவோம்’ – விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கிங் செல்லும் மாடுகள்

விழுப்புரம்: விழுப்புரம் நகரில் மாடுகளால் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர். ஆட்சியர் அலுவலக வளாகத்தையும் விட்டு வைக்காமல் மாடுகள் வலம் வருகின்றன. விழுப்புரம் நகரில் உள்ள பிரதான சாலைகள், குடியிருப்பு சாலைகள் என எல்லா இடங்களில் மாடுகள் கூட்டம் கூட்டமாக சாலையின் நடுவே படுத்து கிடப்பதும், சாலையை கடப்பதும் என பொதுமக்களுக்கு தொடர் தொல்லைகள் கொடுத்து வருகின்றன. இதுதொடர்பாக அண்மையில் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோவில் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் கடந்த நவ. … Read more

மிஸ்டர் அண்ட் மிஸ் தமிழகம் 2023: பட்டத்தை வென்ற வீரர்-வீராங்கனை யார் தெரியுமா?

இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நடத்திய மிஸ்டர் அண்ட் மிஸ் தமிழகம் 2023 போட்டி கோவாவில் நடிப்பெற்றது. 

“சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும்” – முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: “தாமதப்படுத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது சாதிவாரி கணக்கெடுப்பையும் மத்திய அரசு நடத்தவேண்டும். பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு முழுமையாக முறையாக வழங்கப்படவேண்டும். பட்டியலின – பழங்குடியின மக்களுடைய இடஒதுக்கீடும் முறையாக வழங்கப்பட வேண்டும். சிறுபான்மையினர் இடஒதுக்கீடும் முறையாக வழங்கப்படவேண்டும்” என்று வி.பி.சிங் சிலை திறப்பு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ.27) சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் முன்னாள் இந்தியப் பிரதமர் வி.பி. சிங்கின் முழு திருவுருவச்சிலையை திறந்து வைத்து, சென்னை, … Read more

தொடர்மழை எதிரொலி | சென்னையின் முக்கிய ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு

சென்னை: தமிழகத்தில் பெய்துவரும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பெய்த தொடர்மழையின் காரணமாக, சென்னையின் முக்கிய ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் பெய்துவரும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில்,தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இது வரும் 29-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக … Read more

டான்ஸில் கில்லாடிகளா நீங்கள்… ரூ.10 லட்சம் வரை பரிசு – சென்னையில் மாபெரும் நடனத் திருவிழா!

சென்னையில் மாயா யுனிவர்ஸ் நடத்தும் தேசிய அளவிலான GOD – (Greatest Of Dance) நடனப் போட்டி வரும் டிசம்பர் 2,3 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.